[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 07:38.47 AM GMT ]
ஹொட்டல் உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பது குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோதுமை மா, சீனி, பால் மா உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதனால், இந்த விலை குறைப்பின் நன்மைகளை நுகர்வோருக்கு வழங்க ஹொட்டல் உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
தேனீர், அப்பம், கொத்து, சாப்பாடு வகைகளின் விலைகளை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ஒரு பார்சல் சோற்றின் விலை 10 ரூபாவினாலும், கொத்தின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அகில இலங்கை ஹொட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் அசேல சம்பத் உறுதி செய்துள்ளார்.
இதேவேளை, பேக்கரி உற்பத்தி வகைகளின் விலைகளும் குறைக்கப்பட உள்ளன.
பான் தவிர்ந்த ஏனைய உற்பத்திகளின் விலைகள் ஒரு ரூபாவினால் நாளை முதல் குறைக்கப்பட உள்ளது.
பாண் விலை குறைப்பது சர்வதேச சதி - தேசிய சுதந்திர முன்னணி
தற்போதைய அரசாங்கம் பாண் விலை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது சர்வதேச சதிகளில் ஒன்றாகும் என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் பியசிரி விஜேநாயக்க இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
கோதுமை மா விலை குறைக்கப்படுவதன் நிவாரணம் அமெரிக்கா விவசாயிகளுக்கே என தெரிவித்தாரர்.
இந்நாட்டில் அரிசி விற்பனை செய்ய முடியாமல் இறுதியில் விலங்குகளின் உணவு என வெளிநாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcevy.html
கமலேஷ் ஷர்மா வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 07:51.31 AM GMT ]
நேற்று மாலை குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போதைய அரசாங்கத்தின் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சருக்கு பொதுநலவாய நாடுகளின் செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர், இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் ஜனாதிபதி, பிரதமர், உட்பட அரசாங்கத்தின் தற்போதைய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcevz.html
மைத்திரியின் 2015ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜட்டும்: மக்களின் வாழ்க்கை சுமை குறைவும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 07:57.07 AM GMT ]
அந்தவகையில் தன்னுடைய ஆட்சியில் ஜனவரி 29ஆம்நாள் கூடுதலான நிவாரணம் வழங்கக்கூடிய மக்கள் வாழ்வை நோக்கிய விசேட இடைக்கால வரவு செலவு திட்டத்தை பராளுமன்றில் சமர்ப்பித்து அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி மற்றும் கொடுப்பனவுகளை குறைத்து சம்பள உயர்வை அதிகரித்தல் என்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த நிலையை கடந்த 29ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவந்ததன் அடிப்படையில் தன்னுடைய நூறுநாள் திட்டத்தில் கூறியபடி செயற்பட்டு வருகின்ற புதிய அரசை மக்கள் கண்ணியத்துடன் பார்க்கின்றனர்.
அந்தவகையில் புதிய அரசினால் வெளியிடப்பட்ட இன்றைய இடைக்கால வரவு செலவுத் திட்டமானது சகல மக்களுக்கும் உதவும் வகையில் அமைந்த தரமானதொரு வரவு செலவுத் திட்டமாகவே இதனை மக்கள் நோக்குகின்றனர்.
தற்போதைய புதிய அரசாங்கம் அனைத்து மக்களுக்கு எந்தவொரு பாகுபாடுமின்றி அனைவருக்கும் உதவும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்து தரமானதோர் பட்ஜட்டினை வழங்கியிருக்கின்றது என்கின்றனர் பொருளியல் அறிஞர்கள். அதாவது இந்த பஜட் அனைத்து வர்க்க ரீதியான மக்களுக்கும் உதவுகின்றது. இதன்காரணமாக தமது எண்ணற்ற மகிழ்ச்சியை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
நகரம், கிராமம், தொழிலாளர், வேலையற்றோர், மாணவர்கள், விவசாயிகள், என நாட்டின் அனைத்து சமூகத்தினரையும் கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் தயாரிக்கபட்ட முதலாவது பட்ஜட் இதுவாகும்.
தற்போதைய புதிய அரசாங்கமானது அனைத்து மக்களினதும் தேவையினை உணர்ந்து, எந்தவொரு மக்களினதும் பாகுபாடுமின்றி அனைவருக்கும் உதவும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு, தரமானதோர் பட்ஜட்டினை வழங்கியுள்ளது புதிய அரசாங்கம்.
இதன் மூலம் அனைத்து மக்களும் தமது எண்ணற்ற மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். நகரம், கிராமம், தொழிலாளர், வேலையற்றோர், மாணவர்கள், விவசாயிகள், என நாட்டின் அனைத்து சமூகத்தினரையும் கருத்திற் கொண்டு அரசாங்கத்தினால் தயாரிக்கபட்ட முதலாவது பட்ஜட் இதுவாகும்.
இவ்வாறு பார்க்கின்றபோது இந்நாட்டில் கடந்தகாலத்தில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்திருந்தபோதிலும் கோடிக்கணக்கான பணம் மேலதிக பாதுகாப்பு எனும் பெயரில் செலவாக்கப்பட்டு வந்ததையும், ஆடம்பரமிக்க ஆட்சியாளர்களின் உருவாக்கம், அதிகதொகை கொண்ட அமைச்சர்களின் செலவீனங்கள் காரணமாக மக்களின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துக் கொண்டே சென்றதை மக்கள் இன்றைய அரசில் நினைத்துப் பார்க்கின்றனர்.
விடேசமாக 2015ம் ஆண்டினது வரவுசெலவு திட்டத்தினை ஒரே பார்வையில் பார்க்கின்றபோது, அரச ஊழியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சம்பள அதிகரிப்பு முதன்மை பெற்றுள்ளமை நாட்டில் சுமார் 16இலட்சத்திற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களும், அவர்களது குடும்பத்தினரும் இந்த சம்பள அதிகரிப்பினால் பயனடைகின்றனர்.
அதாவது அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் 10.000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பெப்ரவரியில் 5000ரூபாவும், மீதியை எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து வழங்குவதாகவும் அறிவித்திருந்தது அரசு.
இதற்கமைய அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் இவ்வாண்டு 47 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாக்கப்பட்டு வந்திருக்கின்றனர்.
அதிகரித்த வாழ்க்கைச் செலவினை சமாளிக்க வங்கிகளில் கடன்படவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் அரச ஊழியர்கள் தள்ளப்பட்டிருந்தனர். கௌரவமான முறையில் வாழவேண்டிய அரச ஊழியர்கள் மாதச் சம்பளத்தை ஒரு பகுதிநேரத் தொழிலாகவே பார்க்க முற்பட்டனர்.
அரச ஊழியர்கள் தங்களுடைய தொழில் தேர்ச்சியினை பிரயோகிப்பதற்குரிய மனநிலையினை அதிகரித்த சம்பளம் ஈடுசெய்யும். இதன் காரணமாக பகுதிநேரத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வந்த அரச உத்தியோகம் முழுமை பெற்ற உத்தியோகமாக மாற்றங்காணப்படும். வினைத்திறன் கொண்ட அரச சேவையாளர்களாக மாற்றம் காண்வர்.
இது மக்களுக்கும், நாட்டுக்கும், அரசசேவைக்கும் நல்ல பலனைக் கொடுக்கும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை என்கிற கருத்தினை அரச உத்தியோகத்தர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டுகளில் சம்பளம் அதிகரிப்பு போதுமானதாக இல்லை. விலையேற்றம், அன்றாட வாழ்வாதாரத்திற்கே மாதாந்தம் பெறுகின்ற சம்பளம் ஓரிரு தினங்களில் காணாமல் போகின்ற நிலையில் இன்று புதிய அதிகரித்த சம்பளம், அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பு மக்களின் மனங்களில் குறிப்பாக அரச உத்தியோகத்தர்களின் மனங்களிலும் பால் வார்த்ததைப் காணமுடிகின்றது.
அத்துடன் மக்கள் தங்கள் தேவைகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் பொருட்களான மாசிக்கருவாடு, கொத்தமல்லி மற்றும் சீனி ஆகியவற்றின் விலையும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மக்களும் தமது மனமார்ந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.
மேலும், அனைத்து நடுத்தர வர்க்க மக்களுக்கும் உதவும் வகையில் அத்தியாவசியமான பால்மா, கோதுமை மா, பாண், சமையல் எரிவாயுக்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். இதன் மூலம் அனைத்து இல்லத்தரசிகள் மற்றும் குடும்பப் பொறுப்பானவர்கள் தமது மட்டற்ற மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர்.
மொத்தத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டம் அனைத்து மக்களுக்கும் நன்மை பயககும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது குறுகிய கால எல்லைக்குள் வறுமையற்ற சமூகமொன்றினை கட்டியெழுப்ப முடியும் என்பதை உணர்த்தியுள்ளது.
புதிய பட்ஜட். வழமைபோன்று தேர்தல் காலத்தில் ஒவ்வொரு கட்சியின் அபேட்சகர்களினால் வெளியிடப்படுகின்ற தேர்தல் விஞ்ஞாபனமானது போலித்தனமானதாவும் சிலவேளைகளில் காணப்லாம். கடந்த காலங்களில் யுத்தத்தை நிறுத்தி அதற்கு செலவாக்கப்படும் பில்லியன் கணக்கான பணம் மக்களின் வாழ்வின் சுமையைக் குறைப்பதற்கு உதவ பயன்படுத்தப்படும் என்று கூறி வந்தனர்.
ஆனால் யுத்தம் முடிவுற்ற நிலையில் அந்த நிலைமை மாற்றம் காணவில்லை. உண்மையில் புரையோடிப்போன சுமார் முப்பதுவருடகால உள்நாட்டு யுத்தம் மக்களை வாட்டிப்புறட்டி எடுத்திருந்தமை அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.
குறிப்பாக அரச ஊழியர்கள் தங்களுடைய உணர்வலைகளை கடந்த தேர்தலில் தபால் வாக்கின் ஊடாக சமிக்ஞையை வழங்கியிருந்தனர். அதிகமானோர் மாற்றம் காணப்படுவதையே விரும்பியிருந்தனர். இதன் காரணமாக இன்றைய அரசின் போக்குகள், அவர்களது நூறுநாள் வேலைத்திட்டம் உரிய முறையில் கொண்டுசெல்லப்படுகின்றன.
அதனைத்தான் மக்களும் எதிர்பார்க்கின்றனர். அநியாயமான, ஆடம்பரச் செலவுகள் குறைந்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுகின்றபோது பணம் சேமிக்கப்பட்டு மக்கள் பொருளாதாரத்தில் உன்னத நிலையினை அடைந்து கொள்வதற்கு வழிபிறக்கின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான புதிய அரசினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத்திட்டமானது இலங்கைவாழ் மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையில் அமைந்திருந்தாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மக்கள் பட்ஜட் ஆக கருத முடியுமென ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். என்றுமில்லாதவாறு சாதாரண மக்களுக்கும் சலுகை பலவற்றை வழங்கிய இந்த வரவு செலவு திட்டம் வரலாற்றில் பதியப்படுகின்ற ஒரு முக்கிய இடைக்கால வரவு செலவு திட்டம் எனவும் கூறப்படுகின்றது.
வழமையாக இவ்வாறு இடைக்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வரவு செலவுத் திட்டமானது பொதுமக்கள் மீது சுமைகளை ஏற்படுத்தியே வந்துள்ள நிலையில், அவற்றுக்கெல்லாம் முற்றிலும் மாற்றமாக இலங்கையின் வரலாற்றில் அனைத்து தரப்பினர்களினதும் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகுமென பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருந்தபோதும் மலையக மக்களுக்கு இந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கப்பெவில்லை என அந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர் அதிலும் குறிப்பாக அவர்களுடைய சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு வெற்றிபெற்றபோது மக்கள் பால்சோறு சமைத்தும், குளிர்பானங்கள் வழங்கியும் மகிழ்வை பகிர்ந்து கொண்டனர். இது மக்களின் உணர்வலைகள் நாட்டில் நல்லாட்சிக்கான அத்திவாரத்தினை இட்டமைக்கான மகிழ்வாகவே மக்கள் உணர்கின்றனர்.
இந்த நிலை நாட்டில் தொடர்ந்தும் நல்லாட்சி நடைபெற்று, மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும், நாட்டின் பொருளாதாரம் உயர்வு பெற்று காணவேண்டும். மதரீதியான பிளவுகள் அற்ற நாட்டைக் கனவுகாண்கின்ற மக்கள் உதயமாகியுள்ளனர்.
இதற்கு அரசியல் அந்தஸ்து வழங்கப்பட்டு நியாயமான முறையில் அரசு தம்மக்களை பார்க்க முற்படுமானால் மக்களும் தன் உணர்வலைகளை காண்பிப்பார்கள். மக்களின் மனங்களை வெல்லவேண்டிய கடப்பாடு அரசியல்வாதிகளிடமே உண்டு.
அதனை சரியான முறையில் கையாண்டுள்ள மைத்திரி அரசின் சமிக்ஞையாக இந்த வரவு செலவு திட்டம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. கடந்த கால ஆட்சி காலத்தில் நாட்டில் இடம்பெற்ற ஊழல்கள், முறைகேடுகள், துஷ்பிரயோகம், வீண்விரயம் என்பன தற்சமயம் படிப்படியாக வெளிவர ஆரம்பித்துள்ளன.
ஆடம்பரத்தை விரும்பாத தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சி காலம் நல்லாட்சியாக மிளிர வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிப்பிரமாணத்துக்குச் செலவிட்ட தொகை வெறும் ஆறாயிரம் ரூபா தான் என தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
ஆனால் கடந்த கால ஆட்சியின் போது ஜனாதிபதியின் செலவுக்காக வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கிய தொகை 10,497கோடி ரூபாவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை ஜனாதிபதி செலவுக்கான ஒதுக்கப்பட்ட தொகை 209 கோடி ரூபா தான் என்பதை நோக்கும் போது கடந்த ஆட்சியாளர் எவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகின்றது.
அதுமாத்திரமல்ல அவருடன் இருந்தவர்கள் செய்த செய்த செலவுகளும் சொல்லிலடங்காதவை. இந்த செலவுகள் எல்லாம் பொது மக்களின் வரிப்பணமேயாகும். எனவே இந்த வீண்விரயங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டு இவ்வாறு செலவான கோடிக்கான பணமும் மக்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தீச்சுடர்
http://www.tamilwin.com/show-RUmtyCTVKcev0.html
Geen opmerkingen:
Een reactie posten