தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

மற்றவர்களுடைய வீழ்ச்சியல்ல எமது வாழ்க்கை: கி.மாகாண சபை உறுப்பினர் துரைராசசிங்கம்

சுமந்திரனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு வடமாகாண சபையில் கவலை தெரிவிப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 01:57.47 PM GMT ]
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு வடமாகாணசபையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த செயல் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட செயல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
மாகாணசபையின் 25வது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன் போது மாகாண கட ற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடந்த 21ம் திகதி காணாமல்போனவர்களின் உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுமந்திரனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டமை, மிக வருந்தத்தக்கது என சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனையடுத்து பேசிய மாகாணசபை உறுப்பினர் அன்டனி ஜெயநாதன் குறித்த செயல் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனையடுத்து எழுந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் அனந்தி குறித்த சம்பவத்தின் போது தான் அங்கே இருந்ததாகவும் அதனை எரித்தவர்கள் யார் என உறுதிப்படுத்தப்படவில்லை. என தெரிவித்ததுடன். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த உணர்ச்சிவசப்பட்ட காணாமல்போனவர்களின் உறவினர்களால் இந்த உருவப்பொம்மை எரிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.
மேலும் குறித்த உருவப்பொம்மை திட்டமிட்டு எரிக்கப்படவில்லை எனவும் கூறினார்.
பின்னர் பேசிய மாகாணசபை உறுப்பினர் அன்டனி ஜெயநாதன் குறித்த உருவப்பொம்மை எரிப்பு சம்பவம் திட்டமிட்டு சுமந்திரனின் புகைப்படம் பிரதி எடுக்கப்பட்டு முன்னதாகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என கூறினார்.
பின்னர் பேசிய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறித்த சம்பவத்தை யார் செய்திருந்தாலும் அது மிக பிழையான செயல் என சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt4B.html

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவிடம் அமைக்க வடமாகாண சபை ஆதரவு
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 02:10.09 PM GMT ]
2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அந்தப் பகுதியில் நினைவிடம் அமைப்பதற்கு வடமாகாண சபை முழுமையான ஒத்துழைப்பினை வழங்கும் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற மாகாண சபையின் 25வது அமர்வில் குறித்த நினைவிடம் அமைப்பது தொடர்பிலான வாய்மொழிமூல வினாவினை மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முன்மொழிந்திருந்தார்.
இதன்போது பதிலளித்த முதலமைச்சர், நினைவிடத்தை அமைப்பதற்கான நிதி போதுமானளவு மாகாண சபையிடம் இல்லை எனவும், அதனால் மக்கள் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் நிதி பெறலாம் என ஆலோசனை வழங்குமாறும் கூறினார்.
மேலும் சட்டச் சிக்கல்கள் இருப்பின் அது குறித்தும் பார்க்கலாம் என்றார்.
இதனையடுத்து பேசிய அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாகாண சபைகள் சட்டத்தின் படி நினைவிடம் அமைப்பதற்கு அனுமதி பெறவேண்டும்.
எனவே அதற்கான அனுமதி கோரும் கடிதத்தை உள்ளுராட்சி அமைச்சருக்கு அனுப்பி வையுங்கள் என கூறினார்.
அதனை ஒத்துக்கொண்ட மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை கடிதத்தை உள்ளுராட்சி அமைச்சரான முதலமைச்சருக்கு அனுப்பி வைக்க இணங்கியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt4C.html


மற்றவர்களுடைய வீழ்ச்சியல்ல எமது வாழ்க்கை: கி.மாகாண சபை உறுப்பினர் துரைராசசிங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 02:19.39 PM GMT ]
போராட்டம் என்ற சொல்லைத் தவிர்ப்போம். அதற்கு வேறு சொல்லைப் பாவிப்போம். ஏனென்றால் போராட்டம் என்பது இன்னொருவருடைய வீழ்ச்சியை எதிர்பார்த்து இருக்கின்ற விடயம் என தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களுடைய வீழ்ச்சியல்ல எமது வாழ்க்கை. அவர்கள் எமது நியாயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும் அந்த நியாயத்தை புலப்படுத்துகின்ற செயற்பாடாக எம்முடைய செயற்பாடு அமைய வேண்டும்.
எனவே எங்களுடைய செயற்பாடுகளெல்லாம் நீதியால் உழைப்பு என்று அழைக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt4D.html

Geen opmerkingen:

Een reactie posten