தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 februari 2015

என்ன நடக்கிறது? கோதாபாய ராஜபக்ஷவுக்கு ஆப்பு தொலைவிலா ? வெகு விரைவிலா ?

கடந்த தேர்தலில் அதிர்ச்சி தோல்வி அடைந்த மகிந்த குடும்பம் நாளுக்கு நாள் பெரும்ஊழல் குற்றச்சாற்றினை முகம் கொடுத்து வருகின்றமை எமது இணையத்தளத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அறிய முடியும்.
குறிப்பாக தமிழர்களையும் முஸ்லிம்களை குறிவைத்து தாக்கிய மகிந்தவின் சகோதரர் கோதாபாய ராஜபக்ஷவுக்கு இனி மேல் என்ன நடக்க போகிறது என்பது எம் எல்லோரும் அறிய ஆவலாய் உள்ளோம். தற்போது கோதாபாய ராஜபக்ஷ மீது பல ஊழல் குற்றசாற்றுகள் போடப்பட்டு சொல்லப்போனால், கடந்த முறை மங்கள சமரவீரவினால் இராணுவா நகர்தல் குற்றசாற்று, மேர்வின் சில்வாவினால் லசந்த விக்ரம கொலைவழக்கு, JVP இனால் பல ஊழல் குற்றசாற்றுகள் இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.
இவ்வளவு குற்றசாற்று போடபட்டும் இதுவரை ஏன் ஊழவு துறையினர் அவரிடம் சென்று குறைந்தது ஒரு வாக்குமுலமாவது பெறவில்லை என்பது எல்லோருக்கும் விளங்க முடியாத புதிராக உள்ளது. மத்திய வங்கியின் ஆளுநரின் ஊழல் வெளிவந்தமையால் அவரிடம் ஊழவு துறையினர் சென்று வாக்குமூலம் பதிவு செய்தது. இது ஏன் இன்னும் கோதாபாய ராஜபக்ஷ விடயத்தில் நடைபெறவில்லை என்பதுதான் கேள்வி குறியாக உள்ளது ?
கோதாபாய ராஜபக்ஷ இலங்கையில் தான் உள்ளார் என்பது தெளிவான விடயமாக இருந்தும் ,ஏன் மைத்திரி அரசு கோதாபாய ராஜபக்ஷ விடயத்தில் சற்று மௌனியாக உள்ளது ?
சற்று சிந்திப்போம் ?
மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோற்றுவிடுவார் என்று அதிகாலை தெரியவந்தவேளை , ரணிலை தொடர்புகொண்ட கோட்டபாய அவரை அலரிமாளிகைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். மேலும் தான் எதுவும் செய்யப்போவது இல்லையென்றும் ஏதாவது ஊழல் குற்றச்சாட்டு இருப்பின் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார். அதற்கான பணத்தை தான் திருப்பித்தர தயார் என்ற சமிஞ்சைகளையும் வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதேவேளை மகிந்தரை அல்லது கோட்டபாயவை கைதுசெய்தால் சிங்கள மத்தியில் உடனடியாக ஒரு குழப்பகரமான சூழல் ஏற்படும் என்பதனை சந்திரிக்கா நன்றாக உணர்ந்து வைத்துள்ளார். இதனால் முதல் கட்டமாக ஊழல் குற்றச்சாட்டுகளை மற்றும் மோசடிகளை சுமத்துவது. பின்னர் சில காலம் கழித்து அவர்களை கைதுசெய்வது என்பது தான் தற்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் திட்டமாக உள்ளது.
இதில் இருந்து சற்று விலகினாலும் சரத் பொன்சேகா விடமாட்டார். அவரது செல்வாக்கும் கட்சிக்குள் பலமாகவே இருக்கிறது. கைதுகள் நடக்க இருக்கிறது. ஆனால் சற்று காலதாமதம் ஆகும் என்கிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/2152.html

Geen opmerkingen:

Een reactie posten