தமிழ் வர்த்தகர் கொள்வனவு செய்த விமானம் சஜின் வாஸுக்கு சொந்தமானது எப்படி !
[ Feb 27, 2015 01:55:37 PM | வாசித்தோர் : 10455 ]
முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவிற்கு சொந்தமான கொஸ்மொஸ் லங்கா நிறுவனத்தில் பொருட்கள் ஏற்றிச் செல்லும் பதிவு செய்யப்படாத விமானம் ஒன்று இருப்பதாக தெரியவந்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. போயிங் 727 வர்க்கத்திற்குரிய இந்த விமானம் 2000ம் ஆண்டில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அதனை இலங்கைக்கு கொண்டு வந்தவர் தமிழ் வர்த்தகரான மெதன் என்பவராவார். ஆரம்பத்தில் ஏரோ லங்கா என்ற பெயரில் யாழ் - இரத்மலான சேவையில் குறித்த விமானத்தை மெதன் ஈடுபடுத்தி வந்துள்ளார்.
களவு வழியில் இந்த விமானம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விமானம் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒன்றல்ல. மெதன் மீது 2010ம் ஆண்டு புலிகளுக்கு உதவியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பின் சஜின்வாஸ் அந்த விமானத்தை கைப்பற்றியுள்ளார். பின் அதனை நீலம், வௌ்ளை, சிவப்பு என வர்ணமடித்து விமானம் காகோ லங்கா என பெரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த விமானம் கட்டுநாயக்கவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் நிறுத்தி வைப்பதற்கான கட்டணமும் செலுத்தப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/2411.html2010ல் ஆபிரிக்காவில் பயிற்ச்சி முகாம் நடத்திய புலிகள் !
[ Feb 27, 2015 01:45:46 PM | வாசித்தோர் : 21100 ]
2009ல் யுத்தம் முடிவிற்கு வந்து ஒரு வருடத்திற்கு பின்னர் மே 2010 இல் , விடுதலைப்புலிகள் தென்னாபிரிக்காவில் பயிற்சி முகாமொன்றை நடத்தினார்களா என இலங்கை அரசாங்கம் தென்னாபிரிக்க புவனாய்வு பிரிவினரிடம் விளக்க கோரியமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து விடுதலைப்புலி உறுப்பினர்கள் அந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டதாக இலங்கை புலனாய்வுத்துறை வட்டாரங்கள் அறிந்துள்ளதாக கூறப்படுகிறது. குறித்த இச்செய்து அதிர்வின் சிறப்பு புலனாய்வு நிருபரால் தற்போது பெறப்பட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள தென்னாபிரிக்க புலனாய்வு பிரிவினர் ,தங்களால் இந்த தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை, 1998 லிருந்து இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அல் ஜசீராவிற்கு வழங்கப்பட்டுள்ள உலக நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் இரகசிய தகவல்கள் அடங்கிய ஆவணங்களில் இந்த விடயமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் குற்றச்சாட்டை அவ்வேளை முற்றுமுழுதாக நிராகரித்துள்ள தென்னாபிரிக்கா தமிழ் கலாச்சார மையம். அவ்வப்போது தென்னாபிக்க தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சில போராட்டங்களையே நடத்தி வந்தார்கள் என்று கூறியுள்ளது.
எனினும் இவ்வாறான தமிழ் அமைப்புகளுக்கும் ஏனைய நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் இயக்கம் உட்பட்ட அமைப்புகளுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளன. எனினும் இந்த தொடர்புகள் எவ்வாறானவை மற்றும் எவ்வகையான ஒத்துழைப்புகள் வழங்கப்படுகின்றன போன்ற விடயங்கள் தெளிவில்லாமலுள்ளது என தென்னாபிரிக்க புலனாய்வு பிரிவினர் அவ்வேளை பதிலளித்துள்ளார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2410.html
Geen opmerkingen:
Een reactie posten