[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 07:41.42 AM GMT ]
யாழ். பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்கள் இணைந்து நடாத்தும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் வகையிலே வடக்கு மாகாண சபை 2 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 25வது அமர்வு இன்று நடைபெறும் நிலையில் ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் பேரணியும் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது.
சபை அமர்வு காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. சபையில் உறுப்பினர் ரவிகரன் குறித்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வந்தார்.
அதனடிப்படையில் ஏகமனதாக பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டு சபை 2 மணித்தியாலங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
19 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 08:13.10 AM GMT ]
இவர்கள் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய கடல் எல்லையை தாண்டி குமரியிலிருந்து 60 கடல் மைல் தொலைவில் இலங்கை மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளும் இந்திய கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல்: எவ்வாறு நட்பு நாடாகும்? சீமான் கேள்வி
[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 08:28.11 AM GMT ]
புதுக்கோட்டை மாவட்ட வடகாடு அருகிலுள்ள புள்ளான் விடுதியில் இடம்பெற்ற விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வரக்கூடாது என இலங்கை அரசாங்கம் நிர்ப்பந்தித்து வருகின்றது.
கடல் மார்க்கத்தில் எல்லை தாண்டி வரக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை, அத்துடன் கடலுக்குள் சென்ற பிறகு எல்லையும் பார்க்க முடியாது என அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழக மீனவர்களை கைது செய்து தொடர்ந்தும் சித்திரவதைப்படுத்தி வருகின்றது, இந்நிலையில் இலங்கையை எவ்வாறு நட்பு நாடாக முடியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRYSUnt1I.html
Geen opmerkingen:
Een reactie posten