தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

குற்றவாளியே நீதிபதிகள்: மன்னார் ஆயர்

மைத்திரியின் அரசாங்கமும் ஜனநாயக விரோத செயலில்

இந்தியாவுடன் செய்துக் கொண்ட உடன்படிக்கை உள்ளிட்ட எந்த உடன்படிக்கைகளும் மக்களுக்குவெளிப்படுத்தப்படவில்லை. அத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலங்கள் எவற்றையும் குறைந்த பட்சம் அரசாங்க இணைத்தளத்திலேனும் பிரசுரிக்கவில்லை. இந்த விடயத்தில் இவ்வாறு இரகசியம் பேணுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பொன்சேகா மகிந்தவுக்கு கையூட்டல்….?

2005ம் ஆண்டு ஜனாபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தாம் மகிந்தராஜபக்ஷவுக்கு தேர்தல் செலவுகளுக்காக 6,00,000 ரூபாவை வழங்கியதாக சரத் பொன்சேகா ஊடகம் ஒன்றிடம் ஒப்பு கொண்டிருந்தார். இந்த காலப்பகுதியில் இரண்டாம் நிலை கட்டளைத் தளதிபாக இருந்த அவர், தேர்தலின் பின்னர் இராணுவ கட்டளைத் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டார். இதற்காகவே அவர் கையூட்டலை வழங்கியதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.


குற்றவாளியே நீதிபதிகள்: மன்னார் ஆயர்

வன்னிப் போரின்போது அரசாங்கம் யுத்த சூனியப் பிரதேசங்களுக்குள் மக்களை செல்லுமாறு அறிவித்தது. இந்த அறிவிப்பை நம்பி தங்கள் உயிரைப் பாதுகாக்கச் சென்ற மக்கள் மீது இராணுவம் தாக்குதலை நடத்தியது. அரசு அறிவித்த யுத்த சூனியப் பிரதேசத்துக்குள் அவர்களே மூன்று தடவைகள் தாக்குதலை நடத்தினர். இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் ஒரு இலட்சத்து 46 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இன்று வரை இதற்கு நீதி கிடைக்கவில்லை.

யுத்தத்தின்போது மனித உரிமைகளை இலங்கை இராணுவம் மீறியது. யுத்த சூனிய வலயங்களை அறிவித்து அதற்குள் புலிகள் இருக்கின்றனர் எனக் கூறி மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இது எதற்காக என்றால் புலிகளை மக்கள் வெறுக்கவும், தாங்கள் இந்த மீறல்களை செய்யவில்லை புலிகளே செய்தனர் என சர்வதேசத்திடம் கூறித் தப்பவுமே.


யுத்தத்துக்குக் கட்டளையிட்ட போர்க் குற்றவாளியான மஹிந்த ராஜபக்‌ஷவே போர் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் குறித்து விசாரணை செய்ய குழு ஒன்றை நியமித்தார். குற்றவாளியே நீதிபதியாக இருக்கும் நிலைதான் இது. இவர்களிடம் இருந்து எமது மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்புவது. புதிய அரசாங்கத்தை மக்கள் நம்புகின்றனர். ஆனால் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து விசாரணை விடயத்தில் புதிய அரசாங்கத்தில் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. இந்நிலையிலேயே தமிழ் மக்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இறுதி அறிக்கையில் தமக்கு நீதி கிடைக்கும் என நம்பினர். ஆனால் இந்த அறிக்கை மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டமை தமிழருக்கு ஏமாற்றமே. தாமதிக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த அறிக்கையை உடன் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என அவர் மேலும் கூறினார்.jaffna us 11Mannar-bishop
http://www.jvpnews.com/srilanka/98575.html

Geen opmerkingen:

Een reactie posten