[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 02:30.49 PM GMT ]
அட்டாளைச்சேனை – 2 ஆம் பிரிவியைச் சேர்ந்த சேகு இஸ்மாயில் அப்துல் றஹீம் (வயது42) என்ற நபரே காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில் பொலிஸாருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரும் காணாமல் போன நபரின் குடும்ப உறவினர்களுடன் இணைந்து பொத்துவில் தகரம்பல மற்றும் உடும்பங்குளம் காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இத்தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து இரண்டு நாற்களாக மேற்கொள்ளப்பட்டபோது இன்று மாலை பொத்துவில் தகரம்பல உடும்பங்குள காட்டு மலைப் பகுதியில் உயிருடன் மீட்கப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns7F.html
பொங்குதமிழராய் ஒன்றிணைவோம்: யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் மக்கள் போராட்டத்துக்கு நா.க.த.அரசும் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பும் ஆதரவு!
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 03:25.01 PM GMT ]
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்நாளில் (24-02-2015) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு இனப்படுகொலையாளிகளை பாரட்படுத்துமாறு ஐ.நா சபையினைக் கோரும் ஒரு மில்லியன் ஒப்பங்களை பெறும் கையெழுத்துப் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குவதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழினப் படுகொலைக்கு பரிகார நீதி கோரும் செயற்பாட்டில், தாயக தேசமும் புலம்பெயர் சமூகமும் தமிழகமும் கூட்டாக பயணிக்கின்றது என்பதனை உலகிற்கு பறைசாற்றுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சின் அறிக்கையின் முழுவிபரம்.
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிட வலியுறுத்தி, யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் 24-02-2015 அன்று 'பொங்கு தமிழராய் ஒன்றிணைவோம் என அறைகூவலுடன் ஏற்பாடாகியுள்ள நீதிக்கான போராட்டத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை தெரிவித்துக் கொள்கின்றது.
பொங்கு தமிழராய் ஒன்றிணைவோம் ஈழவிடுதலைப் போராட்ட தடத்தில் மக்கள் எழுச்சியின் குறியீடாக 'பொங்குதமிழ் உள்ளது.
இற்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் உள்ளான தமிழீழத் தாயக மக்கள் , தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் தங்களின் அரசியல் பெருவிருப்பினை, யாழ் பல்கலைக்கழக முன்றலில் பொங்குதமிழ் எழுச்சியாக பொங்கியெழுந்திருந்தனர்.
அன்று, தமிழர் தாயகத்தில் பெருக்கெடுத்த மக்கள் எழுச்சி, நாடுகளைக் கடந்து வாழும் ஈழத்தமிழர் தேசங்களெங்கும் எழுச்சிப் பெருக்கெடுத்திருந்தது.
இன்று, பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்காவின் அடக்குமுறைக்குள் நின்றவாறு அனைத்துலக சமூகத்தின் செவிப்பறைகளை உரக்கத்தட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்போராட்டம் தமிழர் தேசத்தின் மனச்சாட்சியின் குரலாக உரக்க ஒலிக்கட்டும்.
அனைத்துலக விசாரணையினால் ஏற்படப்போகும் அபாயங்களில் இருந்து சிங்கள தேசம் தன்னுடைய நலன்களை பாதுகாகத்துக் கொள்வதற்காக, ஆட்சிமாற்றம் எனும் புதிய ஒப்பனையுடன், தமிழினஅழிப்பின் இரத்தம் தோய்ந்த முகத்தினை அனைத்துலக அரங்கில் மூடிமறைத்து வருகின்றது.
தமிழர் தேசத்தின் மீதும் தமிழினத்தின் மீது சிங்களமயமாக்கல் பௌத்தமயமாக்கல் இராணுமயமாக்கல் என தனது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பினை இற்றைவரை சிறிலங்கா அரச இயந்திரம் மேற்கொண்டு வருகின்றது.
1983ம் கறுப்பு யூலை இனக்கலவரம் தொடர்பில் விசாரணை நடத்தி தண்டைனை வழங்கப்படும் என ஐ.நாவுக்கு கொடுத்த வாக்குறுதி முதற்கொண்டு இற்றைவரை அனைத்துலக சமூகத்தினை பல்வேறு வடிவங்களில் சிறிலங்கா அரசு ஏமாற்றியும் நாடகமாடியும் வருகின்றது.
இதனொரு அங்கமாக சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கையினை மையப்படுத்தி அனைத்துலக விசாரணையினை இல்லாதொழிக்கின்ற தந்திரோபாயங்களில் ஒன்றாக உள்ளக விசாரணை குறித்து சிறிலங்கா பேசிவருகின்றது.
இத்தருணத்தில் சிங்களத்தின் இத்தந்திரோபாயங்களை அம்பலப்படுத்தும் வகையில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் ஏற்பாடாகியுள்ள நீதிக்கான போராட்டம் முக்கியமானதொன்றாக அமைகின்றது.
சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கையினை ஐ.நா மனித உரிமைச்சபை ஒத்திவைத்துள்ளமையானது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மார்ச் மாத ஐ.நா மனித உரிமைச்சபை அமர்வில் வாய்மூல அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைச்சபை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இன்நாளில் (24-02-2015) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு இனப்படுகொலையாளிகளை பாரப்படுத்துமாறு ஐ.நாசபையினைக் கோரும் ஒருமில்லியன் ஒப்பங்களை பெறும் கையெழுத்துப் போராட்டம் ஒன்றினையும் தொடங்குகின்றது.
இவைகள் தமிழினப்படுகொலைக்கு பரிகார நீதி கோரும் செயற்பாட்டில், தாயக தேசமும் புலம்பெயர் சமூகமும், தமிழகமும் கூட்டாக பயணிக்கின்றது என்பதனை உலகிற்கு பறைசாற்றுகின்றன.
இவ்வாறு அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் நாமும் ஒன்றாக இணைந்து வலியுறுத்துவோம்! - பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு
இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விசாரணை அறிக்கையை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் நாளை நடைபெறவிருக்கும் நீதிக்கான போராட்டத்துக்கு பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு ஆதரவு வழங்கும் முகமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அவ் அறிக்கையில்,
இலங்கையில் சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் எதிர் பார்த்தவாறும் திட்டமிட்டபடியும் இலங்கை சம்மந்தப்பட்ட ONHRC விசாரணை அறிக்கை சமர்பிப்பதை UNHRC வரும் புரட்டாதி 2015 ல் சமர்பிப்பதற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் எமது தாயகத்தில் வாழுகின்ற எமது சகோதர சகோதரிகள் கோபமும் விரக்தியும் அடைந்துள்ள நிலையில் இவ் முடிவை எதிர்த்து இந்த அறிக்கை முற்கூட்டியே வரவிருந்த பங்குனி 2015 ல் வெளியிடுமாறு UNHRC க்கு வேண்டு கோள் விடுகின்றனர். இவர்களுடன் தமிழ் இளைய சமுதாயமாகிய நாமும் இணைந்து நிற்கின்றோம்.
இது போன்ற முடிவுகள் எமது தாயகமாகிய ஈழத்துக்கு ஆச்சர்யத்தை கொடுக்க போவதில்லை என்றாலும், தாயகத்திலே படுகின்ற எமது உறவுகளின் அவலம் அரசியலாக்கப்பட்டுவிட்டதை நினைக்கும் போது தாயகத்திலே வாழுகின்ற எமது உறவுகளுக்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற எமக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் ,கோபத்தையும் அத்துடன் விரக்தியையும் கொடுக்கின்றது.
ஒவ்வொரு வருடமும் இலங்கை பற்றி UN முடிவுகளை எடுக்க தான் செய்கின்றது. ஆனாலும் அவ் முடிவுகள் மனித உரிமை மீறல்கள் - இனஅழிப்பை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டவை அல்ல. வேறு அனைத்துலக அமைப்புக்களும் அத்துடன் தாயகத்திலே வாழுகின்ற எமது மக்களும் இலங்கை மேற்கொண்ட இனஅழிப்பை பற்றி விசாரணை நடத்து மாறு கேட்டு கொண்டு தான் உள்ளன.
ஈழத் தாயகம் எப்போதுமே இனஅழிப்பு விசாரணைக்கு பின் நின்றதில்லை. இது வடமாகாணசபை ஒரு மனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தில் இருந்து தெட்டத் தெளிவாக விளங்குகின்றது. வடமாகாண சபை ஒரு கோரிக்கையை விடுத்திருந்தது. அதாவது இலங்கை 1948, பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து ஒவ்வொரு இலங்கை அரசாங்கம் நடத்திய இனஅழிப்பை பற்றி உண்மையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று. முதல் அமைச்சர் அவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் OISL க்கு இனஅழிப்பை விசாரிக்குமாறும் வலியுறுத்தினார். தமிழ் மக்கள் சார்பில் இது போன்ற ஒரு வலுவான அமைப்பு அழைப்பு விடுத்த போதிலும் UNHRC அறிக்கையை ஒத்தி வைக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளது. எனவே, மீண்டும் ஒரு முறை சர்வதேசம் தமிழர்களை காப்பதில் அக்கறை கொள்வதில்லை என்பதை நிரூபித்திருகின்றது.
தாயகத்திலே வாழுகின்ற எமது சகோதர சகோதரிகள் (யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஒன்றியம்/பேராசிரியர்கள் சங்கம் அத்துடன் எமது தாயக மக்கள்) இந்த முடிவை வலிமையாக கண்டித்து இதற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். ஆகவே, தமிழ் இனத்தின் இளைய சமுதாயத்தின் பிரதிநிதிகளாகவும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பாகிய நாம் எமது ஆணித்தரமான ஆதரவை கொடுத்து எமது உறவுகளுடன் இணைத்து நிற்போமாக!
நாமும் எமது சகோதர சகோதரிகளும் இணைந்து UN இடம் OISL அறிக்கையை எந்தவித தாமதமும் இன்றி, முற்கூட்டியே வரவிருந்த பங்குனி 2015 இல் வெளியிடுமாறும் அத்துடன் தொடர்ந்து 1948 இல் இருந்து இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்பட்ட /நடை பெற்று கொண்டிருக்கும் இனஅழிப்பை பற்றி விசாரணை நடத்துமாறும் வேண்டு கோள் விடுகின்றோம்.
மேலும், தமிழ் இளையோர் அமைப்பாகிய நாம் வலியுறுத்துவது:
1) இலங்கை அரசினால் நடத்தப்பட்டு கொண்டிருக்கும் இனஅழிப்பை தடுத்து நிறுத்துமாறும், அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் எமது தாயகமாகிய ஈழத்தை காக்குமாறும் சர்வதேச சமூகத்திடம் வேண்டி நிற்கின்றோம்.
2) அனைத்துலகத்தின் மேற்பார்வையில் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களிடையிலும் புலம்பெயர்ந்த மக்களிடையிலும் பொது வாக்கெடுப்பு நடத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்
நாம் தொடர்ந்து ஜன நாயக முறையில் ஈழம் என்ற எமது தாயகத்தின் உரிமைக்காகவும், தாயகத்திலே நடக்கின்ற இன அழிப்பை தடுத்து நிறுத்துவதற்காகவும், தமிழ் ஈழத்தின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடுவோம்.
என பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns7G.html
Geen opmerkingen:
Een reactie posten