தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 februari 2015

மைத்திரியின் இந்திய பயணம் யாருக்கு வெற்றி?

அனுமதியின்றி தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 06:02.18 AM GMT ]
வீசா அனுமதியின்றி இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கண்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான பாகிஸ்தான் பிரஜை கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 06:03.55 AM GMT ]
ஊர்காவற்றுறை நாரந்தனை பிரதேசத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
நாரந்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் விபூசனா (வயது- 19) என்ற யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று காலை யாழ். நகரிலுள்ள கல்வி நிலையத்திற்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து புறப்பட்ட யுவதி, மாலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர் தேடுதல் நடத்தியதுடன், பொலிஸ் நிலையத்திலும் தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து 700 மீற்றர் தூரத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் சடலம் ஒன்று காணப்படுவதாகப் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டவேளை, அது காணாமற்போயிருந்த யுவதியுடையது என்று தெரியவந்தது.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவின் அணு கழிவுகளுக்கு இலங்கையில் வெளியேற்ற அனுமதியில்லை: சம்பிக்க ரணவக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 06:15.00 AM GMT ]
இந்தியாவின் கதிரியக்க கழிவுகள் இலங்கையில் வெளியேற்ற அனுமதிக்க முடியாதென மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கதிரியக்க அணு கழிவு மேலாண்மையினால் இந்திய அணுமின் நிலையங்கள் வெளியேற்றுகின்ற கதிரியக்க கழிவுகள் இலங்கையினுள் வெளியேற்றுவதற்கு அனுமதிக்க முடியாதென அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் கைச்சாத்திட்ட அணு ஒப்பந்தம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnr7I.html

மைத்திரியின் இந்திய பயணம் யாருக்கு வெற்றி?
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 06:58.33 AM GMT ]
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது முத­லா­வது வெளி­நாட்டுப் பய­ணத்தை கடந்த வாரம் வெற்­றி­க­ர­மாக முடித்­தி­ருக்­கிறார். இந்தப் பயணம் பெரி­ய­ள­வி­லான எதிர்­பார்ப்பை இந்­தி­யா­விலும் இலங்­கை­யிலும் ஏற்படுத்தியி­ருந்­தது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த முரண்பாடுகளுக்கு முடிவுகட்டும் இந்தப் பயணத்தில், இருநாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவு ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இலங்கையிடம் காணப்பட்ட எதிர்பார்ப்புகளை விட இந்தியாவிடம்தான் கூடுதலான எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. இந்தியாவிடமிருந்து வர்த்தக பொருளாதார ஒத்துழைப்பு, மீனவர்கள் விவகாரத்துக்கான தீர்வு ஆகியவற்றுடன், சர்வதேச அரங்கில் இந்தியாவின் ஆதரவு என்பனவற்றைத் தான், இலங்கை எதிர்பார்த்திருந்தது.
இதில் முக்கியானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு எதிராகச் செயற்படும் விடயத்தில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது. ஆனால், இந்தியாவுக்கோ இலங்கையிடம் பல எதிர்பார்ப்புகள் இருந்­தன.
சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் பற்றிய அச்சத்துக்கு முடிவு கட்டுதல், சீன நீர்மூழ்கிகளின் வருகைக்கு முடிவு கட்டுதல், இருதரப்பு வர்த்தகம் ஒத்துழைப்பை விரிவாக்கிக் கொள்வது உள்ளிட்ட பல எதிர்பார்பபுகள் இந்தியாவிடம் காணப்பட்டன.
இவற்றுக்கு மத்தியில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் இடம்பெற்றிருந்தது. இந்தப் பயணத்தின்போது, இருநாடுகளுக்குமிடையில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாடொன்று கையெழுத்திடப்பட்டுள்ளது இது தவிர, வேறு மிக முக்கியமான எந்தப் புரிந்துணர்வு உடன்பாடுகளும் செய்து கொள்ளப்படவில்லை. ஏனைய மூன்று உடன்பாடுகளும் பெரியளவில் முக்கியத்துவமற்ற விடயங்களாகும்.
அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டில் இலங்கையுடன் கையெழுத்திட்ட விவகாரத்தை இந்தியா மிகப்பெரிய வெற்றியாக காட்டுகிறது. இது சீனாவின் பக்கத்திலிருந்து இலங்கையைத் தமது கைக்குள் கொண்டு வருகின்ற முக்கிய நகர்வென்று இந்தியத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், இப்போதைய நிலையில், இந்த உடன்பாடு, இந்தியாவுக்கு பெரிய அனுகூலங்கள் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை.
இலங்கை அணுஉலைகளை அமைத்து மின் உற்பத்திக்கோ வேறு தேவைகளுக்கோ பயன்படுத்தும் திட்டம் எதையும் தற்போது கொண்டிருக்கவில்லை. அடுத்த 15 ஆண்டுகளுக்கு அணுஉலைகளைக் கட்டும் திட்டம் ஏதும் இலங்கையிடம் இல்லை என்ற நிலையில், இந்தியாவுக்கு பெரிய பொருளாதார இலாபம் ஏதும் இதன் மூலம் கிடைக்காது. சாதாரணமாக இலங்கை அதிகாரிகளுக்கு பயற்சி அளித்தல் உள்ளிட்ட சில விடயங்கள்தான் இப்போதைக்கு இந்த உடன்பாட்டினால் ஆகப் போகின்ற காரியம்.
எனினும், இந்தியா இந்த உடன்பாட்டை ஏன் அவசரப்பட்டு செய்தது என்றால், பாகிஸ்தானில் அணுஉலைகளை அமைத்துக் கொடுக்கும் சீனா, இலங்கையிலும் கால் வைத்து விட்டால் ஆபத்தாகி விடும் என்பதனால்தான். இலங்கையில் சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எல்லாமே, அவசியமானவை, பயன்மிக்கவை என்று கூறத்தக்கவையல்ல. உதாரணத்துக்கு அம்பாந்தோட்டைத் துறைமுகம், மத்தள விமான நிலையம் என்பனவற்றை எடுத்துக் கொள்­ளலாம்.
அவை, மக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டவை என்பதை விட, சீனாவின் நலன் மற்றும் முன்னைய அரசாங்கத்திலிருந்தவர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டவை என்பதே சரியானது. எனவே, ஏற்கனவே பல தேவையற்ற திட்டங்களில் முதலீடுகளைக் கொட்டியது போலவே, சீனா அணுஉலைகளை அமைக்கும் விவகாரத்திலும் முந்திக் கொள்ளலாம் என்ற கவலை இந்தியாவுக்கு இருந்தது.
மைத்திரியின் இந்தியப் பயணம். எனவே, தனக்கு நெருக்கமான இடத்தில், சீனா அணுஉலைகளை அமைப்பதைத் தடுப்பதற்காகவே இந்தியா இந்த உடன்பாட்டை செய்திருக்கிறது. இப்போது அணுசக்தி விவகாரத்தில், என்ன தேவை ஏற்பட்டதாலும், இந்தியாவிடம் தான் இலங்கை ஓட வேண்டும்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட அணுசக்தி உடன்பாட்டை அமெரிக்காவும் வரவேற்றிருக்கிறது. அதைவிட வேடிக்கையான விடயம் என்னவென்றால், இதனை சீனாவும் ஆக்கபூர்வமானது என்று வரவேற்றுள்ளது தான். இந்தியா இலங்கை சீனா என்று முக்கோண உறவுகளை பலப்படுத்தினால், ஆசியப் பிராந்தியத்தில் பாதுகாப்பு, உறுதிப்பாடு என்பன வலுப்படுத்தப்படும் என்று சீனா கூறியிருக்கிறது.
ஆனால், இந்த விடயத்தில் சீனாவை நம்புவதற்கு இந்தியா தயாராக இல்லை. அதனால்தான், சார்க் அமைப்புக்குள் கால் வைக்கும் சீனாவின் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே தடை போட்டுவிட்டது இந்தியா. அதைவிட, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் மேலாதிக்கத்துக்கு முடிவுகட்ட, ஆறு அணுசக்தி நீர்மூழ்கிகளை கட்டும் புதிய திட்டத்துக்கும் ஒப்புதல் அளித்துள்ளது, வெளிப்படையாக இந்தியாவும் சீனாவும் நட்புறவாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் இரண்டு நாடுகளுமே ஒன்றையொன்று நம்பத் தயாராக இல்லை.
இந்த உறவுச் சிக்கலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக் கொள்வது இலங்கையின் முக்கியமான பிரச்சினையாக இருக்கிறது. முந்திய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம், சீனாவின் பக்கமே அதிகம் சார்ந்து நின்றது. அதனால், இந்தியாவுடன் உறவுகளை சீரானமுறையில் பேணவோ வலுப்படுத்தவோ முடியாது போனது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடு முன்னைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானது, எந்தப் பக்கமும் சாராமல் இருதரப்புக்கும் பொதுவான நடுநிலை நிலைப்பாட்டைப் பேணுவதே தனது வெளிவிவகாரக் கொள்கை என்கிறது புதிய அரசாங்கம்.
அதாவது அணிசேராக் கொள்கையை முழுமையாக கடைப்பிடிப்பதே புதிய அரசின் கொள்கை என்று கூறப்படுகிறது. இந்தியாவோ, ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர் இலங்கையில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்ளலாம், சீனாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டி விடலாம் என்றே எதிர்பார்த்தது. ஆனால், இந்த விடயத்தில் இலங்கையின் புதிய அரசாங்கத்தின் நகர்வுகள் இந்தியாவுக்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை என்பதே உண்மை.
இலங்கைக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளத் தொடங்கிய நீர்மூழ்கிகள் விவகாரத்தில் இந்தியாவின் எதிர்பார்ப்புக்கு முரணாகச் செயற்பட புதிய அரசாங்கம் தயாராக இல்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அது தமது ஆட்சிக்கு ஆபத்தாகும் என்பதை தற்போதைய அரசாங்கம் நன்கறியும். இந்தியாவின் பாதுகாப்புடன் விளையாட முற்பட்டதால் தான், மஹிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டார் என்ற கருத்து, அரசியல் மட்டத்தில் காணப்படுகிறது.
எனவே, இந்தியாவின் பாதுகாப்புடன் தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் விளையாட முனையாது என்பது நிச்சயம். எனவே, இனிமேல் சீன நீர்மூழ்கிகள் கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்த முனையும் என்று எதிர்பார்க்க முடியாது. அடுத்து, இந்தியாவுக்குள்ள முக்கியமான சிக்கல், கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரம் தான்.
1.5 பில்லியன் டொலரைச் செலவிட்டு சீனா உருவாக்கும் இந்த கடல் நகரத்தில் 20 ஹெக்ரெயர் நிலப்பரப்பு சீனாவுக்கு சொந்தமாகப் போகிறது என்பது தான் இந்தியாவின் மிகப் பெரிய கவலை. இந்தியாவுக்கு அருகே சீனாவுக்குச் சொந்தமான ஒரு நிலப்பரப்பு உருவெடுப்பதன் ஆபத்தை இந்தியா வலுவாக உணர்கிறது. எனவே, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் முன்னெடுக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை.
புதிய அரசாங்கம் பதவிக்கு வர முன்னர், இந்த திட்டத்தை இடைநிறுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், பதவிக்கு வந்த பின்னர் அத்தகைய முடிவை எடுக்க முடியாமல் திணறுகிறது. ஒரு பக்கத்தில் இந்தியா இந்தத் திட்டத்தை நிறுத்துமாறு நச்சரிக்கிறது. மறுபக்கத்தில் சீனா இதனை நிறுத்தினால் ஆபத்தில் சிக்க நேரிடும் என்று எச்சரிக்கிறது.
இரண்டு தரப்புக்கும் நடுவே இந்த விவகாரத்தை கையாள்வதில் புதிய அரசாங்கம் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது, மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணத்தின் போது, இதுகுறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவிடம் பிடிகொடுக்காமல் நழுவியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை உடனடியாக நிறுத்த முடியாது. ஏற்கனவே 25 வீதமான கட்டுமானப் பணிகள் முடிந்திருக்கின்றன. அதற்காக சீனா பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளது, எனவே, அது இந்தக் கட்டத்தில் நிறுத்தினால் சீனாவுடனான உறவுகள் பாதிக்கப்படும் என்பதுடன், சீனா செலவிட்ட நிதியையும் திருப்பி கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
கடலுக்குள் சீனா கொட்டி நிரப்பிய மண்ணுக்கும் கல்லுக்கும் காசைக் கொடுக்க இலங்கை தயாராகவும் இல்லை. அதற்கான காசும் இலங்கையிடம் இல்லை. எனவே திட்டத்தைத் தொடர அனுமதிக்கப் போவதாக மைத்திரிபால சிறிசேன இந்தியாவிடம் கூறியிருக்கிறார். ஆனாலும், சீனாவுக்கு சொந்தமாக நிலத்தைக் கொடுக்கும் உடன்பாட்டு விதிகளில் மாற்றம் செய்வது குறித்து பேசுவதாகவும் அவர் உறுதியளித்திருக்கிறார்.
இந்த மாத இறுதியில் வரும் 27, 28ம் திகதிகளில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த விவகாரம் குறித்துப் பேசவுள்ளார். இந்த திட்டத்தை மீளாய்வு செய்வதற்கு சீனா இணங்கியிருந்தாலும், உடன்பாட்டு விதிகளில் மாற்றம் செய்வதற்கு அது இணங்குமா என்பது முக்கியமான கேள்வி. 20 ஹெக்ரெயர் நிலப்பரப்பை சீனாவுக்கு சொந்தமாக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, அதனை 99 வருட குத்தகைக்கு வழங்குவதாக இணங்க வைக்க முயற்சிப்பதாக இந்தியாவிடம் கூறியிருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.
ஆனால், சீனா அதற்கு இணங்க வேண்டும். மிகப் பெரியளவு முதலீட்டை செய்து விட்டு, ஒதுங்கிக் கொள்வதற்கு சீனா தயாராக இருக்காது. இதுகுறித்து கருத்து வெளியிட்ட கொழும்பிலுள்ள சீனத் தூதரக அதிகாரி ஒருவர், முன்னைய அரசாங்கம் இன்னொரு நாட்டுடன் செய்து கொண்ட இருதரப்பு உடன்பாடுகளை நிறைவேற்ற வேண்டியது புதிய அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறியிருக்கிறார்.
இது சீனாவின் விட்டுக்கொடுப்பு எந்தளவுக்கு இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தமாத இறுதியில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், அடுத்த மாத இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மேற்கொள்ளவிருக்கும் சீனப் பயணங்களின் போது, இந்த விவகாரமே உச்சக்கட்டமான பேசுபொருளாக இருக்கப் போகிறது. அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் இலங்கைக்குச் சாதகமாகவே அமைந்திருக்கிறது.
சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஆதரவு தர குறிப்பாக ஐ.நா. மனித உரி­மைகள் பேரவையில் சர்வதேச விசாரணை முயற்சிகளைத் தடுக்க, உதவுவதாக இந்தியா வாக்குறுதி கொடுத்திருக்கிறது. இருதரப்பு வர்த்தகம், சுற்றுலாத்துறைகளை விரிவாக்கவும் இணங்கியுள்ளது. அவ்வாறாயின் பதிலுக்கு இலங்கை என்ன வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது? இலங்கையிடமிருந்து இந்தியாவினால் எந்த வாக்குறுதியையும் பெற முடியவில்லை என்கின்றன புதுடெல்லி வட்டாரங்கள்.
மூன்று மணிநேரம் பேசியும் எந்த வாக்குறுதியையும் மைத்திரிபால சிறிசேன கொடுக்கவில்லையாம். புதிய அரசாங்கம் பதவியேற்று சில வாரங்கள் தான் ஆகியுள்ளன, அடுத்த தேர்தல் போன்ற காரணங்களைக் காட்டி எந்த வாக்குறுதியையும் கொடுக்காமல் நழுவிட்டதாக புதுடில்லி வட்டாரங்களில் கூறப்படுகின்றன. தமிழர் பிரச்சினைக்கான தீர்வு, 13வது திருத்தச்சட்ட விவகாரம், அகதிகள் விவகாரம் என்பனவும் கூட, அமுங்கி விட்டன.
ஆக, இந்தியா அணுசக்தி உடன்பாட்டை செய்து கொண்டதைத் தவிர, மைத்திரிபால சிறிசேனவின் பயணத்தின் மூலம் இந்தியாவினால் வேறு எதையும் அடைய முடியவிலலை. ஆனால் இலங்கை அரசாங்கத்தினால், இந்தியாவிடம் இருந்து நிறைய விடயங்களை சாதித்துக் கொள்ள முடிந்திருக்கிறது. மகிந்த ராஜபக்சவின் நிலையுடன் ஒப்பிடுகையில், ஒருவகையில் இது மைத்திரிபால சிறிசேனவின் சாதனைதான்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnsyB.html

Geen opmerkingen:

Een reactie posten