[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 12:57.55 PM GMT ]
கடந்த காலங்களில் இந்த நாட்டில் ஒரு ஊடக மாநாடு நடத்த முடியாது. ஒரு பொதுக்கூட்டம் நடத்த முடியாது. ஒரு ஜனநாயக ஆர்ப்பாட்டம் நடத்த முடியாது. ஒரு அரசியல் ஊர்வலம் நடத்த முடியாது.
இன்று எவரும் கூட்டம், ஊடக மாநாடு, ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று ஜனநாயக வரம்பு அனுமதித்த எதையும் செய்யலாம். அங்கு அரசியல் பேசி மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என பிரகடனம் செய்யலாம். அவற்றை செய்ய முழுமையான உரிமைகள் இன்று உள்ளன.
நாம் இன்று ஏற்படுத்தியுள்ள நல்லாட்சி சூழலின் வெளிப்பாடுத்தான் இதுவாகும். அதன் இன்னொரு வெளிபாடாகத்தான் இன்று கொழும்பு மாநகரசபையில் இந்த இந்து விழா நடக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையில் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர் கே. ரீ. குருசாமியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, மாநகரசபையின் 150வது நிறைவுக்கான இந்து சமய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்து கலாச்சார அமைச்சர் சுவாமிநாதன், மாநகர முதல்வர் முசம்மில் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்ட நிகழ்வில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
கொழும்பு நாகரசபை என்பது ஒரு அரசியல் நிறுவனம். மக்கள் ஆணையை பெற்ற மக்கள் பிரதிநிதிகளின் சபை இதுவாகும். ஒரு காலத்தில் கொழும்பு மாநகரசபையில் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடமில்லை.
இங்கே அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்றது. அந்த காலம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதியுடன் அது முடிந்து விட்டது.
உண்மையில் இந்த வருடம் ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதியன்றுதான் இந்த மாநகரசபை மீண்டும் உருவாகியுள்ளது என்று நான் சொல்வேன். இதைதான் நமது முதல்வர் சமீபத்தில் சொன்னார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த நல்லாட்சி சூழலை எவரும் எமக்கு தங்கத்தட்டில் வைத்து தரவில்லை. நாம் இடையில் அல்லது இறுதியில் வந்தவர்கள் அல்ல. நாம் பத்து ஆண்டு காலம் போராடி பட்ட கஷ்டத்தின் பயனைத்தான் இன்று முழு நாடும் அனுபவிக்கின்றது.
இதற்காக நாம் பல்லாண்டுகளாக பாடுபட்டு உழைத்துள்ளோம். நாடு முழுக்க ஓடோடி பணியாற்றியுள்ளோம். ஏச்சு, பேச்சு, கல்லடி, துப்பாக்கி குண்டு ஆகியவற்றை கண்டுள்ளோம். இன்றைய நல்லாட்சியை நாம் விலை கொடுத்துதான் பெற்றோம். அதை மறந்துவிடாதீர்கள்.
இன்று இந்த நாட்டில் உருவாகியுள்ள இந்த நல்லாட்சி சூழலின் விளைவுகள் படிப்படியாகத்தான் வரும். அதற்குள் இந்த சூழலை கெடுக்க சிலர் முயல்கிறார்கள். ஆட்சியில் இருந்து போனவரை மீண்டும் கொண்டு வர முயல்கிறார்கள்.
எவருக்கும் இந்த நாட்டில் அரசியல் செய்ய உரிமை உண்டு. ஆட்சிக்கு வர முயற்சி செய்ய உரிமை உண்டு. ஆனால், அதற்கு இனவாதத்தை பயன்படுத்த எவருக்கும் இடம் கொடுக்க முடியாது.
சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவரையும், பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதத்தவரையும் ஒருவருக்கொருவர் எதிராக தூண்டிவிட்டு தம் சொந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள எவருக்கும் இடமில்லை. இங்கு எவரும் இனவாதம் பேச முடியாது. அதை அனுமதிக்க முடியாது.
இன்று நாம் ஒருவிதத்தில் தேசிய அரசு ஒன்றை நடத்துகின்றோம். நமது ஜனாதிபதி ஒரு கட்சி. பிரதமர் இன்னொரு கட்சி. நாம் வேறொரு கட்சி. இன்னும் பல கட்சிகள் இணைந்துள்ளன.
ஆகவே இது ஒரு தேசிய அரசு. இது வேண்டாம் என்று எவரும் முடிவு எடுத்தால் அதற்கும் முகங்கொடுக்க நாம் தயார். எல்லாவற்றையும் கலைத்துவிட்டு நாம் புதிய தேர்தலுக்கு செல்வோம்.
நமது கொழும்பிலே தேர்தலுக்கு நாம் எப்போதோ தயார். பெருந்தொகையான வாக்குகளுடன் வெற்றி பெறுவோம் என்பதை நான் இந்த கொழும்பு மாநகரசபை கட்டிடத்தில் இருந்து அறிவிக்கின்றேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt3H.html
தமிழர்கள் ஒன்றுபடும் காலம் நெருங்கிவிட்டது: நல்லை ஆதீன முதல்வர்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 01:24.14 PM GMT ]
ஒன்றுபடுதலையே நாங்களும் விரும்பகிறோம். ஒன்றுபடுதலில் ஊடாக எங்களின் அனைத்து விடயங்களையும் வேண்டிக் கொள்ள முடியும் என்பதை கூறிக் கொள்கிறேன் என கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் புத்தக வெளியீட்டின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி- சிறப்புற நடைபெற்ற ஜெனீவா தீர்மானமும் மெய்ந்நிலை அரசியலும்!
இலங்கையில் உள்ளவர்களிடம் தமிழர்கள் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது? -குற்றவாளியும் நீதிபதியும் ஒருவனாக இருக்க முடியுமா? - மன்னார் ஆயர்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 01:33.20 PM GMT ]
இன்றைய தினம் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
மார்ச் மாதம் வெளிடவேண்டிய இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கையினை பிற்போட்டிருக்கின்றார்கள். குறித்த அறிக்கை மூலம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குங்கள் எனக் கேட்டும் அந்த அறிக்கை பிற்போடப்பட்டதன் ஊடாக தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை எமக்கு சர்வதேசம் புலப்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாமல் அந்த அறிக்கையினை மேலும் தாமதப்படுத்துவதற்கும் முயற்சிக்கப்படுகின்றது.
இந்நிலையிலேயே தமிழர்களுக்கான நீதியை கோரி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம். இலங்கை கூறிய உள்ளக விசாரணை என்ற பேச்சினை சர்வதேசம் நம்பியருக்கின்றது. ஆனால் அதனை நாம் ஒத்துக்கொள்ள முடியாது.
இலங்கையில் உள்ளவர்களே தமிழர்களுக்கு அநீதி புரிந்தார்கள். அவர்களிடமே சென்று நாங்கள் எப்படி நீதி கேட்க முடியும்? குற்றவாளியும் நீதிபதியும் ஒருவனாக இருக்க முடியுமா?
பாரபட்சமற்ற வகையில் சர்வதேசம் குறிப்பாக ஐ.நா விசாரணை நடத்துவதன் ஊடாகவே தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களின்படி 1லட்சத்து 46ஆயிரத்து 879மக்கள் இறுதிப்போரில் குறிப்பாக 8மாதங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தப் படுகொலைகள் சூட்டுத்தவிர்ப்பு வலயங்களிலும், சூனிய வலயங்களிலுமே இடம்பெற்றிருக்கின்றன.
மக்கள், விடுதலைப் புலிகளை எதிர்த்து விடுதலைப் புலிகளிடமிருந்து வெளியே வந்துவிடவேண்டும், அப்போது தாம் யுத்தத்தை வென்றுவிடலாம் என்ற நோக்கத்திற்காகவே இந்தப் படுகொலைகளை செய்தார்கள். மக்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்தார்கள்.
சூட்டு தவிர்ப்பு வலயங்கள் என அடையாளப்படுத்தி, அங்கிருந்து வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை வெளியேற்றிவிட்டு ஒக்டோபர் மாதத்தில் மீண்டும் மீண்டும் அவ்வாறான சூட்டுத்தவிர்ப்பு வலயங்களையும், சூனிய வலயங்களையும் உருவாக்கி மக்களை அதனுள் கொண்டுவந்ததன் பின்னர் சாட்சியங்களே இல்லாமல் கொன்று குவித்தார்கள்.
இவ்வாறான நிலையில் தற்போதுள்ள அரசாங்கத்தின், நல்லவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளும் நல்லவர்களும் நீதியை நிலைநாட்டாமல் அமைதியாக இருந்தார்கள் என்பதே உண்மையாகும்.
எனவேதான் நாங்கள் கேட்கிறோம், உள்நாட்டு விசாரணையில் துளியேனும் எமக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் சர்வதேச விசாரணையினையே எதிர்பாரத்திருக்கின்றோம் என்றார்.
- யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் அமைதிப் பேரணியில் அலையெனத் திரண்ட மக்கள்! சிங்கள மாணவர்களும் பங்கேற்பு
- யாழ். பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் ஐ.நா. அலுவலகம் முற்றுகை!
- எம் இன நீதிக்காய் ஓரணி திரண்ட ஈழ மக்களுக்கு…
- இலங்கையில் உள்ளவர்களிடம் தமிழர்கள் நீதியை எவ்வாறு எதிர்பார்ப்பது? -குற்றவாளியும் நீதிபதியும் ஒருவனாக இருக்க முடியுமா? - மன்னார் ஆயர்
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt4A.html
Geen opmerkingen:
Een reactie posten