தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 februari 2015

சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை! - மன்னார் ஆயர்

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க உள்ளதாக ரணில் அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 03:59.11 PM GMT ]
ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
சில சிங்கள ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.
புதிய அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊடக உரிமை அமைப்புக்கள் ஆகியனவற்றை அழைத்து பேசத் தீர்மானித்துள்ளேன்.
நாடு பிளவடையவுள்ளது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைகின்றார்கள் என பொய்யான பிரச்சாரங்களை சில சிங்கள ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUns1C.html

சிஹல ராவய உள்ளிட்ட 20 பௌத்த அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படத் தீர்மானம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 04:10.44 PM GMT ]
சிஹல ராவய உள்ளிட்ட இருபது சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்படத் தீர்மானித்துள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு வருவதாக அந்த அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
குறிப்பாக தேசியப் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளன.
நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள இவ்வாறு புதிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்க உள்ளதாக குறித்த சிங்கள பௌத்த அமைப்புக்கள் அறிவித்துள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சிக்காக வாக்களித்த வாக்காளர்களின் நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளன.

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கைக்கு விஜயம்! - இலங்கை நீதி அமைச்சர் லண்டனுக்கு விஜயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 04:16.34 PM GMT ]
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் நாளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமைய உள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சந்திக்க உள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் ஆகியோரையும் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் சண்முகம் விஜயம் செய்ய உள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
நீதி அமைச்சர் லண்டனுக்கு விஜயம்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச லண்டனுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
பிரசித்தி பெற்ற மக்னா காட்டா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 800 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பிரிட்டனின் லண்டனில் சர்வதேச சட்ட சம்மேளனமொன்று நடைபெறவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 25ம் திகதி வரையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டை ஆரம்ப நிகழ்வில் பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் மற்றும் நாடுகளின் நீதி அமைச்சர்கள், சட்ட மா அதிபர்கள், சட்ட வல்லுனர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
நிலையான அபிவிருத்தி, சட்ட அடிப்படை, சர்வதேச பொருளாதார சட்ட நியதிகள், சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் நூதன ஜனநாயகம் ஆகியன தொடர்பில் பேசப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டனின் நீதி அமைச்சரினால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்பிற்கு அமைய இலங்கை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUns1E.html

கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்து மீளாய்வு செய்யப்படும்: ஜோன் அமரதுங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 04:21.20 PM GMT ]
கடந்த அசராங்கத்தினால் வழங்கப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்து மீளாய்வு செய்யப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் சுமார் 2000 பேருக்கு இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கியுள்ளது. இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்ட பலரது இரட்டைக் குடியுரிமை ரத்து செய்யப்படலாம்.
2010ம் ஆண்டு முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறை தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனினும், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் ஒரு சிலருக்கு மட்டும் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
கையூட்டல் பெற்றுக்கொண்டு இவ்வாறு சிலருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆங்கில ஊடகமொன்றுக்கு அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை! - மன்னார் ஆயர்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 04:31.20 PM GMT ]
சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடந்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நடத்தும் உள்ளக விசாரணை என்பது உண்மையை கண்டறிவதற்கான ஒரு காத்திரமான நடவடிக்கையென தான் நம்பவில்லை.
சர்வதேச விசாரணையை தள்ளிப்போடுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. எனினும் செப்டம்பர் மாதம் கட்டாயம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிட்லர் மேற்கொண்டதைப்போல துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அழிப்பது மாத்திரம் இன அழிப்பல்ல. பல்வேறு நுட்பமான நடவடிக்கைகள் மூலமும் ஓர் இனத்தை அழிக்கலாம்.
சிங்கள மக்களிடம் உள்ள அதி உச்சமான சிங்கள தேசிய உணர்வின் அச்சத்தால் தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய அடையாளங்கள் அழிக்கப்படுவதாகவும் ஆயர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUns1G.html

Geen opmerkingen:

Een reactie posten