தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 februari 2015

விபூசிகாவின் தாயார் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு !

பௌத்தத்துடனான தனது தொடர்புகளை வெளிப்படுத்த இந்தியா விரும்புகிறது !

[ Feb 26, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 9160 ]
இலங்கைக்கான தனது அடுத்த மாத விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் புராதன தலைநகரமான அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார். வலுக்கட்டாயமாக திணித்தல் அல்லது பலத்தை பிரயோகித்தலுக்கு பதில் இந்தியா ஏனைய நாடுகளை கவரும் மென்மையான அணுகுமுறையை பின்பற்றுகின்றது என்பதை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் மேலும் பௌத்தத்துடனான தனது தொடர்புகளை அது வெளிப்படுத்த விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 12 அல்லது 13 ம் திகதி கொழும்பிற்கு செல்ல திட்டமிட்டுள்ள மோடி யாழ்ப்பாணத்திற்கு 14 ம் திகதி விஜயம் மேற்கொள்வார்,இந்தியா அனல் மின்நிலையமொன்றை அமைத்துவரும் திருகோணமலைக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இந்தியா மோடி அனுராபுரத்திற்கு விஜயம் மேற்கொள்வதையும அவரது நிகழ்ச்சிகளில் இணைக்க முயன்றுவருகின்றது. 4ம் நூற்றாண்டு முதல் 11 வரை இலங்கையின் தலைநகராக விளங்கிய இந்த புராதன நகர்,பல வருடங்களாக தேரவாத பௌத்த்தின் மையப்பகுதியாகவும் காணப்பட்டது.
அசோக மன்னனின் மகன் மகேந்திர பௌத்தம் குறித்து இரு உரைகளை நிகழ்த்திய நகரமும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் பௌத்த பாரம்பரியம் காணப்படுவதை உலகிற்கு உணர்த்தும் இந்திய அரசாங்கத்தின் திட்டத்தின் படியே அனுராபுரத்திற்கான இந்த விஜயம் இடம்பெறுவதாக அதிகாரியொருவர் குறிப்பிட்டார். இது மக்களுக்கு இடையிலான தொடர்புகளை அதிகரிக்கும்,பௌத்த பாரம்பரியத்தினை கொண்டிருக்கும் தென்னாசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் மென்சக்தியை ஊக்குவிக்க உதவும் என மேலும் தெரிவித்துள்ள , அந்த அதிகாரி,இலங்கை மற்றும் தென்கிழக்கு தென்னாசியாவிலிருந்து பௌத்த சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு இந்தியா முயன்றுவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விபூசிகாவின் தாயார் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மறியலில் வைக்க நீதிமன்று உத்தரவு !

[ Feb 26, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 13675 ]
பாலேந்திரன் ஜெயகுமாரியை தொடர்ந்தும் மார்ச் 10 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே ஜெயக்குமாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பயங்கரவாத தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டு காலியிலுள்ள பூசா தடுப்பு முகாமில் சுமார் ஒரு வருடகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
எனினும் ஜெயகுமாரி கடந்த வாரம் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் நேற்று கொழும்பு நீதிவான நீதிமன்றில் அவர் முற்படுத்தப்பட்டார். இதன்போது எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிவரை சிறைச்சாலையில் தடுத்துவைத்திருப்பதற்கான உத்தரவை நீதிவான் பிறப்பித்துள்ளார். இதேவேளை, தனது தாயாரை விடுதலை செய்யாது விடில் நஞ்சருந்தி தற்கொலை செய்வேன் என மகள் விபூசிகா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/2404.html

Geen opmerkingen:

Een reactie posten