[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 07:12.30 AM GMT ]
தற்போது லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள , நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஜனநாயக்க கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது குறை கூறியுள்ளனர்.
ஜனாதிபதி எதிர்வரும் 7ம் திகதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,
ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் போது எதிர்வரும் 11ம் திகதி, எலிசபெத் மகாராணியுடன் பகற்போசன விருந்தொன்றை உட்கொள்வதற்கு ஜனாதிபதிக்கு விசேட அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
ரணிலை குறைகூறிய சம்பிக்க, அனுர மற்றும் சரத் பொன்சேகா
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 07:45.53 AM GMT ]
பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய மிதக்கும் ஆயுத களஞ்சியத்தின் நடத்திய வந்த எவண் காட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர் நிஸ்சங்க சேனாதிபதி வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் குறை கூறியுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற தேசிய நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஊழல் விசாரணை பணியகத்தின் ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன, நிஸ்சங்க சேனாதிபதியின் சட்ட ஆலோசகராக பணியாற்றுவது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
எவண் காட் நிறுவனத்தின் உரிமையாளரது கடவுச்சீட்டை நீதிமன்றம் முடக்கிய பின்னர், அதனை பெற்றுக்கொடுக்க நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச மற்றும் பிரதமரின் ஆலோசகர் திலக் மாரப்பன ஆகியோர் தலையிட்டுள்ளதாக நிறைவேற்றுச் சபையில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு தண்டனை வழங்காவிட்டால், எவராவது தண்டனை வழங்கப்படுவதை தடுத்தால் அல்லது தடையேற்படுத்தினால், அது குறித்து நாங்கள் கட்டாயம் மக்கள் மத்தியில் சென்று அவர்கள் யார் என்பதை தெரியப்படுத்துவோம் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, எவண் காட் பாதுகாப்பு நிறுவனம் தனக்கு சொந்தமான மஹநுவர என்ற மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை நடத்திச் செல்ல தேவையான சகல அனுமதிப் பத்திரங்களையும் பெற்றிருந்தாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnu6F.html
சஜின்வாஸ் குணவர்தனவிடம் சரக்கு விமானம்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 07:02.27 AM GMT ]
பதிவு செய்யப்படாத போயிங் 727 ரக விமானத்தை சஜின்வாஸ் குணவர்தனவுக்கு சொந்தமான நிறுவனம் பயன்படுத்தி வந்துள்ளது.
இந்த விமானம் 2000 ஆம் ஆண்டு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் தமிழ் வர்த்தகர் ஒருவர் அதனை கொள்வனவு செய்திருந்தார்.
இந்த விமானம் இலங்கையில் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த விமானம் ஏரோ லங்கா என்ற பெயரில் இரத்மலானை மற்றும் யாழ்ப்பாணம் இடையில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது.
விமானத்தின் உரிமையாளர் விடுதலைப் புலிகளுக்கு உதவியாதாக 2010 ஆம் ஆண்டு குற்றம் சுமத்தப்பட்டதுடன் இடைப்பட்ட காலத்தில் சஜின்வாஸ் குணவர்தன விமானத்தை தனக்கு சொந்தமாக்கி கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நாளில் இருந்து இந்த விமானம் பதிவு செய்யப்படவில்லை என தெரியவருகிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த விமான நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, அதற்காக செலுத்த வேண்டிய கட்டணமும் இதுவரை செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான விசாரணைகள் ஆமை வேகத்தில்: ரில்வின் சில்வா குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 07:51.37 AM GMT ]
மொனராகலையில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கட்சியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய அவரின் பதவி காலத்தில் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வெலே சுதாவுடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதினால் அவரை கைது செய்ய முடியாது.
மேலும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக சில பாராளுமன்ற உறுப்பினர்களினதும், வேறு பலரது பெயர்களும் குறிப்பிடப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் இச்செயற்பாடுகள் அனைத்தும் ஆமை வேகத்திலேயே இடம்பெறுகின்றன எனவும், கஞ்சா பக்கெட்டுக்கள் மற்றும் பொதிகள் காணப்பட்டால் பொலிஸார் கைது செய்கின்றனர்.
அத்துடன் பாபுல் பக்கெட்டுக்கள் காணப்படின் ஓடிப்போய் ஆற்றில் குதிக்கும் வரை துரத்துகின்றனர்.
ஆனால் டொன் கணக்கில் குடு போதை பொருட்களை கொண்டு வருகின்றவர்களை கைது செய்வதற்கு தவறிவிடுகின்றனர் என ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnu6G.html
வணிக அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்த பிக்குமார்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 07:53.49 AM GMT ]
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சிற்குள் அத்து மீறி சென்ற பிக்குமார் ஆறுபேருக்கும் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கொழும்பு, மஜித்திரேஸ்ட் நீதிமன்றம் இவர்களுக்கு எதிர்வரும் 12 ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்களுக்கு அழைப்பாணை அவசியம் இல்லை, இந்த சந்தேக நபர்களை கைது செய்யவே நாம் நீதிமன்றை கோரியபோதும், அதற்கு இணங்காத மஜிஸ்ரேஸ்ட் திலின கமகே, கைது செய்யக்கூடிய குற்றம்தான் என்றாலும், அவர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் சுதந்திரமாக பணியாற்ற முடியும் என்று தெரிவித்ததாக சட்டத்ததரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.
கடந்த 2014 ஏப்ரல் மாதம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆயினும் இந்த வழக்கில் பொலிஸார் பக்கச் சார்பாக செயற்பட்டதால் தொடர்ந்து வழக்கு இழுத்தடிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தாம் தொடந்தும் பொலிஸாருக்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே இந்த வழக்கை தொடந்து முன்னெடுக்க அவர்கள் விருப்பம் காட்டியதாகவும், அதன் பிரதிபலனாகவே இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்ததரணிகளான மைத்திரி குணரத்தன, சிராஸ் நூர்தீன் மற்றும் சரத் சிறிவர்தன ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போதுதான் கட்சிக்குள் சுதந்திரம்: சுசில்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 08:08.41 AM GMT ]
முன்னாள் அரசாங்கத்தின் தலைமையின் கீழ் கட்சியை சரியான வழியில் இட்டுச் செல்வதற்கான பங்களிப்பை மற்றவர்கள் செய்ய இயலாத நிலையும், கட்சியின் ஏனையவர்களின் அபிப்பிராயங்களுக்கு செவிமடுக்காத சூழ்நிலையுமே காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது தம்மால் கடசிக்குள் சுதந்திரமாக இயங்க முடிவதாகவும் தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேறு விதமான செயற்திட்டம் அவசியப்படுவதாகவும் அதற்காக தற்போது தாம் தயாராகி வருவதாகவும் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் போன்றல்லாது பொதுத் தேர்தலுக்கான செயற்பாடு வேறு விதமாக அமைய வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்வரும் பொது தேர்தலில் வெற்றி பெறும் எனவும் கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
ஊழல்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அவசியம்
[ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015, 08:31.19 AM GMT ]
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமவீர தெரிவித்துள்ளார்.
ஊழலில் ஈடுபடும் நபர் யாராகவிருப்பினும் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும், அவர்கள் தொடர்பில் எவ்வித பாரபட்சமும் காட்ட கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை இலக்கு வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRaSUnu7A.html
Geen opmerkingen:
Een reactie posten