தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

லண்டனில் எரிக்கப்பட்டார்கள் சம்பந்தன்,சுமந்திரன்.

சி.ஐ.டி எனக்கூறி அப்பாவி நபரை தாக்கிய மர்ம நபர்கள்: உடையார்கட்டில் சம்பவம்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 04:10.37 PM GMT ]
உடையார்கட்டு சுதந்திரபுரம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை, தாம் சி.ஐ.டி எனக்கூறி சிலர் அழைத்துச் சென்று தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் 4.30 மணியளவில் விலங்கிட்டு உடையார்கட்டு குளப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த முச்சக்கரவண்டி சாரதி, கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் “இச்சம்பவம் தொடர்பாக எவரிடமும் தெரிவிக்கக் கூடாது” என கைத்துப்பாக்கி முனையில் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார்.
கை, மற்றும் கால் பகுதிகளில் கடுமையாக காயமடைந்த குறித்த நபர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக ஆட்சிப்பீடமேறிய அரசு இலங்கையில் நல்லாட்சி ஏற்படுத்தப்படும் என மார்தட்டி வருகின்ற நேரத்தில் ஏற்பட்ட இச்சம்பவமானது அங்குள்ள மக்களை பீதியடைய வைத்துள்ளது.


லண்டனில் எரிக்கப்பட்டார்கள் சம்பந்தன்,சுமந்திரன்.
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 07:16.50 PM GMT ]
பிரித்தானியாவில் அமைந்துள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் புகைப்படங்களை தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt5C.html

Geen opmerkingen:

Een reactie posten