தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

புலம்பெயர் தமிழர்களை பார்த்து படு கேவலமாக பேசியுள்ள சுமந்திரன் !

புலம்பெயர் தமிழர்களை பார்த்து மிகவும் கேவலமாக திட்டி தீர்த்துள்ளார் சுமந்திரன் MP. தேர்தலில் போட்டியிடாமல் பின் கதவால் MP ஆகிய சுமந்திரன், லண்டனில் உள்ள ஒரு கோஷ்டி நடைபயணத்தை மேற்கொள்கிறது. அவர்கள் தான் தீர்மானத்தை எரித்தார்கள் என்று கூறியுள்ளார். புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் , கடும் குளிர் மற்றும் மழை என கால நிலையைக் கூட பாரமல் எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். இறுதியில் நடந்தது போர் குற்றமே என்று வெளிநாடுகள் மற்றும் ஐ.நா போன்ற அமைப்புகள் சொல்ல , புலம்பெயர் தமிழர்களே காரணம். அவர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நடை பயணங்கள் தான் சர்வதேசம் எம்மை திரும்பிப் பார்க வைத்தது.
அப்படி இருக்க, இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியலில் வந்த சுமந்திரன் எவ்வாறு இப்படி பேச முடியும் ? இவர் கூறிய கருத்துக்களுக்கு இவர் உடனடியாக புலம்பெயர் தமிழர்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அத்தோடு கடும் குளிரில் கூட ஜெனிவா வரை நடைபயணத்தை மேற்கொள்ளும் தமிழ் இளைஞர்களை சுமந்திரன் தரக்குறைவாகப் பேசியுள்ளார். ஏதோ ரவுடிக் கும்பலை அழைப்பது போல "கோஷ்டி" என்ற சொல்லைப் பாவித்து கொச்சைப்படுத்தியுள்ளார். எந்த ஒரு போராட்டத்திலும் கலந்துகொள்ளாமல் , காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டு இருந்து பேசும் இவருக்கு தமிழர் போராட்டம் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது.
இதனை சில தமிழ் இணையங்கள் மூடி மறைத்து விட்டது. கண்மூடித்தனமாக தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கும் இந்த இணையங்கள் தான் சுமந்திரன் பேசியதை வெளியிடவே இல்லை. இவ்வளவு பேசும் சுமந்திரன் என்ன செய்தார் ? அரசியல் கைதிகளை வெளியே எடுத்து விட்டாரா ? நிலங்கள் பறிபோனபோது வழக்கு தொடுத்தாரா ? இல்லை சுண்ணாகத்தில் 100 அடிக்கு துளைபோட்டு கழிவு எண்ணையை விட்டார்களே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாரா ?
http://www.athirvu.com/newsdetail/2378.html

Geen opmerkingen:

Een reactie posten