தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 februari 2015

துமிந்தவிற்கு எதிராக வழக்கு விசாரணைகள் விரைவில் ஆரம்பம்?- மகேஸ்வரன், ரவிராஜ் விசாரணைகள் பூர்த்தி

முன்னாள் பொலிஸ் பேச்சாளரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் கோத்தபாய!
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 01:19.44 AM GMT ]
அவுஸ்ரேலியாவில் இருந்து நேற்று நாடு திரும்பிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடியின் தம்மீதான குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச அக்குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணி குறித்த தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும், அதுபற்றிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், அதில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக இருப்பதாகவும், முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று நாடு திரும்பிய அவர், கலதாரி விடுதியில் ஊடகவியலாளர்களைச சந்தித்தார்.
அங்கு கருத்து வெளியிட்ட அவர், வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் கொலைகளின் பின்னணியில் சில இராணுவ அதிகாரிகளே இருந்தனர். இந்தக் குற்றங்களில் பொலிஸார் தொடர்புபட்டிருக்கவில்லை.
முன்னைய அரசாங்கம் தமது சட்டவிரோத காரியங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கின்ற ஒரு விளையாட்டுப் பொருளாகவே எம்மை பயன்படுத்த முனைந்தது. அதற்கு நான் உடன்பட மறுத்த போது என்னைப் பழிவாங்க முனைந்தனர்.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச என்னை பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து, தமது சட்டவிரோத உத்தரவுகளைச் செயற்படுத்தாமல், நியாயமான கடமைகளை ஆற்ற நினைத்தால், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று அச்சுறுத்தினார்.
என்னையும், எனது குடும்பத்தினரையும் கொலை செய்யப் போவதாக பல தொலைபேசி அழைப்புகளின் மூலம் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
அதுகுறித்து விசாரித்த போது, அவை பாதுகாப்புச் செயலரிடம் இருந்தே வந்தன என்பதை கண்டறிந்தேன் என்றும் அவர் கூறினார்.
எனினும், பிரசாந்த ஜெயக்கொடியின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று நிராகரித்துள்ளார் கோத்தாபய ராஜபக்ச.
பல ஆண்டுகளுக்கு முன்னரே  பொலிஸ் திணைக்களத்தில் இருந்து வெளியேறி விட்ட அவர், ஒருவேளை மீண்டும் அதில் இணைய விரும்பலாம். எவ்வாறாயினும், இது தற்போது நடந்து வரும் எமது பெயரைக் கெடுக்கும் பரப்புரையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


துமிந்தவிற்கு எதிராக வழக்கு விசாரணைகள் விரைவில் ஆரம்பம்?- மகேஸ்வரன், ரவிராஜ் விசாரணைகள் பூர்த்தி
[ வெள்ளிக்கிழமை, 27 பெப்ரவரி 2015, 01:04.48 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பாதுகாப்பு கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு எதிராக விரைவில் உயர்நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலை தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளன.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் துமிந்த சில்வா மற்றும் மேலும் சிலருக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்குத் தொடரப்படவுள்ளது.
மேலும் பலரது அவதானத்தை வென்ற சில சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊடகவியலாளர் லசந்த கொலை,  ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம்,  ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சில சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸாரிடமிருந்து புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரீ.மகேஸ்வரன், நடராஜா ரவிராஜ் போன்றவர்களின் கொலைச் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளும் பூர்த்தியாகியுள்ளன.
ரவிராஜின் கொலை தொடர்பிலான விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv1H.html


Geen opmerkingen:

Een reactie posten