தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

சவூதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு மரண தண்டனை! விடுதலை தொடர்பான கூட்டம் தாமதம்

நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 03:40.29 AM GMT ]
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதிய அசராங்கத்தின் ஊடாக இலங்கையில் மீண்டும் நல்லிணக்கம் மற்றும் ஜனநயாகம் கட்டியெழுப்பப்பட வேண்டியது இன்றியமையாததாகும்.
நம்பகத்தன்மையுடன் அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட வேண்டும்.
இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் இன நல்லிணக்க முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை.
புதிய அரசாங்கத்துடன் தொடர்ச்சியான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள சிங்கப்பூர் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருவதாக வெளிவிவகார அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதிய அசராங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் உயர்மட்ட சிங்கப்பூர் அதிகாரி சண்முகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு நேற்று விஜயம் செய்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவில் இலங்கையர்களுக்கு மரண தண்டனை! விடுதலை தொடர்பான கூட்டம் தாமதம்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 04:01.04 AM GMT ]
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மூவரையும் விடுதலை செய்வது தொடர்பான கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
இது குறித்து சவூதி அரேபிய அதிகாரிகளால் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுடள்ளார்.
இதற்கமைய, இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் பிரதிநிதியான அமைச்சர் ரவூப் ஹக்கீம் எதிர்வரும் 27 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு செல்லவுள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் நேற்றையதினம் நடைபெறவிருந்த நிலையில், 27ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
எனினும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் மூவரையும் விடுதலை செய்வது தொடர்பில் சவூதி மன்னருடன் அமைச்சர் ஹக்கீம் எதிர்வரும் 27 ஆம் திகதி கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலின் பதில் வெளியிடப்படும் வரையில், இலங்கையர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட மாட்டாதென அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் கூறினார்.
2007 ஆம் ஆண்டு யேமன் பிரஜையை கொலை செய்தமை தொடர்பில் மூவருக்கும் சவூதி நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், அந்தத் தண்டணை சவூதி உயர் நீதிமன்றத்தினால் அண்மையில் உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பெண்கள் மத்திய கிழக்குநாடுகளுக்கு அனுப்பி வைப்பதனை நான் விரும்பவில்லை: தலதா அதுகோரல
இலங்கை பெண்கள் மத்திய கிழக்குநாடுகளுக்கு அனுப்பி வைப்பதனை நான் விரும்பவில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
இதனை விடவும் சிறந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
பெண்கள் வெளிநாடு செல்வதனால் அவர்களது பிள்ளைகளுக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகள் குறித்து பெண் என்ற ரீதியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஒர் பெண்ணாகவே இந்தப் பிரச்சினை பார்க்கின்றேன் எனவும் தாய் இல்லாமல் பிள்ளைகளை வளர்ப்பது சமூகத்தில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள் தம்மை பற்றி என்ன சொன்னாலும் மனச்சாட்சியின் அடிப்படையில் தாம் கடமையாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று இலங்கையர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சவூதி மன்னருடன் தொடர்புகளைப் பேணி வரும் ரவூப் ஹக்கீமை குறித்த நபர்களுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்நாட்டு சட்டங்களின் அடிப்படையில் தாம் அங்கு சென்று இவ்வாறான முயற்சியில் ஈடுபடுவதனை விடவும் அமைச்சர் ஹக்கீம் செல்வது பயனுள்ளதாக அமையும் எனவும் அவர் தெரிhttp://www.tamilwin.com/show-RUmtyCRYSUntzJ.htmlவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten