[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 12:35.03 AM GMT ]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கின் வாதம் நேற்று காலை தொடங்கியது.
இந்த வாதத்தின் போது நீதிபதி, ஜெயலலிதா வங்கிக் கணக்கிலிருந்து மற்றவர்களுக்கு பணப்பரிவர்த்தனை நடந்ததற்கு ஆதாரம் உள்ளதா என்றும், எந்தெந்த தேதியில் எவ்வளவு பண பரிவர்த்தனை நடந்தது என்பதற்கு விளக்கம் தாருங்கள் என்ற பவானி சி்ங்கிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், சசிகலா உள்பட 3 பேர் ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவா? என்றும் வினா எழுப்பினார்.
நீதிபதி குமாரசாமியின் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார்.
அவன்ட் கார்ட் உரிமையாளரை நீதியமைச்சரே வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்: ஜே.வி.பி குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 01:51.25 AM GMT ]
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
அவர் வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொள்வதற்கு கடவுச்சீட்டை மீள பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், பிரதமரின் ஆலோசகர் திலக் மாரப்பனவுமே தலையீடு செய்திருந்தனர்.
இது குறித்து நிறைவேற்றுப் பேரவையில் கேள்வி எழுப்பிய போது, அந்த விடயம் உண்மையானது என ஒப்புக்கொள்ளப்பட்டது.
அவன்ட் கார்ட் நிறுவன உரிமையாளரின் கடவுச்சீட்டு தடை செய்யப்பட்ருந்த போது அது எவ்வாறு மீள அளிக்கப்பட்டது என்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவிடாமல் எவரேனும் தடுத்தால் அதனை நாட்டிற்கு அம்பலப்படுத்துவோம்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க இடமளிக்கப்பட முடியாது.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் மிகவும் இழிவான முறையில் பேசுகின்றனர்.
பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் சில வேளைகளில் நாடாளுமன்றிற்கு வந்து பார்வையிடுகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் சபாநாயகர் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகின்றார்.
எனவே இம்முறை நாடாளுமன்றிற்கு தகுதியானவர்களை மட்டும் மக்கள் அனுப்பி வைக்க வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க தெரரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் லண்டன் வருகையை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 01:52.16 AM GMT ]
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜபக்சவுடன் அண்மைக்காலம் வரை இன அழிப்பில் இணைந்திருந்த இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகிற மாதம் 7 ம் திகதியளவில் லண்டன் வர உள்ளதாக அறிய வந்துள்ளது. இதற்கு பாரிய எதிர்ப்பை காட்டி அவரை வெளியேற்றும் போராட்டம் ஒன்றை செய்ய தீர்மானித்துள்ளோம்.
இலங்கை அரசாங்கத்தின் வெளி முகங்கள் மாறி இருந்தாலும் உட்கட்டமைப்புக்கள் எதுவும் மாறவில்லை. 100 நாள் செயல் திட்டத்தில் தமிழர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் அடக்கப்படவில்லை.
வட கிழக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்படவில்லை. தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் திருப்பி வழங்கப்படவில்லை.
நீண்டகாலமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் நீதி விசாரணையின்றி சிறைகளில் வாடுகின்றார்கள்.
சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட தம் உறவுகளை தேடியலையும் பெற்றோர் மற்றும் வாழ்க்கைத் துணைவர்களுக்கு அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற செய்தியைக் கூட புதிய அரசினால் சொல்ல முடியவில்லை.
ஆனால் இதுவரை இருந்த அரசாங்கம் மாதிரியே இந்த அரசாங்கமும் சர்வதேசத்தில் தாங்கள் தமிழருக்கு நன்மை செய்கிறோம், தமிழர்கள் தங்களை ஏற்று கொண்டுவிட்டார்கள் என்று பொய் பிரசாரங்கள் செய்து வருகின்றது.
புதிய அரசாங்கம் என்பதாலும் புதிய அரசாங்கத்தின் வெளியுறவு கொள்கை தமக்குச் சாதகமாகவிருப்பதாலும் சர்வதேசம் இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளது.
தொடர்ச்சியான இன அழிப்புக்குள்ளாகியுள்ள தமிழினத்தைப் பாதுகாப்பதை விட புதிய அரசினைப் பாதுகாப்பதென்பதே மேற்குலகின் முன்னுரிமையாகவுள்ளது.
மென்போக்கான முகத்தைக் காட்டி தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் சிறிசேன அரசின் பாணி மிகவும் ஆபத்தானது.
இந்த நிலையில் நாம் எம் மக்களுக்கான நீதி முடக்கப்படுவதையும சர்வதேச நீதி விசாரணையை இழுத்தடித்து உள்ளக விசாரணையாக இலங்கை அரசின் பொறுப்பில் விட்டு இறுதியில் முற்றாக கைவிடப்படும் சதி திட்டத்தை புதிய ஆட்சியாளர்கள் அரங்கேற்றுவதை அம்பலப்படுத்த வேண்டும்.
அண்மைய காலங்களில் தாயக மக்கள் தங்கள் அவலங்களை வெளிப்படையாக ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் வடிவில் தெரிவிக்க தொடங்கி உள்ளார்கள். அவர்களுக்கு நாம் உறுதுணையாக நின்று போராடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக மாற வேண்டும்.
இனப் படுகொலை செய்தது மகிந்த மட்டும் தான் என்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்தும் இந்த மைத்திரிபால சிறிசேன தான் இனப்படுகொலை உச்சமாக நடந்த வேளையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர்.
இவரது அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து இவரது அரசில் அங்கம் வகிக்கும் சரத் பொன்சேகா தான் போர் நடந்த காலத்தில் இராணுவ தளபதியாக இருந்தவார். இவர்களும் இனப்படுகொலையாளிகளே.
இனப்படுகொலை விசாரணையை பிற்போட வைத்தவர்களுக்கு நாம் எமது பெரிய எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். நாம் காட்டும் எதிர்ப்பு ஆட்சி மாற்றமோ அல்லது ஆள் மாற்றமோ நீதி விசாரணையை சர்வதேசம் கை விடக் கூடாதெனும் செய்தியை தெளிவாகப் புரிய வைக்க வேண்டும்
என குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnu4D.html
Geen opmerkingen:
Een reactie posten