தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 14 februari 2015

மைத்திரி ஆட்சியிலும் இந்து ஆலயங்கள் உடைப்பு தொடர்கின்றது: கலையரசன் விசனம்

இலங்கைக்கு செல்லும் திட்டம் தற்போது இல்லை: அமெரிக்க இராஜாங்கப் பேச்சாளர்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 03:45.41 AM GMT ]
அமெரிக்க இராஜாங்கச் செயலரை ஜோன் கெரி இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பாக எவ்வித திட்டமும் தற்போது இல்லையென தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பசாகி இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலரை ஜோன் கெரியைச் சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலரின் பயணத் திட்டம் தொடர்பான எந்த தகவலும் கைவசம் இல்லை.
அவர் பொருத்தமான நேரத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வார்.
இந்த அழைப்பை இராஜாங்கச்செயலர் நிச்சயமாக விரும்புவார் என்று தெரியும். எனவே, அவரது பயணத் திட்டம் குறித்து எதிர்பார்க்கிறோம் எனக் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfr1.html

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய நிர்வாக குழு கூட்டம் இன்று
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 03:52.35 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய நிர்வாக குழு தீர்மானங்கள் தொடர்பான கலந்துரையாடலுக்காக இன்று கூடுகிறது.
இக்கலந்துரையாடலில் புதிய நிர்வாகிகள், அமைப்புகள் நியமிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியலமைப்புகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்படவுள்ளது, இன்று மாலை ஊடக சந்திப்பொன்றும் இடம் பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிறப்பு செய்திகள் பலவற்றினை ஊடக சந்திப்பின் மூலம் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகாரிகள் அமைப்பு நேற்று கூடியுள்ளது.

அரசியல் மாற்றங்கள் காலத்திற்கு ஏற்றவாறு நிகழலாம் இளைஞர்கள் மனம் தளரக்கூடாது: கி.சேயோன்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 04:23.14 AM GMT ]
அரசியல் மாற்றங்கள் காலத்திற்கு ஏற்றவாறு நிகழலாம் ஆனால் தமிழர்களின் தாகம் ஒன்றுதான் அது நிச்சயம் என்றோ ஒருநாள் நிறைவேறும் மாறாக தற்காலிகமான மாற்றங்களை நினைத்து தமிழ்மக்களும் குறிப்பாக இளைஞர்கள் மனம் தளரக்கூடாது என மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞரணித்தலைவர் கி.சேயோன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை இன்று தனது அலுவலகத்தில் சந்தித்து இன்றைய அரசியல் களநிலவரங்கள் பற்றி கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துரைக்கையில்,
இன்றைய காலச்சூழ்நிலை பற்றி அனைவரும் புரிந்து கொண்டு செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும் இணைந்த வடகிழக்கில் ஒரு சுதந்திரமானதும், கௌரவமானதுமான ஒரு தீர்வே ஒட்டுமொத்த தமிழ்மக்களினதும் கட்சியினதும் நிலைப்பாடாகும்.
இதனை யாராலும் மாற்றமுடியாது ஆனால் இன்றைய சூழலில் தற்காலிகமான சில அரசியல் மாற்றங்களை நினைத்து மனம் தளராமல் எமது கடமையை சரியாக செய்கின்றபோது இளைஞர்களாகிய நாங்கள் தமிழ் சமூகத்தையும் ஆகுதியாகிய எமது உறவுகளையும் மனதில் நினைத்து நீதிக்கு பங்கமில்லாமல் கடமையுணர்வாக செயற்படுகின்றபோது எமது அடிப்படை தளத்தை மாற்றமுடியாது.
இன்று தமிழ்மக்கள் மத்தியில் இருந்து பல வல்லூறுகளை புதிய ஆட்சிமாற்றத்தின் மூலம் அகற்றி இருக்கின்றோம் இதனைத்தீர்மானித்தவர்கள் வடகிழக்கு மக்களே இனிவரும் காலங்களிலும் நடைபெறும் தேர்தல்கள் மூலம் பல வல்லூறுகளை வீட்டுக்கு அனுப்ப தயாராக இருக்கின்றார்கள்.
அரசியல் என்பது தமிழர்களை பொறுத்தவரையில் ஒரு பலமான ஆயுதமாக இருந்து வருகின்றது அந்த பலமான ஆயுதத்தினை மேலும் பலப்படுத்த தமிழ்மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் வாக்களிப்பு வீதத்தினை அதிகரிக்கச்செய்யவேண்டும் அப்போது எமது பலம் உலகலாவிய ரீதியில் வெளிக்கொணரப்படும்.
எமது இனத்தின் விடுதலைக்காகவேண்டி எமது வாக்குப்பலத்தினை பயன்படுத்த வேண்டியது இளைஞர்களாகிய நாம் ஒவ்வொருவருடைய கடமையும் பொறுப்புமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் இலங்கை தமிழரசிக்கட்சியின் இளைஞரணி சிறப்பாக செயற்பட்டு வருகின்றது மேலும் தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் இணைந்து கொண்டு செயலாற்ற முன்வரவேண்டும்.
அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் இந்தமுடிவு அனைவராலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தனிப்பட்ட எமக்காக அன்றி எமது இனத்தின் விடிவிற்காக பல தடைகளை தாண்டி வேலைசெய்யவேண்டிய நேரத்தில் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டு எமது தாகத்தினை வெளிப்படுத்தி வெற்றி காணவேண்டும் இது அரசியல் கட்சியல்ல இதனை ஒரு விடுதலை இயக்கமாகத்தான் நான் பார்க்கிறேன்.
பல உயரிய உத்தமர்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்டதொன்றுதான் இந்த இளைஞரணியாகும். ஒரு இனத்தினுடைய விடுதலைக்கு இழக்கவேண்டியதற்கு மேல் இழந்த ஒரு இனம் தமிழ் இனம் ஆகவே அந்த தாகத்தினை இலகுவாக மறைந்து போக விடமுடியாது “கீழே விழவிழ எழுவான் தமிழன் எழுந்தபின்னும் படைப்பான் வரலாறு” இது எமது இனத்தின் தாரகமந்திரம் எனக்கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfr3.html

மைத்திரி ஆட்சியிலும் இந்து ஆலயங்கள் உடைப்பு தொடர்கின்றது: கலையரசன் விசனம்
[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2015, 04:55.17 AM GMT ]
சேனைக்குடியிருப்பில் உள்ள காமாச்சி அம்மன் ஆலயத்தில் நேற்று இரவு கொள்ளைச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஆலய நிருவாகத்தினர் கல்முனை பொலிசில் முறைப்பாடொன்றினை பதிவுசெய்துள்ளனர் என ஆலய செயலாளர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்துக்கூறுகையில் நேற்று இரவு வெள்ளிக்கிழமை மாலை அம்மனுக்கு பூசை வழிபாடுகளை நடத்திவிட்டு ஆலயத்தினை ஆலய பிரதம குரு பூட்டிவிட்டு சென்றதாகவும் பின்னர் காலையில் ஆலய கதவு அனைத்தும் உடைக்கப்பட்டு அம்மனுக்கு போடப்பட்டிருந்த மாலையும் சிறிய காப்பு அணிகலன்களும் உண்டியலும் களவாடப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக பொலிசில் முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
ஆலயத்தில் நிகழ்ந்த களவு தொடர்பான செய்தியை கேள்வியுற்ற கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் இவ்விடத்திற்கு விரைந்து அனைத்தையும் பார்வையிட்டதுடன் தனது கருத்தையும் தெரிவித்தார்.
இவர் அங்கு கருத்துரைக்கையில் இந்தநாட்டிலே மிகவும் மோசமான செயற்பாடாக இருந்து வரும் ஒரு செயற்பாடு. ஆலயங்ளை உடைத்து அதற்கு சேதங்களை விளைவித்து இனமுறுகல்களை ஏற்படுத்துவதற்கு செய்யும் நடவடிக்கையாகவே இதனை பார்க்கவேண்டி இருக்கின்றது.
மகிந்த அரசாங்கத்தில்தான் ஆலயங்கள் உடைக்கப்பட்டன என்று பார்த்தால் தற்போது புதிதாக பதவியேற்றிருக்கும் மைத்திரி அரசாங்கத்திலும் இச்செயற்பாடு தொடர்ந்து செல்வது ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
இந்தச்செயல்களை செய்பவர்கள் யார் என்பதனை உரியவர்கள் உரிய விசாரணைகளை மேற்கொண்டு தண்டனைகளை பெற்றுக்கொடுக்கும் வரை இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் எனவே பொலிசார் இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு உரியர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டியது அவர்களது கடமையாகும்.
சட்டம் இதனை கண்டும் காணாமலும் விடுவோமாக இருந்தால் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையே பாரிய இனவிரிசலை ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSYKdfr5.html

Geen opmerkingen:

Een reactie posten