தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 februari 2015

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கான தடையை மைத்திரி அரசும் நீடிப்பு

வவுனியாவை விட்டு வெளியேற மாட்டோம்: இடம்பெயர்ந்த மக்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 08:32.45 AM GMT ]
கடந்த 09 வருடங்களாக யுத்த காலகட்டத்தில் வவுனியா, சிதம்பரபுரம் மற்றும் பூந்தோட்டம் முகாம்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களை சந்திக்க வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரன் சென்றிருந்தார்.
முல்லைத்தீவு பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் பிறப்பிடத்திற்கு செல்ல முடியாது என தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் தொழில் மற்றும் பிற வசதிகள் கிடைத்திருப்பதனால் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல முடியாதென தெரிவிக்கின்றனர்.
200ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் முகாம்களில் தங்கியிருப்பதாகவும் மேலும் அரசாங்கத்திடம் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையான இடம் மற்றும் வீடு வசதிகளை பெற்று தருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcev3.html
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கான தடையை மைத்திரி அரசும் நீடிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 09:10.30 AM GMT ]
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு கடந்த அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தும் நீடிக்கப்படுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு, புலம் பெயர் அமைப்புக்களுக்கு மகிந்த அரசாங்கம் தடை விதித்திருந்தது.
அந்த தடையை தொடர்ந்தும் நீடிப்பதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்று வாரப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோது பிரதி வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் மீண்டும் தலைதூக்காதிருக்கும் வகையில் இந்தத் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தழிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை உட்பட 15 அமைப்புக்களுக்கும், தனி நபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcev4.html

Geen opmerkingen:

Een reactie posten