தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 februari 2015

இலங்கையில் இடம்பெற்ற மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா: ஜோன் கெரீ

இலங்கையிலிருந்து தப்பியோடிய பிரசாந்த ஜயக்கொடி மீண்டும் நாடு திரும்புகிறார்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 05:55.17 AM GMT ]
இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்களின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறிய  முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி இன்று தாயகம் திரும்பவுள்ளார்.
தனக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலை காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிச் சென்ற பிரசாந்த ஜயக்கொடி,  சிட்னி நகரில் வசித்து வந்தார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரசாந்த ஜயக்கொடி இன்று நாடு திருப்பவுள்ளார். அத்துடன் விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி தனக்கு நேர்ந்தவற்றை அம்பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபதத்துடன் புதிய சீன தூதுவர் இலங்கை வருகை
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 06:15.29 AM GMT ]
இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் மூலோபாய ஒத்துழைப்புக்களை உறுதிப்படுத்தும் முயற்சிகளை தொடரப்போவதாக இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் தெரிவித்துள்ளார்.
கடந்த 24ம் திகதி இலங்கைக்கான சீன தூதுவராகப் பதவியேற்க கொழும்பு வந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதியின் வரலாற்றுப் பயணத்தின் போது செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளையும், முன்னைய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்த மூலோபாய ஒத்துழைப்பு கூட்டுறவை நடைமுறைப்படுத்துவதும், தனது கடமையென அவர் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளும் வரலாற்று ரீதியான உறவுகளைக் கொண்டிருப்பதினால் தனது பதவிக்காலத்தில் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்தவும், மக்களுக்கு இடையிலான தொடர்புகளை ஊக்குவிக்கவும், முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளதாக புதிய சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி தொடர்பான அறிக்கை ஆறு மாதத்தில் சமர்ப்பிக்கப்படும்: சட்ட மா அதிபர்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 06:51.38 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மநாதன் குறித்த அறிக்கை ஆறு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. குமரன் பத்மநாதன் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணைகள் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணைகளின் போது குமரன் பத்மநாதனுக்கு எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆராய்ந்து ஆறு மாத காலத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnu6B.html

இலங்கையில் இடம்பெற்ற மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா: ஜோன் கெரீ
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 06:43.13 AM GMT ]
இலங்கையில் தற்போது இடம்பெற்றுள்ள மாற்றங்களின் பின்னணியில் அமெரிக்கா காணப்படுகின்றது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரீ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, பிரச்சினைகளுக்குரிய பல நாடுகளில் பல்வேறு நலன்புரித்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
உலக நாடுகளில் இதுவரை ஜனநாயகம் இல்லாத பிரச்சினைகளை சந்தித்த பல நாடுகளில் இப்போது உண்மையான ஜனநாயகத்தை காணமுடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் இந்தக் கருத்து, இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா இருந்திருப்பதை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnu6A.html

Geen opmerkingen:

Een reactie posten