தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள்: சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு



தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர்- முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 09:35.52 AM GMT ]
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியா, எம்பெக் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளை இன்று புதன்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர், கட்சியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவு, இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரான நிலைமைகள் மற்றும் நல்லாட்சி நடவடிக்கைகள், இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அதேவேளை இச்சந்திப்பின் போது கல்முனைத் தொகுதியில் கிட்டங்கி பாலம் தொடக்கம் சாய்ந்தமருது தோனா வரை வடிகாலமைப்பு அபிவிருத்திக்கு தென் ஆபிரிக்கா உதவ முன்வர வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் முன்வைத்த வேண்டுகோள் அந்நாட்டு வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சந்திப்பில் தென் ஆபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சருடன் இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் உள்ளிட்ட ராஜதந்திரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

நுகேகொடை கூட்டத்திற்கு மக்கள் எப்படி திரட்டப்பட்டனர் என்பது எமக்கு தெரியும்: ஜனாதிபதி
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 09:38.14 AM GMT ]
நுகேகொடை கூட்டத்திற்கு எப்படி மக்கள் திரட்டப்பட்டனர் என்பது எமக்குத் தெரியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியை பிளவடையச் செய்யவேண்டும் என்பதற்காக கால்களை இரண்டு இடங்களில் வைத்துக் கொண்டு செயற்பட வேண்டாம்.
ஏன் நாம் சின்ன சின்ன கட்சிகளுக்கு புள்ளிகளை வழங்க வேண்டும். நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகவே முன்னோக்கிச் செல்வோம். நுகேகொடை கூட்டத்திற்கு எவ்வாறு மக்கள் திரட்டப்பட்டார்கள் எவ்வாறு பஸ்கள் கொண்டு வரப்பட்டன என்பது எனக்குத் தெரியும்.
கெஸ்பேவ, பிலியன்தலை மற்றும் களுத்துறையில் எவ்வாறு பஸ்கள் கொண்டு வரப்பட்டன என்பதும் எனக்குத் தெரியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலட்சங்களில் செலுத்தப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் குடிநீர் கட்டணங்கள்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 09:49.35 AM GMT ]
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி மாளிகையின் குடிநீர் கட்டணமாக 13 லட்சத்து 24 ஆயிரத்து 226.26 செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த டிசம்பர் மாதம் 10 லட்சத்து 37 ஆயிரத்து 650.21 ரூபா செலுத்தப்பட்டுள்ளது. 2015 ஜனவரி மாதம் ஜனாதிபதி மாளிகையின் குடிநீர் கட்டணம் 45 ஆயிரத்து 238.30 ரூபாவாக குறைந்துள்ளது.
இலங்கை வங்கியின் 608926 என்ற காசோலையின் மூலம் நவம்பர் மாதத்திற்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதுடன் டிசம்பர் மாத கட்டணம் 647120 என்ற இலக்க காசோலை மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனவரி மாதத்திற்கான கட்டணம் 647205 என்ற இலக்க காசோலை மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu0C.html

தேர்தலுக்கு பயன்படுத்திய இ.போ.ச பஸ்களுக்காக ஆயிரத்து 425 இலட்சம் அறவீடு
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 09:52.07 AM GMT ]
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு மக்களை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்காக ஆயிரத்து 425 இலட்சம் ரூபாவை அறவிடவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த நிலுவை கட்டணத்தை அறவிடுவதற்கான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன் போக்குவரத்து அமைச்சு மட்டத்தில் இடம்பெற்றுள்ள பாரிய மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மனைவியின் கைதுக்கான காரணத்தை மறைத்து அனுதாபம் தேட விமல் வீரவன்ச முயற்சி!- மனோ கணேசன்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 10:00.45 AM GMT ]
பிறப்பு சான்றிதழில் சொந்த பெயரை மாற்றலாம். அதற்கு சட்ட வழிமுறைகள் உள்ளன. ஆனால், பிறந்த திகதி, பிறந்த இடம், பெற்றோர் பெயர்கள் ஆகியவற்றை ஒருபோதும் மாற்ற முடியாது. அவற்றை மாற்றுவது மோசடியாகும். இது சட்டப்படி குற்றம்.
ஆகவே அது தொடர்பாக போலிஸ் நடவடிக்கை உண்டு. இத்தகைய குற்றச்செயலை செய்துவிட்டுதான் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த குற்ற செயலை மறைத்து சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேட வீரவன்ச முயல்கின்றார். அது மட்டுமல்ல, பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் இன்று சிறை செல்ல வேண்டியுள்ளது என்று கூறி இனவாதத்தையும் கிளப்ப இவர் முயல்கிறார்.
பயங்கரவாதத்தை ஒழித்தோர் இன்று சிறை செல்ல வேண்டியுள்ளது என்று ஒப்பாரி வைக்கும் இவருக்கு சரத் பொன்சேகாவை பிடித்து சிறைக்கு அனுப்பியது ஞாபகம் இல்லையா?
உலகத்திலேயே மிக சிறந்த இராணுவ தளபதி என்று இவர்களாலேயே பாராட்டப்பட்ட சரத் பொன்சேகாவை கழுத்தை பிடித்து, இழுத்து சென்று, சீருடையை கழற்றி, சிறையிட்டது மறந்து விட்டதா? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
மகிந்த மீண்டும் அரசியலுக்கு வரலாம். அதற்கு அவருக்கு உரிமை உள்ளது. அதை யாரும் பறிக்கவில்லை. மகிந்தவுடன் எனக்கு தனிப்பட்ட கோபம் கிடையாது. நான் எப்போதும் அவருடன் கொள்கை முரண்பாடு கொண்டவன். அவரை கவிழ்த்து விட்டவர்கள் அவருடன்கூட இருந்தவர்கள்தான்.
ஆகவே அவர் மீண்டும் வருவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னை பொறுத்தவரையில் அவர் மீண்டும் வரலாம். மீண்டும் வந்து இன்று இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவர் பார்க்கட்டும்.
ஆனால், அவரை மீண்டும் அழைத்து வரும் பாதை இனவாத பாதையாக இருக்க முடியாது. இதை மகிந்தவை பயன்படுத்தி கோட்டையை பிடிக்க நினைக்கும் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, கம்மன்பில மற்றும் முன்னாள் சிகப்பு சட்டை வாசுதேவ உள்ளடங்கிய நுகேகொடை குழு நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இன்றைய அரசின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உட்பட அனைத்து கொள்கைகள் பற்றியும் இவர்கள் விமர்சிக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், இனவாதம், மதவாதம் இவற்றை கிளப்ப உரிமை இல்லை.
இன்று இந்த நாட்டில் புலிகள் இயக்கம் இல்லை. ஆயுத போராட்டம் இல்லை. ஆனால், நுகேகொடை குழு, இப்போது இந்த நாட்டில் புலிகளை தேடி திரிகிறது. புலிகள் எழுந்து வரமாட்டார்களா என்று ஏங்குகிறது.
இதனால் இவர்கள் நால்வரும் பங்குதாரர்களாக இணைந்து புலிகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை இன்று அமைத்துள்ளார்கள். இந்த புலித் தொழிற்சாலையை இயக்குவதுதான் இவர்களது இன்றைய முழுநேரத் தொழில்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu0F.html

இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமை மீறல்கள்: சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 10:03.25 AM GMT ]
கடந்த ஆண்டிலும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2014ம் ஆண்டில் 160 நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத கைதுகள், படையினரின் சித்திரவதைகள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை, பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற சட்டங்களின் ஊடாக மக்கள் துன்புறுத்தப்படுகின்றமை போன்ற சம்பவங்கள் இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் காணாமல் போன அல்லது கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.சிறுபான்மை மதத்தினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதுடன் அடக்குமுறைகள் தொடர்வதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தி, எதிர்காலத்தில் துரித கதியில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றை ஒரே இரவில் மாற்றியமைக்க முடியாது என்பது யதார்த்தமானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
காவல்நிலையங்களில் கைதிகளின் உயிரிழப்புச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடக்குமுறைகள் அதிகரித்துச் செல்வதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu0G.html

Geen opmerkingen:

Een reactie posten