தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

சஷி வீரவன்சவின் பைல்கள் மாயம்! (படம் இணைப்பு)

வீரவன்ச மனைவி வைத்தியசாலையில்
முன்னாள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் சசி வீரவன்ச சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாலம்பே பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சசி வீரவன்ச சிகிச்சை பெற்று வந்தார்.

சசி வீரவன்சவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

சசி வீரவன்சவிற்கு மேலதிக சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து சிறைச்சாலை பிரதம வைத்திய அதிகாரியின் பரிந்துரைகளை பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டதாக சசி வீரவன்சவிற்கு எதிராக கடுவெல நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சசி வீரவன்ச இரண்டு தேசிய அடையாள அட்டைகள் இரண்டு கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அவற்றில் பிறந்த திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
24 Feb 2015
சஷி வீரவன்சவின் பைல்கள் மாயம்! (படம் இணைப்பு)
போலிக் கடவுச் சீட்டு பெற்றுக் கொள்வதற்காக போலி ஆவணங்களை சமா்ப்பித்த குற்றச் சாட்டில் கைது செய்யப் பட்டிருக்கும் சஷி வீரவன்சவினால் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட தகவல்கள் அடங்கிய கோப்புகள் (பைல்கள்) காணாமல் போயிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளா் அஜித் ரோஹண தொிவித்துள்ளாா்.

சஷி வீரவன்சவின் போலி கடவுச் சீட்டு தொடா்பான செய்திகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னா் ஊடகங்களில் வெளியானது. அப்போதே நடவடிக்கை எடுக்காத பொலிஸாா் காலம் கடந்து விசாரணையை ஆரம்பித்து விட்டு இப்போது பைல்கள் காணாமல் போயிருப்பதாக சொல்வது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
24 Feb 2015

Geen opmerkingen:

Een reactie posten