தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

நானும் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளளேன்: உண்மையை போட்டுடைத்த சிரேஷ்ட விரிவுரையாளர் சன்னஸ்கல



கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 04:24.19 AM GMT ]
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது நூலக வீதி அல்-அமீன் சந்தியில் பொது மக்களால் கொட்டப்படும் குப்பைகளால் இப்பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதாகவும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் இவ்வீதியில் வசிக்கும் பிரதேச வாசிகள், பாடசாலை மாணவர்கள், பாதசாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதனால் இவ்விடத்தில் குப்பைகளை கொட்டாமல் தடை செய்யக்கோரி பிரதேசவாசிகள், மாணவர்களால் கல்முனை மாநகர சபைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு நேற்று முற்பட்ட வேளை ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கல்முனை பொலிஸார் மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர்.
கல்முனை மாநகர சபை, கல்முனை பொலிஸ் நிலையம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு மேற்படி கொண்டு வந்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதன் காரணமாகவே இப்போராட்டம் முன்னெப்பதற்கான முஸ்தீபுகளை பிரதேச மக்கள் மேற்கொண்டனர்.
இவ்வீதியில் அரச காரியாலயங்கள், அரச உயர் கல்வி நிலையங்கள், பாடசாலை, வைத்தியசாலை என்பன காணப்படுவதால் மக்களின் போக்குவரத்து அதிகமாக காணப்படும் வீதியாக இவ்வீதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ஸ்தலத்திற்கு வருகை தந்த சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் ஆகியோர் இவ்வீதியில் இன்றிலிருந்து குப்பைகளை கொட்டவிடாது தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என வழங்கிய உறுதி மொழி அடுத்து இக்கவனயீர்ப்பு போராட்டம் பொதுமக்களால் கைவிடப்பட்டதுடன் பிரதேச வாசிகளினால் இவ்விடயம் சம்பந்தமான மகஜரும் கையளிக்கப்பட்டது.
ஓரிரு தினங்களுக்குள் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுத்தர தவறும் பட்சத்தில் பிரதேச வாசிகளால் இன்று கைவிடப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என குறித்த அதிகாரிகளிடம் கூடியிருந்த மக்கள் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt7C.html

நானும் போலி ஆவணங்கள் தயாரித்துள்ளளேன்: உண்மையை போட்டுடைத்த சிரேஷ்ட விரிவுரையாளர் சன்னஸ்கல
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 05:44.42 AM GMT ]
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்வை கைது செய்தமை முற்றிலும் அசாதாரணமான ஒரு செயல் என சிரேஷ்ட விரிவுரையாளர் உபுல் ஷாந்த சன்னஸ்கல தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற சிங்கள தொலைகாட்சி நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நானும் எனது பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்ப்பதற்காக போலியான ஆவணங்கள் தயாரித்துள்ளேன். அப்படி ஷசி வீரவன்சவை கைது செய்வதென்றால் கொழும்பு ராஜகிரிய பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களையும் குறித்த குற்றத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் சிரேஷ்ட விரிவுரையாளர் உபுல் ஷாந்த சன்னஸ்கல தெரவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnt7F.html

Geen opmerkingen:

Een reactie posten