தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 24 februari 2015

சாய்ந்தமருதில் போராட்டம்….

வீரவன்ச மனைவியின் கள்ள கடவுச் சீட்டு சிக்கியது…

இதற்கிடையில், போலியான தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச் சீட்டை பெற்றுக் கொண்டமைக்காக வீரவன்சவின் மனைவி சசீ வீரவன்ச நேற்று இரவு மாலபே வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.


அவர் வைத்தியசாலையிலேயே பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவரை சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு மாற்ற இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Sashi-Weerawansa-passport

மகிந்தவுடன் சதியில் ஈடுபட்ட முக்கியஸ்தர்கள் பெயர்கள் அம்பலம்

அன்றைய தின இரவு அலரிமாளிகை சதித்திட்டத்தில் மவ்பிம பத்திரிகையின் ஆசிரியர் துஷார குணரத்ன,ஞாயிறு லங்காதீப ஆசிரியர் ஆரியனந்த தொம்பகஹவத்த(இவர் முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.),
தேசய பத்திரிகையின் ஆசிரியர் ரஞ்சித் ஆனந்த ஜயசிங்க மற்றும் வானொலி பண்பலை ஒன்றின் பணிப்பாளரான ஹேமந்த ஆகியா ஊடகவியலாளர்களிடமே இரகசியப் பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்,மேல்மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில,கோதாபய ராஜபக்ஷ, முன்னாள்அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் நேரடியாக இச்சதித்திட்டத்தின் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கெதிராக மேல்நீதிமன்றில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தொடர்பாக நீதிபதி குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் நீதிபதிகளின் திணைக்கள உள்ளக தகவல்கள் தெரிவிப்பதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. jou


சாய்ந்தமருதில் போராட்டம்….

இதனால் இவ்விடத்தில் கழிவுக் குப்பைகளை கொட்டாமல் தடை செய்யக்கோரி பிரதேசவாசிகள், மாணவர்களால் கல்முனை மாநகர சபைக்கு எதிராக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவதற்கு நேற்று (24) செவ்வாய்க்கிழமை முற்பட்ட வேளை ஸ்தலத்திற்கு விஜயம் செய்த கல்முனை பொலிஸார் மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர்.
கல்முனை மாநகர சபை, கல்முனை பொலிஸ் நிலையம், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோரின் கவனத்திற்கு மேற்படி கொண்டு வந்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதன் காரணமாகவே இப்போராட்டம் முன்னெப்பதற்கான முஸ்தீபுகளை பிரதேச மக்கள் மேற்கொண்டனர்.
இவ்வீதியில் அரச காரியாலயங்கள், அரச உயர் கல்வி நிலையங்கள், பாடசாலை, வைத்தியசாலை என்பன காணப்படுவதால் மக்களின் போக்குவரத்து அதிகமாக காணப்படும் வீதியாக இவ்வீதி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ஸ்தலத்திற்கு வருகை தந்த சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.பாறூக், கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் ஆகியோர் இவ்வீதியில் இன்றிலிருந்து குப்பைகளை கொட்டவிடாது தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என வழங்கிய உறுதி மொழி அடுத்து இக்கவனயீர்ப்பு போராட்டம் பொதுமக்களால் கைவிடப்பட்டதுடன் பிரதேச வாசிகளினால் இவ்விடயம் சம்பந்தமான மகஜரும் கையளிக்கப்பட்டது.
ஓரிரு தினங்களுக்குள் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்;வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுத்தர தவறும் பட்சத்தில் பிரதேச வாசிகளால் இன்று கைவிடப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என குறித்த அதிகாரிகளிடம் கூடியிருந்த மக்கள் தெரிவித்தனர்.Santamarutu 1Santamarutu 2Santamarutu 3Santamarutu


http://www.jvpnews.com/srilanka/98551.html

Geen opmerkingen:

Een reactie posten