தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

ஸ்கொட் மொரிசன், த.தே.கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்தது இராஜதந்திர முறைகளுக்கு எதிரானது!- ரணில்

உரிய சாட்சியங்களுடன் ஊழல் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்: அமைச்சர் ஹர்ச டி சில்வா
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 09:20.02 AM GMT ]
ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சரியான சாட்சியங்கள் முன்வைக்கப்படாமல் நபர்களை கைது செய்து வழக்கு தாக்கல் செய்வதானது அவர்கள் இலகுவாக விடுதலையாக வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் என கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க தேவையான சாட்சியங்களுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் மைத்திரிபால சிறிசேனவும் அவருக்கு ஆதரவு வழங்கிய தரப்புகளும் ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக ஊழல், மோசடி உட்பட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
எனினும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என அமைச்சர் ஹர்ச டி சில்வாவிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விடயம் சம்பந்தமாக நான் பிரதமருடன் அண்மையில் பேசினேன். குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, கடந்த அரசாங்கத்தின் ஊழல், மோசடிகள் சம்பந்தமான சாட்சியங்களை சேகரித்து வருகிறது.
கடந்த காலங்களில் நான் வெளியிட்ட மோசடியான கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக மேலும் தகவல்களை பெறமுடிந்துள்ளது. அடுத்த சில தினங்களில் அவற்றை பகிரங்கப்படுத்த எண்ணியுள்ளேன்.
இதுவரை எவரும் அறியாத பல ஊழல் மோசடிகள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் ஹர்ச டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns5C.html

ஸ்கொட் மொரிசன், த.தே.கூட்டமைப்பினரை சந்திக்க மறுத்தது இராஜதந்திர முறைகளுக்கு எதிரானது!- ரணில்
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 09:28.44 AM GMT ]
முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருக்கு மிகவும் நெருக்கமாக அவுஸ்திரேலியா அரசாங்கம் செயற்பட்டதன் காரணமே புதிய அரசியல் மாற்றம் சம்பந்தமாக மௌனம் காக்கின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேலும் அவுஸ்திரேலியா பிரதமர் டொனி அப்பொட்டிற்கும் மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கும் உள்ள நெருக்கம் இலங்கை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவுஸ்திரேலியா ஊடகத்திற்கு அளித்துள்ள விசேட பேட்டியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை தடுத்து நிறுத்துவதில் ராஜபக்சவினரின் உதவியை பெறுவதற்காக அவர்களின் மனித உரிமை மீரல்கள் குறித்து மௌனமாக இருப்பதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளதாகவும் ரணில் குற்றம் சுமத்தினார்.
முன்னைய அரசிற்கு மிக வேண்டியவர்ளே புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவியை மேற்கொண்டார்கள். இதில் பொலிஸ், இராணுவத்தினரின் ஒத்துழைப்பு இன்றி இவ்வாறான செயல்பாடுகள் சாத்தியமில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
எனினும் இலங்கையில் புதிய அரசு சட்டவிரோத படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்லும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் என்றும் ராஜபக்ச அரசாங்கம் அதனை செய்யவில்லை என்றும் இந்த நடவடிக்கைகள் மூலம் ஏதோ நலனைப்பெற ராஜபக்சவினர் முயன்றுள்ளனர்.
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட வேளை அப்போதைய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தரப்பினரை சந்திக்க மறுத்ததன் மூலம் இராஜதந்திர நடைமுறைகளை பின்பற்ற தவறினார் என்றும் இதன் காரணமாக தற்போதைய குடிவரவுத்துறை அமைச்சருக்கு உரிய மரியாதை அந்த கட்சியிடமிருந்து கிடைக்காது போகலாம்.
நான் அவுஸ்திரேலியாவிற்கு எதிரானவன் அல்ல என்றும் ஆனால் அவுஸ்திரேலிய அனுபவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் வேறுசில நாடுகளும் ராஜபக்ச அரசாங்கம் மனித உரிமைகளை நசுக்கிய காலத்தில் சில சர்வதேச நாடுகள் மௌனமாக இருந்ததாகவும் பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns5D.html

Geen opmerkingen:

Een reactie posten