தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்

யாழில் மரண வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தோரில் நால்வர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 12:44.13 AM GMT ]
யாழ்., கோண்டாவில் பகுதியில் மரணச்சடங்கு நடைபெற்ற வீட்டுக்குள் புகுந்து கடந்த புதன்கிழமை தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றத்துக்காக கோண்டாவில் பகுதியை சேர்ந்த நான்கு பேரை நேற்று திங்கட்கிழமை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 
கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் மரணச் சடங்கு இடம்பெற்று சடலத்தை தகனம் செய்யும் பொருட்டு இணுவில் காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
மயானத்துக்கு செல்லும் வழியில் மதுபோதையில் நின்ற இளைஞர் குழு மரண ஊர்வலத்தில் வந்த மேளத்தை தமக்காக அடிக்குமாறு கூறினர். அதற்கு மேளம் அடிப்பவர்கள் மறுப்பு தெரிவிக்க, அந்தக் கும்பல் அவர்களுடன் வாய்த்தர்க்கம் செய்தது.
அவ்வேளை மரணச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் மதுபோதையில் நின்றவர்களை அங்கிருந்து அடித்து விரட்டினர். அடிவாங்கி சென்ற கும்பல், மேலும் பலரை தம்முடன் இணைத்துக்கொண்டு வாள்கள், கம்பிகள் பொல்லுகளுடன் வந்து மயானத்தை சுற்றி வளைத்து தம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தாக்குதலை நடத்த காத்திருந்தனர்.
அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்தனர். பொலிஸாரை கண்ட அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
பொலிஸார் சென்றதும் மீண்டும் மரணச்சடங்கு இடம்பெற்ற வீட்டுக்கு வந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
அந்த தாக்குதலில் வீட்டில் இருந்த பெண்ணொருவர் உட்பட இருவர் காயமடைந்தனர்.
வீட்டுக்கு முன்பாக நின்ற வான் ஒன்றின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்தனர். காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.
அயலவர்கள் ஒன்று கூடியதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அதில் ஒருவரை மாத்திரம் வாளுடன் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அந்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது மேலும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUntyG.html

இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்!- ஜே.வி.பி மாற்றுக்குழு
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 02:55.52 AM GMT ]
இந்தியாவுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஜே.வி.பி.யின் மாற்றுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் சில ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் என்ன என்ன என்பது குறித்து வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி. கட்சியின் மாற்றுக் குழு அழைப்பாளர் அனுருத்த பொல்கம்பொல தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது நான்கு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டியது அவசியமானது.
இந்த உடன்படிக்கைகளின் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாரதூரமான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் எந்தவொரு நடவடிக்கைக்கும் பாராட்டு தெரிவிக்காத அமெரிக்கா இந்த உடன்படிக்கைகளை வரவேற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்துடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளன: லக்ஸ்மன் கிரியல்ல
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 03:18.11 AM GMT ]
சர்வதேச சமூகத்துடனான உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் உலக நாடுகளுடனான உறவுகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.
எனினும் தற்போது உலக நாடுகளுடன் சிறந்த உறவுகள் பேணப்பட்டு வருகின்றன.
முக்கியத்துவம் குறைந்த நாடுகளினது தலைவர்களே கடந்த காலங்களில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
குறிப்பாக ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களே அதிகளவில் மஹிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.
எனினும், தற்போது உலகின் முக்கிய நாடுகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
கடந்த அரசாங்கம் உலக நாடுகளிடம் பாரியளவில் கடன் பெற்றுக்கொண்டுள்ளது. புதிய அரசாங்கம் நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் கூடுதல் நாட்டம் காட்டி வருகின்றது.
அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நேரடியாக நிதி உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUntzE.html

தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் மர்மமான முறையில் மரணம்
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 03:32.32 AM GMT ]
தமிழகத்தில் இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட இருவர் மர்மான முறையில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தின் உய்யன்கொண்டான் குளத்திற்கு அருகாமையில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
குளத்திற்கு அருகாமையில் மீட்கப்பட்ட சடலங்கள் மகாத்மாகாந்தி ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உய்யன்கெண்டானைச் சேர்ந்த 21 வயதான செல்வம் என்பவரும், ரெட்டைவாசிக்காலைச் சேர்ந்த 42 வயதான ஜீ.அசோக் என்பவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
அசோக் என்பவர் இலங்கைத் தமிழர் எனவும், கடந்த பத்து ஆண்டுகளாக திருச்சியில் வசித்து வந்தார் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னதாக இவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் சடலங்கள் நேற்றைய தினமே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUntzG.html

Geen opmerkingen:

Een reactie posten