[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 09:22.09 AM GMT ]
இவர் 25000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் திலின கமகேவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை காணவில்லை என்ற அடிப்படையிலேயே போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இரண்டு வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கராஜிலிருந்து குண்டு துளைக்காத ஒரு வாகனமும், கொஹவெல தனியார் கராஜ் ஒன்றிலிருந்து மற்றுமொரு வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.
காணாமல் போனதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் சேதப்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnuzH.html
அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் கடற்படையினருக்கு தொடர்பு
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 09:34.07 AM GMT ]
இந்நாட்களில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையில் இடம் பெறுகின்ற இராஜதந்திர உறவுகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்களுக்கு (Human Smuggling) இலங்கை கடற்படையினர் தொடர்பு என பிரதமரின் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதோடு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசகர் ஒருவரின் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரின் ஒத்துழைப்பு இன்றி இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையின் லெப்டினன் கேர்ணல் ஒருவரே இவ்வாறு ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்தும் புலனாய்வுப் பிரிவு அதிகாரியும் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரியும் ஒரே பாடசாலையைச் சேர்ந்தவர்கள் என்பதனால் விசாரணை இடையில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடபடுகிறது.
இந்த லெப்டினன் கேர்ணல் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
2012 மற்றும் 2013ம் ஆண்டு படகுகள் மூலம் யாழ்பாணம், மன்னார், சிலாபம், நீர்கொழும்பு, வத்தளை, காலி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் இருந்து 120 படகுகள் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனுப்பப்பட்டுள்ள படகுகளில் ஒரு படகிற்கு சுமார் 100 , 150ற்கு இடைப்பட்ட மக்கள் அனுப்பபட்டுள்ளனர் அதில் அதிகமானோர் தமிழ் மக்கள். இவ்வாறு அனுப்பப்பட்ட மக்களில் ஒருவரிடம் தலா 10 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
குறித்த படகுகளின் ஓட்டுனராக செயற்பட்டவர்கள் கடற்படையினரே எனவும் குறிப்பிடப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnuzJ.html
முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு: வடக்கில் பிரேரணை நிறைவேற்றம்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 09:33.07 AM GMT ]
வடமாகாண சபை அமர்வின் போது நேற்று வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தனினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.
வடக்கு மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக போராடியவர்கள் இன்று யாருமற்ற அனாதைகளாக நிர்க்கதியாகவுள்ளனர்.
மாவீரர் நாளை நினைவு கூறுதல், துயிலும் இல்லங்களை நிறுவுதல், குறித்து பேசப்பட்டு வருகின்றது, எனினும் தாய் மண்ணிற்காக போராடிய போராளிகளை குறித்து நாம் சிந்திக்க மறுப்பதினால்தான் அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளுக்கு அரச உத்தியோகங்கள் வழங்கப்பட வேண்டும், அத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்தை அதிகரிப்பதோடு பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnuzI.html
Geen opmerkingen:
Een reactie posten