ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஓர் இனவாதி என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இனவாத பிரச்சாரங்களில் ஹக்கீம் ஈடுபடக் கூடாது.
ரவூப் ஹக்கீம் உண்மையில் மஹிந்தவின் பாசறையைச் சேர்ந்தவர். அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கவில்லை.
எனினும் நாம் அவருக்கு நகர அபிவிருத்தி மற்றும் நீர்விநியோக அமைச்சுப் பதவியை வழங்கியுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதனை அனுமதிக்க முடியாது என்று ஹக்கீமே தெரிவித்தார்.
தற்போதைய முதலமைச்சர் இசட்.ஏ. நசீர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாகாண சபையில் அங்கம் வகித்த போதிலும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
30 ஆண்டுகள் யுத்தம் காரணமாக பாதிப்புக்களை எதிர்நோக்கினோம். எவரும் அந்த இருண்ட யுகத்திற்கு செல்ல விரும்புவார்கள் என நான் நினைக்கவில்லை.
எனவே ரவூப் ஹக்கீம் இனவாத பிரச்சாரங்களை கைவிட வேண்டும் என தயா கமகே கோரியுள்ளதாக கொழும்பு செய்தி வெளியிட்டுள்ளது.
தயா கமகே கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten