தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் பாலியல் பலாத்காரங்கள்! விசாரணை செய்யும் அரசு



தமிழன் என்பதை உலகிற்கு அடையாளப்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள்: சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 12:01.12 PM GMT ]
அரசியலைப் பொறுத்தவரையில் எங்களை தமிழன் என்று அடையாளப்படுத்தியவர் தந்தை செல்வா என்பதை மறந்து விடக் கூடாது என சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தந்தை செல்வா அவர்கள் கூறிய விடயத்தை நான் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.
உங்களுக்கு ஒரு அடையாளத்தைத் தந்தேன். ஒரு மொழியைத் தந்தேன். ஒரு கலையைத் தந்தேன். நான் தமிழன் என்ற அடையாளமே அது என கூறியிருந்தார்.
நாம் ஒன்றை மட்டும் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தந்தை செல்வா அவர்கள் தந்த அடையாளத்தை உலக ரீதியாக அடையாளப்படுத்தியது தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதை நாம் மறக்கக் கூடாது என்றார்.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt3E.html


இராணுவம் இராணுவத்தின் வேலையைச் செய்ய வேண்டும்: மனோ கணேசன்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 08:58.07 AM GMT ]
இராணுவத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படாத, சுவீகரிக்கப்படாத நிலங்கள் அனைத்தும் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமேன தெளிவாக முடிவெடுக்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்திலே வடக்கிலும் கிழக்கிலும் பெருந்தொகையான நிலம் அரசாங்கத்தாலே கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவம் தொழிலாளியாக, விவசாயியாக, மீனவனாக நிலத்தையும் மண்ணையும் கடலையும் அபகரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
அவை விடுவிக்கப்பட்டு, இராணுவம் இராணுவத்தின் வேலையைச் செய்ய வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஜெனீவா தீர்மானம் மெய் நிலையும் அரசியலும் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt2A.html

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் பாலியல் பலாத்காரங்கள்! விசாரணை செய்யும் அரசு
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 10:05.29 AM GMT ] [ பி.பி.சி ]
அவுஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாங்கள் விசாரித்து வருவதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது.
அவ்வகையில் சிறார்கள் மீதான பலாத்காரங்கள் உட்பட நாற்பது சம்பவங்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த மாதம் வெளியான சுயதீனமான அறிக்கையொன்றிலேயே, தடுப்பு முகாம்களில் சிறார்கள் உட்பட பலர் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகியிருப்பது குறித்த பல செய்திகள் வெளியாயின.
புலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நவ்ரூ தீவிலுள்ள தடுப்பு முகாம் ஒன்றில், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக 16 வயது பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் மாடியிலிருந்து கீழே விழுந்த நிலையில், இப்போது மருத்துவமனையில் உள்ளார்.
இதேவேளை தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt2J.html


Geen opmerkingen:

Een reactie posten