தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 22 februari 2015

சம்பூரில் நிலக்கடலை தோட்டத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

மஹிந்த ஆதரவாளர்கள் வரவு-செலவுத் திட்ட நன்மைகளை அனுபவிக்க கூடாது: சம்பிக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 04:35.18 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வரவு-செலவுத் திட்ட நன்மைகளை அனுபவிக்கக் கூடாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இன்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அரசியலில் கொண்டு வர எத்தனிக்கும் தரப்பினர், புதிய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட நன்மைகளை அனுபவிக்க முடியாது.
அந்த நன்மைகளை அனுபவிக்கும் தகுதி அவர்களுக்கு கிடையாது. அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பல்வேறு நன்மைகளை அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாடு எதனை நோக்கி நகர்கின்றது என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு கேகாலையில் இன்று நடைபெற்றது.

கெவிளியாமடு பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வழி செய்யுமாறு கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 05:23.00 PM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடு கறுவாச்சோலை கிராமத்தில் மீளக்குடியமர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் மீள்குடியேற்ற அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவில் கெவிளியாமடுவிலுள்ள கறுவாச்சோலைக் கிராமத்தில் 104 தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்துள்ளனர்.
1986ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் காரணமாக அங்கு வாழ்ந்து வந்த 104 குடும்பங்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மாவடிமுன்மாரியில் இரண்டு வருடங்களும், களுதாவளை, தேத்தாத்தீவுக் கிராமங்களில் ஐந்து வருடங்களும் ஏனைய காலப்பகுதிகளை அவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் வசித்து வந்துள்ளனர்.
மீண்டும் 2011ம் ஆண்டு மீளக்குடியமர வரும்போது 40 குடும்பங்களின் காணிகள் ஏனைய சமூகத்தைச் சேர்ந்தவர்களால் விவசாயச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தது. இக் காரணத்தினால் முழுமையாக இக்குடும்பங்களை குடியேற்ற முடியாமல் அண்ணளவாக 25 குடும்பங்கள் மட்டுமே மீளக் குடியமர்த்தப்பட்டனர்.
மீளக் குடியமர்ந்த குடும்பங்களுக்கு மட்டும் ரூபா 100.000 (இலட்சம்) பெறுமதியான தற்காலிக வீடுகளும், விவசாயம் செய்வதற்கான விதை நெல்லும், மேட்டுப் பயிர் செய்வதற்காக உழுந்து பயறு, கௌப்பி, வேலி அமைப்பதற்குரிய முட்கம்பிகள் முதலானவை வழங்கப்பட்டிருந்தன. ஏனைய தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறி விவசாயம் செய்து வந்தவர்கள், மீண்டும் காணிகளை மீள ஒப்படைக்காத நிலையிலும் வீதி அமைப்பு, மின்சாரவசதி, நிரந்தர வீடு, காட்டு யானைகளின் நெருக்கடி, போக்குவரத்து வசதியின்மை போன்று பல்வேறு காரணங்கள் காரணமாகவும் மீண்டும் 2013ம் ஆண்டு காட்டு யானைகளின் மிகமோசமான தாக்குதல்களின் காரணமாகவும் மீண்டும் இடம் பெயர்ந்தனர்.
தற்சமயம் இரண்டு குடும்பங்களே வசித்து வருகின்றனர். ஏனைய குடும்பங்கள் மீளக்குடியமர ஆர்வமாக உள்ளனர்.
எனினும் கெவிழியாமடுவுக்கு அருகில் உள்ள பெரும்பான்மையின மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் காணிகள் அத்துமீறிய வகையில் பிடிக்கப்பட்டடே வருகின்றன.
எனவே கெவிலியாமடு கறுவாச்சோலைக் கிராமத்தில் மீண்டும் இம் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு
1) அடாத்தாக இவர்களுடைய காணிகளை பிடித்தவர்களிடமிருந்து மீண்டும் உரிமையாளர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுத்தல்.
2) யானைகளிடமிருந்து பாதுகாப்பதற்கு மின்சாரவேலி அமைத்தல்
3) போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தல்
4) வீதிகளை அமைத்துக் கொடுத்தல்
5) வாய்க்கால்களுக்கு சிறிய பாலங்களை அமைத்தல்.
6) மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல்
7) நிரந்தர வீட்டுத்திட்டம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தல்.
8) குடிநீர் வசதியை ஏற்படுத்தும் முகமாக கிணறுகளை அமைத்துக் கொடுத்தல்.
9) ஆறு மாதத்திற்கான உலர் உணவுவசதியை வழங்குதல்.
10) நிரந்தரமாக விவாசாயம் செய்வதற்கான உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற விடயங்களை திட்டமிட்டு முன்னிலைப்படுத்தி இவர்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUns1I.html


சம்பூரில் நிலக்கடலை தோட்டத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 05:45.46 PM GMT ]
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸார் பிரிவுக்குட்பட்ட சம்பூர் அம்மன் நகர் பகுதியில் இன்று பகல் பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த ஆயுதங்கள் தனியார் காணியொன்றிலுள்ள நிலக்கடலை தோட்டத்திலிருந்தே மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது மிதிவெடி, புலிக்கொடி, ரீ56 ரக மெக், எஸ்.ஜீ.ரவுண்டஸ், கிரனைட், கிளைமோர், டெட் நைட்டர், ஆட்லரி சாச்சர் கூர், டொம்பா ரவுண்ஸ், கிளைமோர் ரிமோட், மோட்டார்கன் பியூஸ், ரீ56 துப்பாக்கி ரவைகள் 1069 போன்றன மீட்டகப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
மூதூர் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்களை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUns1J.html

Geen opmerkingen:

Een reactie posten