தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

ஸ்கைப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை

வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்த விமல்: விசாரணைகளை முடக்கிவிட்ட குற்றபுலனாய்வு திணைக்களம்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 07:00.47 AM GMT ]
விமல் வீரவன்ஸ, இராஜதந்திர கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி பெறுமதியான இரத்தினகற்களை திருட்டு வழியில் வெளிநாட்டுக்கு கொண்டு சென்று, நாடு திரும்பும் போது ஹெரோயின் போன்ற பெறுமதியான போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளதாக கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை கொண்டு வீரவன்ஸ பெரும் சொத்துக்களை சேர்த்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, விமலசிறி கம்லத் என்ற பெயரில் ஹிரு பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில் அந்த பத்திரிகை விநியோகத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த காலத்தில் வசதிகள் எதுவுமின்றி இருந்த வீரவன்ஸ, ஹிரு பத்திரிகை அலுவலகத்திலேயே தங்கியிருந்தார். இந்த நிலையில், தற்போது 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் சட்டவிரோதமான நடவடிக்கைகள் மூலமே அவர் இவ்வாறு சொத்துக்களை சேர்த்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
பல்வேறு மோசடிகள் மூலம் வருமானத்திற்கு மேல் சொத்துக்களை சேர்ந்தமை தொடர்பில் வீரவன்சவுக்கு எதிராக பல்வேறு மூலங்களில் இருந்து தகவல்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஸ்கைப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 07:05.46 AM GMT ]
ஸ்கைப் தொழில்நுட்ப தொடர்பு சாதனத்தில் பெண்கள் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது புத்திசாலித்தனமாக செயற்பட்டால், இணையத்தளங்கள் வழியாக நடக்கும் குற்றங்களை குறைக்க முடியும் என சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பொலிஸ் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் லங்கா ராஜினி தெரிவித்துள்ளார்.
எந்த விதமான அச்சுறுத்தலோ, அழுத்தங்களுக்கோ அடிபணிந்து ஸ்கைப் போன்ற ஊடகங்கள் வழியான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாகாமல் இருப்பதில் வயது வந்த பெண்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
18 வயதுக்கும் குறைவான பிள்ளைகள் இப்படியான இணைய வழி ஊடகங்களை பயன்படுத்துவது குறித்து வயது வந்தோர் தமது கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் ராஜினி கூறியுள்ளார்.
இலங்கை தற்போது தொழில்நுட்ப ரீதியில் முன்னேறி வருகிறது. இதன் போது பெண்களும் சிறுப்பிள்ளைகளும் தமது உளப்பாங்கை முன்னேற்றக்கொள்ள வேண்டியது அவசியம்.
பெண்கள் தமது மனப்போக்கில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டால், ஸ்கைப் போன்ற இணைய வழி ஊடகங்கள் மூலம் ஏற்படும் குற்றச் செயல்களை குறைக்க முடியும் எனவும் லங்கா ராஜினி மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnuyA.html

Geen opmerkingen:

Een reactie posten