தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 februari 2015

ஐரோப்பிய யூனியனின் கொள்கை வகுப்பாளர்களுடன் சிவாஜிலிங்கம் உட்பட புலம்பெயர் பிரதிநிதிகள் கலந்தாய்வு

போராட்டம் காரணமாக பொரளைப் பகுதியில் பாரிய போக்குவரத்து நெரிசல்
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 11:16.21 AM GMT ]
போராட்டம் காரணமாக பொரளைப் பகுதியில் பாரியளவில் போக்குவரத்து நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பொரளை பொதுமயான சந்தி மற்றும் வோர்ட் பிளேஸ் ஆகிய இடங்களில் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றின் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவீடு செய்வது தொடர்பிலான சுற்று நிருபத்திற்கு எதிராகவே இவ்வாறு போராட்டம் நடத்தப்படுவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் நாஜீத் இந்திக்க தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டப் பேரணி கோட்டே ரயில் நிலையம் வரையில் செல்ல உள்ளதாக நாஜீத் இந்திக்க குறிப்பிட்டுள்ளார்.
சுற்றறிக்கையை மீறி பாடசாலைகளில் பணம் அறவீடு - கல்வி அமைச்சு
பாடசாலைகளில் அநாவசியமாக பணம் அறவிடுவதை தடுக்கும் வகையில் விடுக்கப்பட்ட சுற்றறிக்கையையும் மீறி சிலர் பணம் அறவிடுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறான பணம் அறவிடுவதாக பல பகுதிகளில் இருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
அரசாங்க பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் போதும் பாடசாலை மாணவர்களிடமும் அநாவசிய பணம் அறவிடுவதை தடுக்கும் வகையில் கல்வி அமைச்சு கடந்த மாதம் 29ம் திகதி விசேட சுற்றறிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுற்றறிக்கையை மீறி பணம் அறவிடப்படுவதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.
முறைப்பாடு தொடர்பாக 10 பேர் குறித்து இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனோடு தொடர்புடைய தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களை பாடசாலைகளில் இருந்து இடம் மாற்றல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்: அரநாயக்க பிரதேச சபையில் யோசனை
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 11:29.44 AM GMT ]
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ச நிறுத்தப்படாது போனால், ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியை பெறுவார் என அரநாயக்க பிரதேச சபையின் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என அரநாயக்க பிரதேச சபையில் யோசனை ஒன்றையும் அவர்கள் நிறைவேற்றியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் அஜந்த திஸாநாயக்க யோசனையை முன்வைத்ததுடன் அதே கட்சியை சேர்ந்த என்.எஸ். சோமவர்தன அதனை வழிமொழிந்தார்.
மகிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படாவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டு, ஐக்கிய தேசியக் கட்சி கட்டாயம் வெற்றி பெறும்.
இதனால், கட்சியை பாதுகாக்கவும் வெற்றி பெற செய்யவும் மகிந்தவுக்கு பொதுத் தேர்தலில் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என யோசனை முன்வைத்து உரையாற்றிய திஸாநாயக்க தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu1G.html

சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்படும்: தலதா அதுகோரல
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 11:59.08 AM GMT ]
சட்டவிரோத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்படும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
பதிவு செய்யப்படாது இரகசியமான முறையில் இயங்கி வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்தவிதமான தகுதியும் தராதரமும் பாராது இவ்வாறு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வோர் விமான நிலையத்தில் எதிர்நோக்கி வரும் சிரமங்கள் குறித்து உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு இன்று விஜயம் செய்திருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


ஐரோப்பிய யூனியனின் கொள்கை வகுப்பாளர்களுடன் சிவாஜிலிங்கம் உட்பட புலம்பெயர் பிரதிநிதிகள் கலந்தாய்வு
[ புதன்கிழமை, 25 பெப்ரவரி 2015, 12:03.07 PM GMT ]
ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை பின் தள்ளப்பட்டதை கண்டித்து தாயகத்திலும் புலத்திலும் போராட்டங்கள் நடைபெற்ற நேரத்தில், ஐரோப்பிய யூனியனின் கொள்கை வகுப்பாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நிரந்தர உறுப்பினர் நாடுகளுடன் கலந்தாய்வு நடைபெற்றது.
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி செல்லும் விடுதலைச் சுடர் ஸ்ராஸ்பூர்க் நகரத்தை தொடர்ந்து நேற்றைய தினம் பெல்ஜியம் தலைநகரை வந்தடைந்தது. மதியம் 2 மணியளவில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்னர் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது.
தாயகத்தில் யாழ்.பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொதுஜன அமைப்புக்களும் இணைந்து, ஐ.நா விசாரணை அறிக்கை தாமதப்படுத்தியதால் கடும் வேதனை அடைந்துள்ளதை காட்டவும் ஐ.நா எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதில் தமது எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை காட்டவும் போராட்டம் நடத்து கொண்டிருந்த நேரத்தில், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், ஐரோப்பிய அங்கத்துவ நாடுகளின் நிரந்தர காரியாலயத்திலும், ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் காரியாலயத்திலும் பல சந்திப்புகள் பெப்ரவரி 23 ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெற்றது.
ஐரோப்பிய அங்கத்துவ நாடும், பொதுநலவாய அங்கத்துவ நாடாகிய மல்ட்ட நாட்டு பிரதிநிதியுடனும், யேர்மனி, இத்தாலி நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன், ஐரோப்பிய கொமிசன் பிரதிநிதிகளுடனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை மக்கள் பிரதிநிதியுமாகிய சிவாஜிலிங்கம் மற்றும் அனைத்துலக ஈழத் தமிழர் மக்கள் அவை பிரதிநிதிகளும், ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் வட மாகாண சபையின் இனப்படுகொலைக்கான பிரேரணை, ஆட்சி மாற்றத்தின் பின் இன்றைய சிறிலங்கா, ஈழத் தமிழர்களுக்குரிய நீதியான சர்வதேச விசாரணை, அரசியல் தீர்வு, போன்ற விடயங்கள் கலந்தாய்வு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, ஈழத் தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் காக்கப்பட வேண்டும், ராணுவம் வெளியேற்றப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், காணாமல் போன்றோர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும், மக்ககளின் காணிகள் திருப்பி அளிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமை காக்கப்பட வேண்டும், இவற்றை சிறிலங்கா அரசு செய்யும் என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் இடையே இல்லை என்பதை சந்திப்பின் போது எடுத்துரைக்கப்பட்டது.
அங்கே தொடர்ச்சியாக ஒரு இனப்படுகொலை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது, அவை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தியதோடு  தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வை, ஈழத்தில் வாழும் தமிழ் மக்களும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுமே தீர்மானிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறப்பட்டதோடு மனுவும் கையளிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmtyCRZSUnu1J.html

Geen opmerkingen:

Een reactie posten