அரசியல் கட்சியொன்றுக்கு தலைமை தாங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லே சீலரட்ன தேரரின் தலைமையிலான ஜனசெத்த பெரமுன என்னும் கட்சி இந்த அழைப்பினை விடுத்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பத்தரமுல்லே சீலரட்ன தேரர் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் தலைமைப் பொறுப்பினை முன்னாள் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கத் தயார்.
முன்னாள் ஜனாதிபதியை சுற்றியிருக்கும் தரப்பினர் புதிய கட்சியொன்றை அமைக்குமாறு அவருக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
மஹிந்த ராஜபக்சு இப்போதாவது, மதி நுட்பமான தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது.
புதிய அரசியல் கட்சி அமைக்கும் யோசனை மதிநுட்பமானதல்ல.
மனப்பூர்வமாக கட்சியின் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்கத் தயார்.
கட்சியன் ட்ரக்டர் சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராக போட்டியிட முடியும் என சீலரட்ன தேரர் நேற்று தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv2A.html
Geen opmerkingen:
Een reactie posten