தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 februari 2015

தென்னாபிரிக்காவில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இல்லை: புலனாய்வுத்துறை

யாழில் உயர் பொலிஸ் அதிகாரி உட்பட இரண்டு அதிகாரிகள் கைது- யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 09:28.56 AM GMT ]
யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரியொருவர் உள்ளிட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பிலான தகவல்களை மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதிரனலாகே விமலசேன மற்றும் அல்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருணா ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல்களை மறைத்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று குறித்த இருவரையும் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சில காலங்களுக்கு முன்னர் பிரபல வர்த்தகர் ஒருவரின் படுகொலை தொடர்பிலான தகவல்களை இந்த அதிகாரிகள் இருவரும் மறைத்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிரபல கோடீஸ்வர வர்த்தகரான பியகம விலேஜ் ஹோட்டல் உரிமையாளர் பேர்னாட் ஜயரட்ன வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்
யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வீரசிங்க பத்திரணலாகே விமலசேன, எல்பிட்டி பிராந்திய பொலிஸ் பரிசோதகர் ஆனந்த ராஜகருண ஆகியோரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பூகொட நீதவான் இந்திகா காலிங்கவங்ச இன்று உத்தரவிட்டுள்ளார்.
பியமக விலேஜ் உரிமையாளர் கொலை வழக்கு தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் எனக் காட்டுவதற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கிளைமோர் குண்டு மற்றும் கைக்குண்டு என்பன மட்டக்களப்பு அதிரடிப்படை முகாமுக்குரியது எனவும் வீரசிங்க பத்திரணலாகே விமலசேன, அந்த முகாமில் அத்தியட்சகராக பணியாற்றியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கொலையுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை மறைத்து பொய் சாட்சியங்களை உருவாக்குவதற்காக வேறு ஒரு இளைஞரின் வீட்டுக்கு அருகில் இந்த வெடிப் பொருட்கள் புதைக்கப்பட்டுள்ளன.
அந்த இளைஞரை குற்றவாளியாக கட்டுவதற்காக பொலிஸ் அத்தியட்சகர், பியகம விலேஜ் உரிமையாளரின் மகனுக்கு பொலிஸ் அத்தியட்சகர் இந்த வெடிப்பொருட்களை கொடுத்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர்.
ஆபத்தான ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv5F.html

வடக்கில் சிங்கள மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துமாறு ஹெல உறுமய கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 09:38.12 AM GMT ]
வடக்கில் சிங்கள மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துமாறு ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேல் மாகாணசபை உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு வேண்டுகோளினை முன்வைத்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் காணி உரிமைகள் குறித்து மாத்திரமே பேசுகின்றார்கள். சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இழந்த காணிகளின் உரிமைகள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv5G.html

மகிந்த இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவோம்: இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானம்
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 10:08.04 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு வராவிட்டால் தாமும் அரசியலில் இருந்து விலக போவதாக .இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு மீண்டும் அழைத்து வரப்பட வேண்டும் என்ற யோசனை பிரதேச சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் அதில் 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக இரத்தினபுரி பிரதேச சபையின் தலைவர் சுதத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் சம்பந்தமாக இரத்தினபுரி மாவட்டத்தின் ஏனைய பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்கு விளக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv5I.html

தென்னாபிரிக்காவில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இல்லை: புலனாய்வுத்துறை
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 10:51.51 AM GMT ]
இலங்கையில் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் தென்னாபிரிக்காவில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாமை நடத்தியதாக கூறப்படும் இரகசிய ஆவணமொன்றை மேற்கோள் காட்டி அல் ஜெசிரா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளை சேர்ந்த புலம் பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
எனினும் இதை முற்றாக மறுத்துள்ள தென்னாபிரிக்கா புலனாய்வு பிரிவினர், அவ்வாறான முகாம் எதுவும் தென்னாபிரிக்காவின் எந்தப் பகுதியிலும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv6A.html

Geen opmerkingen:

Een reactie posten