தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

முல்லைத்தீவு இளைஞன் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்கவில் கைது

அனுர, ஹதுன்நெத்தியிற்கு அலரி மாளிகையில் இரண்டு அறைகள் ஒதுக்கீடு
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 05:02.23 AM GMT ]
மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் சுனில் ஹதுன்நெத்தியிற்கு அலரி மாளிகையில் இரண்டு அலுவலக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இருதரப்பினரும் இணைந்து பல வேலைகளை குறித்த அறையில் செய்வதாக மேல் மட்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுத்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் அங்குள்ள மேல் மட்ட தலைவர் ஒருவரிடம் விசாரனை நடத்தப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

காவல்துறை சுயாதீனமாக செயற்பட வேண்டும்: ஜனாதிபதி - ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் தேவை: ஜனாதிபதி
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 05:22.27 AM GMT ]
காவல்துறை சேவையை பக்கச்சார்பற்றதும், சுயாதீனமானதுமான சேவையாக இயங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சட்டத்தை அமுலாக்கும் போது, அரசியல் அழுத்தங்களுக்கு இடம்கொடுக்க கூடாது என்று அவர் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி நேற்று காவல்துறை சிரேஷ்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுயாதீனமாக செயற்படுவதன் மூலம் காவல் துறையினரின் கௌரவம் பேணப்படும். சாதாரண மக்களிடம் காவல்துறையினர் இராணுவத்தை போல நடந்துகொள்ள கூடாது என்றும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு இடையில் சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியில் இருக்கும் நிறைவேற்று அதிகாரங்களை குறைத்து பாராளுமன்றத்தை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த காலம் தேவை - ஜனாதிபதி
நாட்டில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த காலம் தேவைப்படுவதாகவும் தாம் ஒரு மாதத்திற்கு முன்னரே பதவியேற்றதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இலங்கை, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தனது அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை தொடர்பில் அக்கறை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் வாழும் மக்கள் மத்தியில் இருக்கும் சந்தேகம் மற்றும் நம்பிக்கையின்மையை களைய வேண்டும் எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். வடக்கில் படையினர் கைப்பற்றியுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற தமிழர்களின் நீண்டகால கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 1000 ஏக்கர் நிலத்தை மீள கையளித்து, அவர்களின் கோரிக்கை நிறைவேற்ற ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 அதேவேளை கொழும்பில் ராஜதந்திரிகளிடம் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் நம்பிக்கையான உத்தேச உள்நாட்டு விசாரணையில் எவரேனும் குற்றம் செய்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு இளைஞன் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்கவில் கைது
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 05:44.57 AM GMT ]
டுபாய் ஊடாக இத்தாலிக்குச் செல்லவிருந்த முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை கைதான நபர் கடந்த 11ஆம் திகதி இத்தாலிக்குச் செல்லும் நோக்கில் டுபாய் சென்றிருந்த போது அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார்.
நாடு திரும்பியவுடன் அவர் ஸ்ரீலங்கா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.
ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து கைது செய்யப்படும் ஐந்தாவது ஈழத்தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதேபோன்று மட்டக்களப்பைச் சேர்ந்த இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து தற்போதும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரும், ஜேர்மனை வசிப்பிடமாகவும், வடமாகாணத்தைப் பூர்விகமாகவும் கொண்ட மற்றொருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஐவர் மீதும் போலி ஆவணங்கள் சமர்ப்பித்தமை மற்றும் தயாரித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களே சுமத்தப்பட்டுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfsz.html

Geen opmerkingen:

Een reactie posten