[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 12:37.01 PM GMT ]
மகேஸ்வரி நிதியம் மேற்கொண்டு வந்த மணல் அகழ்வு மற்றும் விநியோகத்திற்கு பயன்படுத்திய யாழ்.மாவட்ட பாரவூர்திகள் உரிமையாளர்களிடம் இருந்து 5 ஆயிரம் ரூபா பணம் பெறப்பட்டிருந்தது.
குறித்த பணத்தினை மீளக் கையளிக்காமல் விநயோகத்தில் இருந்து அவர்களை இடைநிறுத்தியதால் பாரவூர்தி உரிமையாளர்கள் வாழ்வாதார ரீதியில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.
எனவே தாம் செலுத்திய பணத்தினை வட்டியுடன் மீளத் தருமாறு கோரி யாழ்.மாவட்ட பாரவூர்திகள் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இறுதியாக கடந்த மாதம் யாழ்.கோவில் வீதியில் அமைந்துள்ள மகேஸ்வரி நிதியத்தின் அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் குறித்த நிதியத்தின் பொறுப்பாளரினால் பணம் மீளக் கையளிக்கப்படும் என்றும் பணம் செலுத்தியவர்களுடைய பெயர் விபரங்களை அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் கோரியிருந்தார்.
இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டிருந்தது. இருந்த போதும் குறித்த பணம் மீளக் கொடுப்பது சம்மந்தமாக மகேஸ்வரி நிதியம் இதுவரையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை.
இதனையடுத்து யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர்கள் இன்றைய தினம் யாழ்.கோவில் வீதியில் உள்ள மகேஷ்வரி நிதியத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது மகேஷ்வரி நிதியத்தினருக்கும் பாரவூர்தி உரிமையாளர்களுக்குமிடையில் முரண்பாடு உருவாக்கப் பட்டிருந்தது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய குறித்த சங்கத்தின் உரிமையாளர்களுக்கு, குறித்த பிரச்சினை சில தினங்களுக்குள் தீர்க்கப்படும் என டக்ளஸ் உறுதியளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv6J.html
வடமராட்சி கிழக்கில் அத்துமீறிய 43 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 12:09.11 PM GMT ]
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வைத்துக் நேற்று இரவு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 43 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் இந்திய இழுவை படகுகளை தடுக்க முற்பட்ட குடாநாட்டு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து இந்திய மீனவர்கள் 43 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் குறித்த மீனவர்கள் அனைவரும் யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் பருத்தித்துறை நீதவான் மா.கணேசராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதவான் இவர்களை மார்ச் மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்தி- வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv6I.html
Geen opmerkingen:
Een reactie posten