தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

லண்டன் விமான நிலையத்தில், ஆபத்தில் முன்னாள் போராளி! (படம் இணைப்பு)


இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதி ஒருவர் லண்டன் "Heathrow" விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 27 வயது நிரம்பிய முன்னாள் போராளி தடுத்துவைக்கப்பட்டுள்ளார். இவரை இலங்கைக்கு நாடுகடத்தப்போவதாக இன்று பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலே குறிப்பிடப்பட்ட நபர் "எயிற்றர்" எனப்படும் முத்த போராளியின் மகனாவர். இவருடைய குடும்பம் இலங்கை இராணுவத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவரின் மூன்று உடன்பிறப்புகள் முள்ளிவாய்காலில் இராணுவச் சுற்றிவளைப்பிற்குள் காணாமற் போயுள்ளனர். இது தவிர இவரின் தாயார் சுகையினம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த வேளை 2006ம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் கொல்லப்பட்டார். தந்தையாரான நவரத்னராசா (எயிற்றர்) அவர்கள் முள்ளிவாய்காலில் சைனைட் அருந்தி வீரச்சாவடைந்தார்.

உயர்ச்சி என்றழைக்கப்பட்டு வவுனியா யோசெப் முகாம், பூசா முகாம், ஆறாம் மாடி மற்றும் CRP எனப்படும் விசாரணைப்பிரிவு (கொழும்பு) போன்ற சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.�

வதைமுகாம்களில் அவர் அனுபவித்த சித்திரவதைகளாலும், குடும்ப உறுப்பினர்களின் தொடர்ச்சியான இழப்புக்களாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் மனநிலை பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்துள்ளார்.

தொடர்ந்தும் இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டு பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வந்தார். இதன் காரணமாக அங்கிருந்து தப்பித்து, எப்படியோ பிரித்தானியா சென்றடைந்த அவர் தனது முதலாவது நேர்முகத்தேர்வை (Interview) "Home Office"க்கு வழங்கிய பின்னர் இரண்டாவது நேர்முகத்தேர்வுக்காக அங்கு சென்ற வேளை, அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

24 Feb 2015

Geen opmerkingen:

Een reactie posten