தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 februari 2015

13 இற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்க இந்தியா வலியுறுத்தவில்லை: ராஜித

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கவும்: சுரேஷ்
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015, 07:18.07 AM GMT ]
யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சாட்சி, மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு சட்டம் குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் தற்போது யுத்தம் நிறைவடைந்த போதிலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்படுபவர்கள் விசாரணைகள் எதுவுமின்றி நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கு வழிவகுக்கப்படுகின்றது.
நடைமுறையிலுள்ள புதிய அரசாங்கத்தின் கீழ் இந்நிலைமை மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRUSUnq4A.html

இலங்கை தமிழர் மீது தாக்குதல்கள் தொடர்பில் முழுவிசாரணை தேவை!- இந்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸக்கட்சி
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015, 12:58.30 AM GMT ]
இலங்கை தமிழர் மீதான கணக்கிலடங்காத தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீனமான உயர்தரத்தைகொண்ட விசாரணையை நடத்தவேண்டும் என்ற இந்திய மாக்ஸிஸ்ட் கம்யூனிஸக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது
2009ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையின் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டனர்
இந்தநிலையி;ல் இந்திய அரசாங்கம்ää தமிழர்கள் நலன் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் கட்சி வலியுறுத்தியுள்ளது
இதனைத்தவிர. வடக்கு, கிழக்கு இராணுவம் சூன்யமாக்கப்படவேண்டும். 13வது அரசியல் அமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் கட்சி கோரியுள்ளது.
மாகஸிஸ்ட் கம்யூனிஸக்கட்சியின் பிராந்திய மாநாடு நேற்று சென்னையில் இடம்பெற்ற போது இதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
http://www.tamilwin.com/show-RUmtyCRUSUnq2C.html

ஐ.நா. மனிதஉரிமை ஆணைக்குழுவுக்கு இலங்கை உறுதியளித்ததா?- எதிர்க்கட்சித் தலைவர்
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015, 12:03.32 AM GMT ]
இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நியாயத்தை நிலைநாட்டுவதற்கான முறைமையொன்றை இலங்கை அரசாங்கம் தயாரிக்க இருப்பதாக அரசாங்கம் ஐ.நா மனித உரிமை குழுவுக்கு உறுதியளித்துள்ளதா என பாராளுமன்றத்துக்கு அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்திடம் நேற்று கோரிக்கை விடுத்தார்.
23/3 நிலையியற் கட்டளையின் கீழ் அவர் எழுப்பிய கேள்விக்கான பதிலை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று பாராளுமன்றத்தில் வழங்கப்பட இருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட இருந்த விசாரணை அறிக்கையை இம்முறை சமர்ப்பிக்காமல் செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அறிவித்துள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கோரிக்கையை அடுத்தே விசாரணை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் பிரதானிக்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அனுப்பிய கடிதத்தில் அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தின் போது மனித உரிமை துறையில் பல்வேறு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்வதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுத் தொடர்பில் நியாயத்தை நிலைநாட்டுவதாக இதில் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வடமாகாணசபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
ஐ.நா. விசாரணை அறிக்கை பின்போடப்பட்டது உகந்ததல்ல என பல தமிழ் டயஸ்போரா அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை செப்டம்பர் வரை ஒத்திவைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்ததா?
யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் நியாயத்தை நிலைநாட்டும் முறையொன்றை இலங்கை அரசாங்கம் தயாரிக்கும் என அரசாங்கம் ஐ.நா மனித உரிமை குழு தலைவருக்கு கடிதம் மூலமோ வேறு பேச்சுவார்த்தைகளின் போதோ உறுதியளித்துள்ளதா?
வடமாகாணசபையின் தீர்மானம் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரும் முயற்சியையும் தோற்கடிக்க தேசிய மட்டம் சர்வதேச மட்டத்தில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கை எடுக்க இருக்கிறது.
ஐ.நா மனித உரிமை அமைப்பின் முன்பாக இலங்கையை பாதுகாக்க எத்தகைய நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என இந்த சபைக்கு அறிவிக்குமாறும் கோருகிறோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRUSUnq1G.html

திருமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 பேருக்கு நடந்தது என்ன? சுரேஸ் எம்.பி. கேள்வி
[ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 11:46.54 PM GMT ]
திருகோணமலை கடற்படை முகாமில் கோத்தபாயவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 பேருக்கும் என்ன நடந்தது என்பதை புதிய அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த முகாமில் 35 குடும்பங்கள் வெளி உலகத்துடன் எந்தவிதமான தொடர்பும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 பேருக்கு என்ன நடந்தது என்பது மர்மமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
வெளி உலகத்துடன் எதுவித தொடர்பும் இன்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையானது மிகவும் மோசமான விடயம் எனச் சுட்டிக்காட்டிய அவர் இது கோத்தபாயவின் முகாம் என அறியப்பட்டிருந்ததாகவும் இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் புதிய அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நல்லாட்சியைக் கொண்டு வருவதற்கு தமிழ் மக்களும் பங்காற்றினார்கள் என்ற வகையில் இந்த முகாமில் இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறிந்து கொள்ளும் உரிமை தமிழ் மக்களுக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு இதுவரை நடத்திய விசாரணைகள் தொடர்பில் இடைக்கால அறிக்கையொன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்தார்.
குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் காலத்தை புதிய அரசாங்கம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது. இந்த ஆணைக்குழு சுமார் 2 வருடங்களாக விசாரணைகளை நடத்தியுள்ளது. இதுவரை நடத்திய விசாரணைகள் எந்தளவில் உள்ளன என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். எனவே குறித்த ஆணைக்குழு இடைக்கால அறிக்கையொன்றை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான காணாமல் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக ஆணைக்குழு கூறியிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை முகாமில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக பொதுமக்கள் பாதுகாப்பு, கிறிஸ்தவ விவகார மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSdSUnq1F.html

13 இற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு வழங்க இந்தியா வலியுறுத்தவில்லை: ராஜித
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015, 07:19.19 AM GMT ]
இந்திய அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காணுமாறு வலியுறுத்தவில்லை என  ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அத்தகைய எந்தவொரு கோரிக்கையையும் இந்தியா விடுக்கவில்லை. இனப் பிரச்சினைக்கு, அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வினை எட்டுவது தொடர்பாக,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய அரசாங்கத்திடம் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஒற்றையாட்சிக்குள் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்வதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அணுகுமுறைகள் தான் தோல்விக்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmtyCRUSUnq4B.html


Geen opmerkingen:

Een reactie posten