கூட்டமைப்பில் பிளவு…??
சர்வதேச விசாரணையில் சிறிலங்காவில் 1948ம் ஆண்டு முதல் இடம்பெற்று வரும் தமிழின அழிப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் கொண்டு வரப்பட்ட இந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையை ஏற்க மறுத்து வந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், தற்போது அதனை வரவேற்றுள்ளார்.
எனினும் இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/97375.html
நொதேர்ண் பவர் நிறுவனத்திற்கு மீண்டும் ஆப்பு…
இதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆயராகிய சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சர்வதேச அமைப்பாளருமான மணிவண்ணன் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த விண்ணப்பத்தினை; மீண்டும் நிராகரித்ததுடன் மல்லாகம் நீதவான் நீதிமன்ற வழக்கேட்டினை மேல் நீதி மன்றில் பாரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனது பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி அனைத்து தரப்புக்களினையும் வளைத்துப்போட நொதேர்ண் பவர் நிறுவனம் முற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/97378.html
நாவற்குழியில் டக்ளஸ் தலைமையில் ஊழல்
நாவற்குழி புதிய குடியிருப்பு பகுதியில் 110 தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவர்களிற்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை. அருகில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு செய்யப்படுகின்ற உதவிகளில் சிறிதளவு கூட அவர்களிற்கு செய்யப்படுவதில்லை.
வாழ்வாதாரம் அற்ற நிலையில் வீட்டு திட்டங்கள் கூட வழங்கப்படாத நிலையில் இப்பகுதியில் அக்குடும்பங்கள் வாழ்கின்றன
தம்மை இங்கு குடியேற்றும் போது எமக்கு மாளிகைகள் கட்டி தருவது போல கூறியே எம்மை இங்கு அழைத்து வந்து குடியேற்றினார்கள். ஆனால் இதுவரை மலசலகூடம் கூட எமக்கு கட்டித்தரவில்லை. இப்போது தான் டக்ளஸ் போன்றவர்கள் தங்களின் அரசியல் சுயலாபத்துக்காக எம்மை இங்கு கொண்டுவந்து குடியேற்றியுள்ளார்கள் என்பது எமக்கு தெரிகின்றதெனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதனிடையே நாவற்குழியில் வழங்கப்பட்ட காணிகள், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரினால் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு யாழ்ப்பணத்துக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோர், குருநகரிலுள்ள ஐந்து மாடிக் கட்டட புனரமைப்பு விழாவில் கலந்துகொண்ட போது நாவற்குழியில் உள்ள வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியை 7பேருக்கு பங்கீடு செய்து காணி உறுதிகள் வழங்கி இருந்தனர்.
அன்றைய தினம் அவர்களால் வழங்கப்பட்ட அந்தக் காணி உறுதிகள் போலியானவை. அவை கொழும்பில் இருந்து இராணுவ தரப்பினரால் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு மக்களுக்கு கையளிக்கப்பட்டவை ஆகுமென்பது கண்டறியப்பட்டுள்ளது. உறுதிகள் தொடர்பில் சாவகச்சேரி பிரதேச செயலாளரிடம் வினாவிய போது குறித்த உறுதிக்கும் பிரதேச செயலகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும் அதேபோன்று மாவட்ட செயலகத்துடன் தொடர்புகொண்ட போது அவ்வாறு உறுதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் எந்த பதிவுகளும் இங்கில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/97382.html
Geen opmerkingen:
Een reactie posten