தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 februari 2015

திருப்பி அனுப்பப்படும் புகலிட கோரிக்கையாளர்கள்: மகிந்த அரசின் கொள்கைகளை பின்பற்றும் மைத்திரி

அவுஸ்திரேலிய மக்களுக்கு மனுஸ் தீவு முகாம் அகதிகளின் கண்ணீர் கடிதம்!!
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015, 07:51.41 AM GMT ]
அவுஸ்திரேலியாவின் கடும்போக்கு அகதிக் கொள்கை காரணமாக கடந்த ஆண்டு தற்கொலை செய்த ரேஸா பாராட்டி யின் நினைவு நாள் நடைபெற்று கொண்டிருக்கும் போது மனுஸ் முகாமில் இருக்கும் அனைத்து அகதிகள் சார்பிலும் இந்த கடிதத்தை எழுதுகின்றோம்.
அவுஸ்திரேலியா மக்களுக்கு,
நாம் எமது நாட்டில் இருந்து வலுக்கட்டாயமாக கடல் மார்க்கமாக வரவில்லை, எங்களது நாடுகளில் நடக்கின்ற அசம்பாவித சம்பவங்களால் தான் வேறு வழியில்லாமல் கடல் மார்க்கமாக வந்தோம்.
அதற்காக எங்களை மனுஸ் தீவில் வைத்து சித்திரவதைக்கு ஒப்பான முகாம்களில் அடைத்து வைத்திருப்பது சரியா?
எமக்கு பிரச்சினை இல்லை என்றால் நாங்கள் ஏன் கடல் மார்க்கமாக வரவேண்டும், சட்டரீதியாக விமானங்கள் மூலம் வந்திருப்போம், எமது சந்தர்ப்பம் சூழ்நிலை எம்மைப் படகு மூலம் வரவைத்தது.
நாங்களும் உங்களைப் போன்று மனிதர்கள், ஆண்கள் ,பெண்கள், சிறுவர்கள் என குடும்பமாக இருக்கின்றோம் எம்மைப் பற்றியும் சற்று கருணை காட்டுங்கள்.
நாம் 20 மாதங்கள் நரகத்தில் இருந்து வருகின்றோம், எமக்கு நடப்பதை பார்த்தால் விலங்குகளுக்கு கொடுக்கின்ற மதிப்பை விட எம்மை அடிமை போன்று நடத்துகின்றனர்.
எங்களில் இருவர் தங்கள் உயிர்களை இழந்ததால் நாம் பாரிய மனக் காயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்.
இதற்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினோம், எமக்கான உரிமையை வலியுறுத்திய போது எம்மில் சிலர் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
சிறையில் வைத்து நாய்கள் போல் தாக்கப்பட்டு இதுதான் அமெரிக்க சித்திரவதை என கூறினார்கள், உங்களது நாட்டுக்கு திரும்பிச் செல்லுங்கள் என எம்மை திணிக்கின்றனர்.
தற்போதும் எமது நாட்டில் எமது குடும்பங்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் நாங்கள் திரும்பிச் சென்றால் எமக்கு என்ன நடக்கும் என்பது எமக்கே தெரியாது.
எமக்காக கருணை காட்டுங்கள், இங்குள்ள அனைவரும் எமது கையொப்பத்தை இட்டு உங்களுக்கு அனுப்புகின்றோம், ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் மரணத்தின் விளிம்பில் இருக்கின்றோம், எம்மை காப்பாற்றுங்கள்.
அத்தோடு எமக்காக வாதாடும் சட்ட வல்லுநர், வெள்ளை இனத்தை சேர்ந்த அகதி அமைப்புகள், அனைத்து ஊடகங்களும் எமக்காக கருணை காட்டுகிறனர்.
மக்களாகிய நீங்களும் எம்மை நரகத்தில் இருந்து மீட்டு எமக்கு மறுவாழ்வு அழியுங்கள்!
இது மனுஸ் தீவில் உள்ள அனைத்து அகதிகளின் கண்ணீர் கடிதம்!!
http://www.tamilwin.com/show-RUmtyCRUSUnq4G.html


திருப்பி அனுப்பப்படும் புகலிட கோரிக்கையாளர்கள்: மகிந்த அரசின் கொள்கைகளை பின்பற்றும் மைத்திரி
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015, 08:17.00 AM GMT ]
வெளிநாடுகளில் புகலிடம் கோர முயற்சிகளை மேற்கொண்டு திருப்பி அனுப்படுபவர்கள் தொடர்பில் கடந்தகால அரசாங்க நடைமுறைப்படுத்திய கொள்கைகளையே தற்போதைய அரசாங்கமும் பின்பற்றும்.
அவுஸ்திரேலியாவிலிருந்து நேற்றைய தினம் புகலிட கோரிக்கையாளர்கள் நால்வர் நாடு திரும்பியதையடுத்தே நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு திரும்பும் புகலிட கோரிக்கையாளர்கள் வழமைபோன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு திருப்பியனுப்பபடுபவர்கள் கொழும்பு விமான நிலையத்தில் அல்லது துறைமுகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படுவர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு குறித்த புகலிடகோரிக்கையாளர்கள் மீது சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறிய குற்றச்சாட்டு சுமத்தப்படும்.
அத்துடன் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து கொள்கை மாற்றமொன்றை மேற்கொள்ளும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கில்லாத பட்சத்தில் இதுகுறித்து ஆராயவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நேற்றைய தினம் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ள நால்வரையும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நடுக்கடலில் வைத்து விசாரணை செய்துவிட்டு இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தமையும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடுக்கடலில் வைத்து புகலிடக்கோரிக்கையாளர்களை விசாரணை செய்யும் நடைமுறை குறித்து அவுஸ்திரேலியாவிலும், சர்வதேச அளவிலும் கடந்த காலங்களில் பலத்த கண்டனங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த நடவடிக்கை சரியானது என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும், இந்நடைமுறைக்கு யு.என்.எச்.சீ.ஆர் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், இவ்விசாரணை தரையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும் புகலிடக்கோரிக்கையாளர்கள் விளங்கிக் கொள்ள கூடியதாகவும், தங்களின் பிரச்சினைகளை தெளிவுபடுத்தகூடியதாகவும் இந்நடைமுறை அமையவேண்டும் என அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை புகலிடக்கோரிக்கையாளர்களை நடுக்கடலில் விசாரணை செய்வது சர்வதேச சட்டங்களுக்கு முரணாணது எனவும்,
புகலிடக் கோரிக்கையாளர்கள் கேள்விகள் கேட்பதற்கும், சட்டத்தரணிகளை வைத்து வாதாடுவதற்கும் உரிமையுள்ளது எனவும் அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் பாலா விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRUSUnq4J.html

Geen opmerkingen:

Een reactie posten