தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

சுதந்திரக் கட்சியின் 65 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள ஆர்வம்!- லக்ஸ்மன் கிரியல்ல

ஐ நா. உயர் மட்ட பிரதிநிதி இலங்கை வருகை: அதிகாரிகளை சந்திப்பார்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 07:45.12 AM GMT ]
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன்ட் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத் தகவலை ஐ. நா செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் டுஜாரிக் தெரிவித்துள்ளார். ஜெப்ரி பெல்ட்மன்ட் தனது இலங்கை விஜயத்தின் போது உயர்மட்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இது ஜெப்ரி பெல்ட்மன்ட்டின் முதலாவது இலங்கை விஜயம் ஆகும்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnuyG.html

திஸ்ஸவிற்கு வழங்கிய தண்டனை துமிந்தவிற்கு எங்கே? அத்துரலிய தேரர்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 08:22.04 AM GMT ]
போதைப்பொருள் வியாபாரம் தொடர்பாக பெயர்போன பிரதானியை இதுவரை கைது செய்யாமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் தனது அதிருப்தியை வெளிபடுத்தியிருந்தார்.
வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இக்கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
மேலும் தற்போதைய அரசாங்கத்திலும் யாராவது மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய போதைப்பொருள் கடத்தல்களில் மட்டும் மோசடிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் இதுவரை சுதந்திரமாக வெளியில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசாங்கம் எதிர்கால அரசாங்கத்திற்கு தேவையான வகையில் தண்டனை வழங்குகிறார்களா என்று தான் என்ன தோன்றுகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு வழங்காத தண்டனை திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வழங்கப்பட்டது.
இவ்வாறான நடவடிக்கை மூலம் உண்மையாக ஊழல் மோசடிகளுக்கு தொடர்புடைய நபர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்கொள்கிறார்கள்.
நடைமுறை கேள்விகள் சில என்னிடம் உள்ளன. அதில் ஒன்று தான் இவ்வாறான நிறுவனங்களில் உள்ள நபர்கள் உட்பட அதாவது ஊழல் மோசடி விசாரணை குழு உட்பட சந்தேகத்திற்கு இடமானதாக உள்ளது.

கல்வியமைச்சர் போல் தொலைபேசியில் பேசிய நபர் குறித்து விசாரணை
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 08:49.23 AM GMT ]
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் பெயரில் தொலைபேசி அழைப்பை எடுத்த நபரை கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வியமைச்சர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஒருவர் அண்மையில் மேல் மாகாண கல்வி பணிப்பாளர் விமல் குணரத்னவுக்கு அண்மையில் தொலைபேசி அழைப்பொன்றை எடுத்திருந்தாக கூறப்படுகிறது.
இது குறித்து விமல் குணரத்ன, கல்வியமைச்சை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளதுடன் அது போலியான நபர் ஒருவர் மேற்கொண்ட அழைப்பு என்பது தெரியவந்துள்ளது.
இப்படியான போலியான தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும், பாடசாலைகளுக்கு இப்படியான அழைப்புகள் வந்தால், அதனை உடனடியாக உறுதிப்படுத்துமாறும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பணம் சம்பாதிக்க ஐ.தே.க ஆட்சிக்கு வரவில்லை: சஜித் பிரேமதாச
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 09:01.34 AM GMT ]
பணத்தை சம்பாதிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரவில்லை எனவும் தனது பெயரை பயன்படுத்தி வியாபாரங்களில் ஈடுபடுவது மற்றும் மக்களிடம் இலஞ்சம் பெற்றால், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் கார் பந்தயம் நடத்தப்பட்ட காணிகள் வறிய மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் அதன் போது கூறியுள்ளார்.
திஸ்ஸமஹாராமயவில் 182 பேருக்கு ஒரு லட்சம் ரூபா இலகு கடன் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நிலம் இல்லாத வறிய மக்களின் காணிப் பிரச்சினைக்கு காணி கச்சேரியின் ஊடாக கிராம அமைப்பாளர் மூலம் தீர்வுகாண முடியும்.
அதில் முறைகேடுகள் நடந்தால், உடனடியாக தன்னை சந்தித்து அது பற்றி தெரியப்படுத்தலாம் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 09:14.41 AM GMT ]
கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரு பிரதேச சபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவுபெறவுள்ளன.
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெற வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார்.
கரைத்துரைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரை எந்தவிதமான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக பதிவு செய்யப்படாத நிலையில் சகல அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும், இன்று நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும்.
அத்துடன், எதிர்வரும் 27ம் திகதி காலை முதல் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படும்.
இம்முறை மிகவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ள போதிலும் அதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnuzF.html

சுதந்திரக் கட்சியின் 65 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள ஆர்வம்!- லக்ஸ்மன் கிரியல்ல
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 09:15.47 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர் என பெருந்தோட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். 
நாடாளுமன்றிற்குள் கூட எம்மால் நிம்மதியாக இருக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எப்படியாவது ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள முயற்சித்து வருகின்றனர்.
இதேவேளை, நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே பதற்றமடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் 100 நாள் அரசாங்கம் அல்ல.
கூட்டத்தைப் பார்த்த ஐக்கிய தேசியக் கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
எனினும், சுதந்திரக் கட்சியினருக்கு வயிறு கலங்கி பேதி ஏற்பட்டுள்ளது.
கட்சி பிளவடைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளதாக புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnuzG.html

Geen opmerkingen:

Een reactie posten