தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 februari 2015

மீள் குடியேற்றம் சம்பந்தமாக முக்கிய கலந்துரையாடல்! - மீள்குடியேற்றம் குறித்து ஆராய விசேடகுழு நியமிப்பு

ஊடக நிறுவனங்களை ஆரம்பிக்க முதலீடுகள் கிடைத்த விதம் தொடர்பாக ஆராய விசேட குழு
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 06:19.02 AM GMT ]
முன்னைய ராஜபக்ச அரசாங்கத்தில் ஊடக நிறுவனங்கள் சில ஆரம்பிப்பதற்கு எப்படி பணம் முதலீடு செய்யப்பட்டது என்பது தொடர்பாக ஆராய விசேட விசாரணை குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய “லீடர்”, “ரண்திவ” போன்ற பத்திரிகை நிறுவனம், “வீ எப் எம்”, “சத் எப் எம்” போன்ற வானொலி நிறுவனங்கள் மற்றும் சீ.எஸ்.என் தொலைகாட்சி, ரிவிர பத்திரிகை போன்ற ஊடக நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு முதலீடு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பாக ஆராய விசேட விசாரணை குழு ஆரம்பிக்கப்படவுள்ளது.
பல்வேறு கடத்தல்கள் மூலம் பணம் ஈட்டிய கடத்தல்காரர்கள் கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றிக்கொள்வதற்கு அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அரசாங்க கேள்வி விலை மனு கோரல்களை பெற்றுக்கொள்வதற்காக ஊடக நிறுவனங்களில் கால்வைத்ததாக அரசாங்கத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவர முயற்சிப்பது முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகள்: அனுர குமார
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 06:49.50 AM GMT ]
முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகள் சிலருக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவருவதற்கு அவசியமிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரவித்துள்ளார்.
நேற்று குருணாகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மீண்டும் ஒருமுறை ராஜபக்சவின் தேசியவாதத்தை வீணடிக்கும் கூட்டத்திற்கு நாட்டை ஒப்படைத்தால் முழு நாடும் நாசமடைந்துவிடுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் முதுகெலும்பில்லாத சிலர் மகிந்த ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டுவருவதன் மூலம் தேசியவாதத்தினை தூண்டுவதற்கு முயற்சிக்கின்றனர்.
மேலும் தங்களது அரசியல் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக இவ்வாறு தேசியவாதத்தை தூண்ட முயற்சிக்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



மீள் குடியேற்றம் சம்பந்தமாக முக்கிய கலந்துரையாடல்! - மீள்குடியேற்றம் குறித்து ஆராய விசேடகுழு நியமிப்பு
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 06:41.24 AM GMT ]
வலி.வடக்குப் பகுதியில் படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று காலை ஆளுநர் செயலகத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
வலி வடக்குப் பகுதியில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், காணிகளை தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரிவரும் நிலையில் அந்த நிலங்களில் இருந்து, இராணுவத்தினரின் பாவனையில் இல்லாத நிலங்களை விடுவிப்பது தொடர்பில் நேரில் ஆராயும் முகமாக இன்று காலை குடாநாட்டுக்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், யாழில் உள்ள வடமாகாண ஆளுநரின் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் பளிஹக்காரவுடன் முக்கிய சந்திப்பு ஒன்றை நடாத்தினார்.
யாழ்.குடாநாட்டின் வலி.வடக்கு பகுதியில் உள்ள உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் சுமார் 9ஆயிரம் குடும்பங்களுக்குச் சொந்தமான 6ஆயிரத்து 534 ஏக்கர் காணி படையினர் வசம் உள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் மற்றும் இராணுவ, கடற்படை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில் தீர்மானித்த  தீர்மானத்துக்கமைய  மீண்டும் மீள்குடியேற்ற அமைச்சர், வடமாகாண முதலமைச்சர், வடமாகாண ஆளுநர், மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கிடையில் மற்றுமோர் விசேட கலந்துரையாடல் ஆளுநரின் செயலகத்தில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகினறது.
மீள்குடியேற்றம் குறித்து ஆராய விசேடக்குழு நியமிப்பு
வடக்கில் மீள்குடியேற்றம் மற்றும் விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மக்களை மீள்குடியேற்றப்படுவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் பலியக்காரஇ அரச அதிபர்கள், பாதுகாப்பு தரப்பின் பிரதானிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விடுவிக்கப்பட்ட ஆயிரம் நிலத்தை உரிமையாளர்களிடம் வழங்குது குறித்து ஆராய்ந்து அறிக்கை அறிக்கை வழங்குவதற்காக விசேட குழுவொன்றை நியமிக்கவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அதிகாரசபையின் தலைவர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஆயிரம் நிலத்தை உண்மையான உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆராய்வது இந்த குழுவின் முக்கிய பணியாகும்.
இதனடிப்படையில் இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை தயாரித்து வழங்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv4A.html

Geen opmerkingen:

Een reactie posten