தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 februari 2015

மட்டக்களப்பில் ஐந்து வருடத்துக்கு முன் அகற்றப்பட்ட பேடன் பவல் சிலை மீண்டும் நிறுவல்

உள்ளூர் விசாரணைகளை நாங்கள் எதிர்க்கிறோம்!- தேசிய சுதந்திர முன்னணி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 07:29.19 AM GMT ]
இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் தொடர்பாக உள்ளூரில் விசாரணைகள் மேற்கொள்வதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளருக்கு வழங்கிய வாக்குறுதிக்கு தேசிய சுதந்திர முன்னணி தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் மொஹமட் முஸாம்மில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்பொழுது உள்ளூர் விசாரணைக்கு மங்கள சமரவீர மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளருக்கு வாக்குறுதி வழங்கியுள்ள வகையில் உள்ளூர் விசாரணைகளுக்கு குறித்த காரணம் தொடர்பாக அதாவது யுத்த குற்றம் தொடர்பாக விசாரனை மேற்கொள்வதென்றால் என்ன?
உங்களுக்கு தெரியுமா பாதுகாப்பு சபை சீனா மற்றும் ரஷ்யா நாடுகளில் உள்ளது. இன்று மக்கள் விடுதலை முன்னணி விக்ரமசிங்கவின் காணியில் கட்டப்பட்டிருக்கும் நாய்கள் போன்று சீனா மற்றும் ரஷ்யாவிற்கு தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
சிவப்பு சட்டை அணிந்தவர்கள் கூட சீனா மற்றும் ரஷ்யாவிற்கு தாக்குதல் மேற்கொள்கிறார்கள் என மொஹமட் முஸாம்மில் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnsyE.html

வளவாய் பகுதியில் 25ற்கும் அதிகமான கிணறுகளில் வெடிகுண்டுகள்!
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 07:31.55 AM GMT ]
வளவாய் பகுதியில் 25ற்கு மேற்பட்ட கிணறுகளில் வெடி குண்டு அபாயம் உள்ளதாக அறிவித்தல்கள் இடப்பட்ட நிலையில் இதை விவசாயத்திற்கு பயனபடுத்த முடியாது விவசாயிகள் திண்டாடுகின்றனர்.
இந்த நிலையில் வெடி குண்டு அகற்றும் பணியில் ஈடுப்பட்டவர்களும் வெளியேறி விட்டார்கள்.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே இராணுவ பாதுகாப்பு அரணுக்கு வெளியே மக்கள் பயன்பாட்டிற்கு குடியிருப்புக்கள் விடப்பட்ட போதும் அப்பகுதியில் உள்ள கிணறுகளில் வெடி குண்டுகள் அகற்றப்படாமையால் சில கிணறுகள் தூா்க்கப்பட்ட நிலையிலும், சில கிணறுகள் நீர் உள்ள நிலையிலும் உள்ளது.
எனினும் இப்பகுதி மக்களால் இந்த கிணறுகளை பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாத தூா்பாக்கிய நிலையில் உள்ளார்கள்.


மட்டக்களப்பில் ஐந்து வருடத்துக்கு முன் அகற்றப்பட்ட பேடன் பவல் சிலை மீண்டும் நிறுவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 07:43.38 AM GMT ]
ஐந்து வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நகரில் இருந்து அகற்றப்பட்ட சாரணர் தந்தை பேடன் பவலின் உருவச்சிலை மீண்டும் நகரில் உள்ள திருநீற்றுக்கேணி பூங்காவில் நிறுவப்பட்டது.
சாரணர் இயக்கத்தின் ஸ்தாபர் பேடன் பவலின் 158வது பிறந்த தினத்தினையொட்டி மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினால் இந்த சிலை மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் .பி.ஆனந்தராஜா தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபையின் பொறியியலாளர் ரி.தேவதீபன் பிரதம அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் 80வது ஆண்டு நிறைவும் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபர் பேடன் பவலின் 158வது பிறந்த தினத்தினையும் ஒட்டி இந்த சிலை மீண்டும் திறந்து வைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தின் ஊடக உதவி ஆணையாளர் ஆ.புட்கரன் தெரிவித்தார்.
இதன்போது அதிதிகளினால் சிலை திறந்து வைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் .பி.ஆனந்தராஜாவினால் சிலைக்கு கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் உள்ள சாரண மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன் திருநீற்றுக்கேணி பூங்காவில் இருந்து அரசினர் ஆசிரியர் கலாசாலை வரையில் ஊர்வலமும் நடைபெற்றது.
1998 ஆம் ஆண்டு முதன்முறையாக மட்டக்களப்பு நகரின் மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த சிலையானது, 2010ஆம் ஆண்டு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்ட நிலையில் வீதி புனரமைப்பு காரணமாக அகற்றப்பட்டு மீண்டும் ஸ்தாபிக்கப்படாமல் இருந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnsyH.html

Geen opmerkingen:

Een reactie posten