தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 februari 2015

வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

பொதுபல சேனாவின் 6 பிக்குகளுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 09:58.59 AM GMT ]
பொதுபல சேனா அமைப்பின் ஆறு பௌத்த பிக்குகளுக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
கொழும்பு கோட்டே நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிசாட் பதியூதினின் அலுவலகத்திற்கு அத்து மீறி பிரவேசித்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 2ல் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தின் மீது இந்த பௌத்த பிக்குகள் அத்து மீறி பிரவேசித்தனர் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளுக்காக எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு குறித்த பௌத்த பிக்குகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வட்ரெக்க விஜித தேரர் குறித்த அலுவலகத்தில் இருப்பதாக தெரிவித்து, பொதுபல சேனா பௌத்த பிக்குகள் அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பௌத்த பிக்குகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.



சசி வீரவன்சவிற்கு பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலனை செய்யப்படும்!
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 10:52.05 AM GMT ]
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்சவிற்கு பிணை வழங்குவது குறித்து நாளை பரிசீலனை செய்யப்படும் என நீதவான் அறிவித்துள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இதனை இன்று அறிவித்துள்ளார்.
சசி வீரவன்சவின் உடல் நிலையை கருத்திற் கொண்டு அவருக்கு பிணை வழங்குமாறும், அவருக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொள்ள அனுமதிக்குமாறும் கோரப்பட்டிருந்தது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.
மேலும், பிணை வழங்குவது குறித்து நாளை தீர்மானிக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சசி வீரவன்சவை நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
போலி ஆவணங்களையும் தகவல்களையும் சமர்ப்பித்து போலியான முறையில் தேசிய அடையாள அட்டைகள், இராஜதந்திர மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டதாக சசி வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட சசி வீரவன்சவை எதிர்வரும் 4ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnvyI.html


வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது இந்திய மீனவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 10:03.05 AM GMT ]
இன்று காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் அப்பகுதி மீனவர்கள் தொழில் செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த இந்திய மீனவர்கள் கடலில் வைத்து கூரிய ஆயுதங்கள் மற்றும் கொட்டன்களால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதேவேளை நேற்று இரவு வடமாராட்சி கிழக்கு கடற்பகுதியில் மீனவர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய மீனவர்களால் அறுத்தெறியப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்களை கண்டித்து இன்று அப்பகுதி மீனவர்கள் கடற்கரையில் திரண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும்படி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்கு வடமராட்சி கிழக்கு கட்சி அமைப்பாளர் சூரியகாந் ஊடாக மகஜர் ஒன்றை அனுப்பி  வைத்துள்ளனர். 
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnvyC.html

Geen opmerkingen:

Een reactie posten