தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 februari 2015

மகிந்த தனது பயணங்களுக்காக பிரத்தியேக விமானத்தை கொள்வனவு செய்யவிருந்த தகவல் அம்பலம்!

வரவு செலவு திட்ட நிவாரணம் தேர்தலுக்காக போடும் குண்டு அல்ல: நந்தமித்ர ஏக்கநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 08:05.42 AM GMT ]
வரவு செலவு திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தேர்தலுக்காக போடும் குண்டு அல்ல என கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலுக்கு பின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் என சில கட்சிகள் பிரச்சாரம் செய்வதில் எவ்வித உண்மையும் இல்லை என அவர்  தெரிவித்துள்ளார்.
 நேற்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர், இந்த கருத்தினை தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcev1.html
மகிந்த தனது பயணங்களுக்காக பிரத்தியேக விமானத்தை கொள்வனவு செய்யவிருந்த தகவல் அம்பலம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 08:23.54 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்த போது ஜனாதிபதி மாத்திரம் பயணம் மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விமானம் ஒன்று இறக்குமதி செய்யப்படவிருந்தமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
எனினும் அந்த விமானம் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
208 கோடி ரூபா பெறுமதியான இந்த விமானம் ஜனாதிபதியின் பயணத்திற்காக இறக்குமதி செய்யப்படவிருந்தது. ஜனாதிபதியின் பயணங்களுக்காக விமானப்படைக்கு சொந்தமான விமானம் இருக்கும் நிலையில், பிரத்தியேகமாக இந்த விமானம் கொள்வனவு செய்யப்படவிருந்தது.
முன்னைய அரசாங்கத்தில் ராஜபக்ச குடும்பத்தினர், விமானங்களை பயன்படுத்துவது தொடர்பில் பரவலாக பேசப்பட்டது வந்தது. மக்களின் பணத்தை வீண் விரயம் செய்து நஷ்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை நடத்தியமை, குதிரை ஓட்ட செல்வதற்காக விமானத்தை பயன்படுத்தியமை, யோஷித்த ராஜபக்ஷவின் பொறுப்பில் இருந்து இலகு ரக விமானம் கண்டுப்பிடிக்கப்பட்டமை, சஜின்வாஸ் குணவர்தன விமானிகளுக்கு பயிற்சி வழங்கும் நிறுவனம் ஒன்றை நடத்தியமை, ராஜபக்ஷ குடும்பத்தினர் தமது பயணங்களுக்காக தனித்தனியாக விமானங்களை பயன்படுத்தியமை, மகிந்த ராஜபக்ச பயணங்களை மேற்கொள்ளும் போது இரண்டு விமானங்கள் செல்வது போன்ற விடயங்கள் தேர்தல் மேடைகளில் மாத்திரமல்லது ஊடகங்களிலும் பேசப்பட்டது.
இதனை தவிர கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, விமல் வீரவன்ஸ ஆகியோர் விமானப்படைக்கு சொந்தமான விமானங்களை பயன்படுத்தியதுடன் அதற்காக விமானப்படைக்கு 8 கோடி ரூபாவுக்கும் மேல் செலுத்த வேண்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcev2.html

Geen opmerkingen:

Een reactie posten