தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

ஆட்சி மாற்றத்தில் ஐ.நா இராஜதந்திரிகளுக்குப் பங்கு! மாவை

காணிப்பிரச்சினைகள் ஆவணங்கள் ரணிலிடம் என்கிறார் ஹஸனலி

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் “வாழ்வின் ஒளி” வாழ்வாதார உதவி செயற்றிட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான மாணவர்கள், சாதனை படைத்தோரைக் கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் – அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் தொடர்பான ஆவணங்களை முதற்கட்டமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளோம். பொத்துவில் தொடக்கம் கல்முனை, சம்மாந்துறை வரையான 21 கண்டங்கள் தொடர்பிலான காணிப்பிரச்சினைகள் பற்றியே இந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
தற்சமயம் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள் பற்றிய விவரங்கள் திரட்டப்பட்டுவருகின்றன. அதையும் பிரதமரிடம் கையளிப்போம். அம்பாறை மாவட்டத்தில் மட்டும் முப்பதாயிரம் ஏக்கர் காணிகளை முஸ்லிம்கள் அநியாயமாக இழந்துள்ளனர். மாவட்டத்தின் அதிகாரமையம் பெரும்பான்மை சமூக அதிகாரிகள் கையிலிருந்ததால் இக்காணிகளை மீட்டுக்கொள்ள முடியவில்லை.
எனவேதான் முக்கிய இடங்களிலும் பதவிகளிலும் இந்த மாற்றங்கள் நிகழவுள்னள. எனவே வீணே எதிர்ப்பு அரசியல் செய்யவேண்டியதில்லை. அரசுடன் சேர்ந்து எமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்போம் – என்றார்.
http://www.jvpnews.com/srilanka/98435.html


ஆட்சி மாற்றத்தில் ஐ.நா இராஜதந்திரிகளுக்குப் பங்கு! மாவை 

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் ஐ.நா இராஜதந்திரிகளும் செயற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனின் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இரணைமடுவிற்கு அருகில் பத்தாயிரம் இராணுவ குடியிருப்புக்களை அமைக்க கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.பத்தாயிரம் குடியிருப்புக்கள் என்றால் சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சிங்கள மக்கள் இங்கு குடியேற்றப்படுவர். சிங்கள மக்களை தமிழர் பகுதிகளுக்கு கொண்டு வந்து விவசாயம் செய்ய அனுமதித்துள்ளனர். இதனால் வடக்கிலுள்ள விவசாயிகள் தெருவில் நிற்கின்றனர். வடக்கு கடலில் தென்னிலங்கை சிங்கள மீனவர்கள், கடற்படையினரின் பாதுகாப்புடன் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்கு பின்னணியில் ஐக்கிய நாடுகள் சபையின் இராஜதந்திரிகள் செயற்பட்டுள்ளனர்’ என்றும் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/98426.html

Geen opmerkingen:

Een reactie posten