தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 februari 2015

ஹம்பாந்தோட்டை குடிநீர் திட்டத்தின் 165 மில்லியன் டொலர் யாருக்குச் சென்றது: மாட்டுவாரா மகிந்த ?

படத்தில் இருக்கும் இந்த இஸ்ரேலியப் பெண்ணை வைத்து சுமார் 165 மில்லியன் டாலர் , மோசடி செய்யப்பட இருந்ததாக கூறப்படுகிறது. பிரபல இஸ்ரேல் நிறுவனமானBaran International Group என்பதன் ஊடாக கடந்த வருடம்ஹம்பாந்தோட்டை மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்வுக்கென 6 திட்டங்கள் செயற்படுத்தப்பட்டதன் மூலம் அந்த மாவட்டத்தில் பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு 165 மில்லியன் டொலர் கமிஸன் பணமாக கிடைக்கவிருந்ததாக தெரியவருகிறது. 6 குடி நீர் திட்டங்களை இந்த கம்பெனிக்கு வழங்க மகிந்த ஊடாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மகிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான ஒரு அரசியல்வாதி இதனூடாக பெருந்தொகைப் பணத்தை ஏமாற்ற திட்டமிட்டுள்ளார்.
மொத்தமாக 185 மில்லியன் அமெரிக்க டாலரில் இந்த திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. ஆனால் திடீரென இதன் மொத்த செலவு 350 மில்லியன் என்று இலங்கை அரசு கணக்கு காண்பித்துள்ளது. இந்த Baran International Group நிறுவனத்தை ஹம்பாந்தோட்டை நீர்விநியோகத் திட்டத்திற்காக இலங்கைக்கு அழைத்து வந்தது, ஒர்னா சோவ்ரி ( Mrs. Orna Zoauri)
 என்னும் பெண்மணி ஆவார். இவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரும் செல்வந்த வர்த்தகர் ஆவார். இத்திட்டத்தின் தேசிய இணைப்பாளர்களாக ரொஸான் மோதா மற்றும் ,அவருடைய சட்டத்தரணி இஸ்ரேல் பிரஜையான அமோஸ் அச்சி ஆகியோர் செயற்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆறு குடிநீர் திட்டங்களை ஆரம்பிக்கவென போலி ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை சமர்பித்து அரசியல்வாதியின் உதவியுடன் நாட்டை ஏமாற்றி அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன் பின் ரொஸான் மோதா மற்றும் அமோஸ் அச்சி ஆகியோர் இஸ்ரேல் வர்த்தகரை ஓரம்கட்டி .. நிறுவனத்தையும் ஏமாற்றி திட்டத்தை தங்களின் கீழ் கொண்டுவந்துள்ளனர். பாதிக்கப்பட்ட வர்த்தகரால் கொழும்பு வர்த்தக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் ,வழக்கில் தற்போதைய நீதி பிரதி அமைச்சர் மற்றும் சட்டத்தரணியான சுஜீவ சேனசிங்க ஆஜராகியுள்ளார் என்பது தான் திடுக்கிடும் விடையமாக உள்ளது. சுஜீவ சேனசிங்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 185 மில்லியன் டொலருக்கு ஆரம்பிக்கப்பட்ட திட்டம் 350 மில்லியன் டொலருக்கு சென்றது எப்படி என தற்போது ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். இனி என்ன நடக்கவிருக்கிறது என்பதனை பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.
http://www.athirvu.com/newsdetail/2362.html

Geen opmerkingen:

Een reactie posten