தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 23 februari 2015

மகிந்த ராஜபக்ச இனவாதத்தை பரப்புகிறார்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க

விமல் வீரவன்ஸவின் வயதையும் ஐந்து வருடங்களில் குறைப்பு
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 11:30.45 AM GMT ]
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தனது பிறந்த திகதியை மாற்றியுள்ளதாக ரகசிய பொலிஸார் இன்று நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் 1965.03.07ஆம் திகதி பிறந்துள்ளார் எனினும் அவர் 1970.03.07ஆம் திகதி என அதாவது ஐந்த வருடங்களில் தனது பிறந்த வருடத்தை குறைத்துள்ளார்.
அதே போன்று அவரது மனைவி ஷசி வீரவன்ச நான்கு வருடங்களுக்கு தனது வயதை குறைத்துள்ளார். 1967.02.01 ஆம் திகதி பிறந்தவர் 1971.02.03 ஆம் திகதிக்கு மாற்றியுள்ளார்.
அவர்கள் இவ்வாறாக பிறந்த திகதியை மாற்றியிருப்பது தங்களது பிள்ளைகளின் பிறப்பு சான்றிதள்களில் பதிவாகவில்லை என ரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
விமல் வீரவன்ஸவின் மனைவி சிரிஜா உதயங்கனி என்ற பெயரில் பெற்றுக்கொண்ட தேசிய அடையாள அட்டையின் இலக்கம் 675320233, மேலும் செஹாஷா உதயங்கனி என்ற பெயரில் பெற்றுக்கொண்ட அடையாள அட்டையின் இலக்கம் 715344696 என குறிப்பிடப்படுகின்றது.
விமல் வீரவன்சவின் வயதினை ஐந்து வருடங்களாலும் அவரது மனைவியின் வயதினை நான்கு வருடங்களினாலும் குறைத்துள்ளதாக ரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns6G.html

மகிந்த ராஜபக்ச இனவாதத்தை பரப்புகிறார்: பிரதமர் ரணில் விக்ரமசிங்க
[ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 11:37.54 AM GMT ]
மகிந்த ராஜபக்ச தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக இனவாதத்தை பரப்பி வருகிறார் எனவும், அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இனவாதத்தை கொண்டு வர முயற்சித்தால், அதற்கும் எங்களிடம் பதில் இருக்கின்றது. சில சிங்கள பத்திரிகைகள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை பரப்பி வருகின்றன.
இனவாதத்தை பரப்பும் அந்த பத்திரிகைகளுக்கு எதிராக மாபெரும் கூட்டத்தை கொழும்பில் நடத்தி வீதியில் இறங்குவோம்.
மகிந்த ராஜபக்சவுக்கு கடந்த காலத்தில் ஆதரவாக செயற்பட்ட சில சிங்கள பத்திரிகைகள் மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படும் எனக் கூறி இனவாதத்தை பரப்பி வருகின்றன. இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதால், அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக சில இலத்திரனியல் ஊடகங்கள் என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற கடும் தாக்குதல்களை தொடுத்தன. எனினும் என்னை அரசியலில் இருந்து அவர்களால் வெளியேற்ற முடியவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRXSUns6H.html

Geen opmerkingen:

Een reactie posten