தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

சுமந்திரன் "மண்டைக் காய்" அவர் உருவ பொம்மையை யார் எரித்தது: புகையும் யாழ் மாகாணசபை !

சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சாட்சியமளித்தவர் வாகன விபத்தில் உயிரிழப்பு !

[ Feb 25, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 21415 ]

தடுப்புக் காவலில் இருந்தபோது சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான சூரியவெவ பொலிஸ் நிலையத்தின் ஆறு உத்தியோகத்தர்களையும் அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, இந்த சம்பவம் குறித்து சாட்சியமளித்த ஒருவர் நேற்று அதிகாலை வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இது உண்மையாகவே ஒரு விபத்தா ? இல்லை திட்டமிடப்பட்ட விபத்தா என்று தெரியாத நிலை காணப்படுகிறது. முக்கிய சாட்சி இப்படி ஒரு இக்கட்டான சூழ் நிலையில் எவ்வாறு இறந்தார் என்பது பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
கைதுசெய்யப்பட்டிருந்த 6 பொலிஸ் உத்தியோகத்தர்களும், ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். லியனாராச்சிகே சமந்த என்ற 35 வயதான சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 சட்டவிரோத மதுபான போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், கடந்த 19 ஆம் திகதி விஹாரகல பகுதியில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். ஆயினும், சுகவீனம் காரணமாக கைதுசெய்யப்பட்ட தினத்திற்கு மறுநாள் சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 22 ஆம் திகதி பிற்பகல் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். சமந்த மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக உறவினர்களும், பிரதேச மக்களும் குற்றஞ்சாட்டினார்கள். தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்டமுடியும் என தெரிவித்த நபர், இந்த சம்பவம் குறித்து நேற்று முன் தினம் இரவு ,பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், மூவருடன் சென்றே வாக்குமூலம் அளித்திருந்த இந்த நபர் நேற்று அதிகாலை(செவ்வாய்) மூன்று மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, சூரியவெவ, ஹத்பஹ சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தார்.
இந்த நபர் உட்பட மூவர் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது வேன் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தின் மூலம் சாட்சியாளர் ஒருவர் உயிரிழந்தமையால், இந்த மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ள போதிலும், இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ஆனால் கைதுசெய்யப்பட்ட வேனின் சாரதியான பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார். இவர் ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் பின்னர் அவரை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
http://www.athirvu.com/newsdetail/2398.html

சுமந்திரன் "மண்டைக் காய்" அவர் உருவ பொம்மையை யார் எரித்தது: புகையும் யாழ் மாகாணசபை !

[ Feb 25, 2015 05:41:34 AM | வாசித்தோர் : 10660 ]
சுமந்திரனின் கொடும்பாவி எரித்த விடயம் தொடர்பாக வடக்கு மாகணசபையிலும் நேற்று புகைச்சல் கிளம்பியது. வடக்கு மாகாணசபை அமர்வு காலை இடம்பெற்றது. இந்த அமர்வு காலை தொடங்கிய போது யாழ் பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கு மாகாணசபை இரு மணித்தியாலங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் இடம்பெற்ற அமர்வில், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் டெனிஸ்வரன் சுமந்திரனின் கொடும்பாவி எரிக்கப்பட்ட விடயத்திற்காக வேதனைப்படுவதாகவும் இதில் கூட்டமைப்பு உறுப்பினர்களும் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம் எனவும் கவலையைத் தெரிவித்தார்.
இதன் போது திடீரென எழுந்த அனந்தி ,அந்தக் கொடும்பாவி எரிக்கப்பட்ட விடயம் அங்கு கூடி நின்ற காணமல் போன, போரால் பாதிக்கப்பட்ட மக்களாலேயே நிகழ்த்தப்பட்டது எனவும் அங்கு நின்ற மக்கள் மிகவும் ஆவேசமாக நின்றே இக் கொடும்பாவியை எரித்ததாகவும் தன்னால் அந்த மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டதாகவும் தெரிவித்தார். அனந்தி இவ்வாறு தெரிவித்துக் கொண்டிருந்த போது பிரதி அவைத்தலைவராக இருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர், சுமந்திரன் "பெரிய மண்டைக்காய்" எனவும் சுமந்திரனின் கொடும்பாவி எரிப்பு மிகவும் திட்டமிட்ட செயல் எனவும், படையினரால் காணாமல் போனவர்களையும் போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் காரணம் காட்டி இக் கொடும்பாவியை எரித்தவர்கள் புலிகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி என்ன சொல்கின்றார்கள் ? என ஆவேசமாக ஆனந்தியைப் பார்த்து கத்தினார்.
இந் நிலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டு மாகாணசபை உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவிக்க முற்பட்ட போது அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவையை அடக்கி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதே நேரம் வடக்கு மாகாணசபையில் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட புகைச்சலை எதிர்க்கட்சியினர் வேடிக்கைப் பார்த்து சிரித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள்.
http://www.athirvu.com/newsdetail/2399.html

Geen opmerkingen:

Een reactie posten