[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 12:29.59 PM GMT ]
இலங்கை சமுத்திர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்களுக்கு 2012 ஜூன் மாதம் 27 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த 195 துப்பாக்கிகள் மாயமாகியுள்ளன.
குறித்த நிறுவனங்கள் இலங்கையின் கறுப்பு பட்டியலில் சேர்க்க முயற்சிக்கப்பட்ட போது சுமார் மூன்று மாதங்களில் 181 துப்பாக்கிகள் எகிப்து உட்பட 30 நாடுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 14 துப்பாக்கிகளுக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த துப்பாக்கிகள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிகள் இலங்கையின் பெயருக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த துப்பாக்கிகள் மூலம் உலக தலைவர்களோ அல்லது முக்கிய நபர்களோ கொல்லப்பட்டால், அதற்கான பொறுப்பு இலங்கை மீது சுமத்தப்படும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஆயுதங்கள் மாயமானதாக கூறப்படும் காலத்தில் இலங்கையில் 24 தனியார் சமுத்திர பாதுகாப்பு நிறுவனங்கள் இயங்கியுள்ளன.
ராஜபக்ச அரசின் திருடர்களுக்கு தண்டனை வழங்கக் கோரி ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 12:50.34 PM GMT ]
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, பிரசார செயலாளர் விஜித ஹேரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து வெளியிட்ட விஜித ஹேரத்,
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதன் காரணமாகவே ராஜபக்ச குடும்பம் மற்றும் அவர்களின் சகாக்களின் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டது.
இந்த குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளது.
இதனால், ஜே.வி.பி தேசிய நிறைவேற்றுச் சபையிலும் இவ்வாறு வீதியில் இறங்கியும் ராஜபக்ச ஆட்சியில் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான உடனடியாக சட்டத்தை அமுல்படுத்துமாறு அழுத்தங்களை கொடுக்கும்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் திருடர்களுக்கு தண்டனை வழங்கப்படும் வரை இந்த போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnvzI.html
Geen opmerkingen:
Een reactie posten